தாரா பொம்மியைச் சந்தித்தாள்.
ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்கு முன் எனது முதல் கவிதைத் தொகுப்பான 'பொம்மி'யை வெளியிட்டிருந்தேன். அது என் மூன்றாவது புத்தகம்.
பொம்மி என் மனதிற்கு ரொம்பவும் நெருக்கமான புத்தகம். பொம்மி முதல் பிரதியை யாருக்கு அனுப்பலாம் என யோசிக்கலானேன். பொம்மி கவிதைகளை நான் எழுதத்தொடங்கிய காலக்கட்டத்தில் பல்வேறு வகையில் எனக்கு பக்கபலமாகவும் பக்குவம் சொல்பவராகவும் இருந்தவருக்கு அதனை கொடுக்க முடிவு செய்தேன்.
அவ்வாறு, பொம்மியை எழுத்தாளர் ம.நவீனுக்கு அனுப்பி வைத்தேன்.
அன்றைய தினத்தில் அவரை சந்தித்து கொடுக்கும் மனநிலையிலும் உடல்நிலையிலும் நான் இல்லை. தபாலிலேயே அனுப்பி வைத்தேன். இருந்தும் எந்தச் சிக்கலுமின்றி அவரும் பொம்மியைப் பெற்றுக்கொண்டு சில வார்த்தைகள் எழுதி பகிர்ந்தார்.
அவருக்கு முதல் புத்தகத்தைக் கொடுத்ததால் அந்தப் புத்தகத்தை வாங்கமாட்டேன் என சொன்னவருக்கு நான் சொன்னது ஒன்றுதான். படைப்பையும் படைப்பாளியையும் நாம் நமது சொந்த விருப்பு வெறுப்பில் அணுகக்கூடாது. ஆனாலும் அவர் கடைசிவரை இந்தப் புத்தகத்தை வாங்கவே இல்லை என்பது வேறு விடயம்.
இன்று இந்தப் புத்தாண்டில் பொம்மிக்கு முதல் புத்தகப்பரிசாக தாரா வந்து சேர்ந்தாள். அதோடு, தாரா தன்னுள்ளே பொம்மிக்கு வாழ்த்தையும் ஆசிர்வாதத்தையும் சுமந்திருந்தாள்.
எழுத்தாளர் ம.நவீனுக்கு பொம்மியின் அன்பும் நன்றியும்...💙
(பொம்மி புத்தகமும் தாரா புத்தகமும் பச்சை வண்ணத்திலேயே அமைந்திருப்பது தற்செயலாக இருக்காது. அதிலும் ஏதாவது அமானுஷ்யம் இருக்கலாம்தான்😉)
0 comments:
கருத்துரையிடுக