சிறகுகளின் கதை நேரம் 4 - அரு.சு.ஜீவானந்தனின் 'புள்ளிகள்' பதிவு 1
நாம் விரும்பி செய்யும் செயலில் தொடர்ந்து நடக்கும் அதிசயங்களும் ஆச்சர்யங்களும் நமக்கு மேலும் உற்சாகமளிக்கும் அதுவே நமக்கு செயலூக்கமாகவும் அமையும்.
அப்படியொரு ஆச்சர்யம் இன்று நடந்தது.
இன்று, 'சிறகுகளின் கதை நேரம்' நான்காவது வாராந்திர சிறுகதைக் கலந்துரையாடல் நடைபெற்றது. இணையம் வழி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றோம்.
வருடத்தின் முதல் நாள் நிகழ்ச்சியை எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தனின் 'புள்ளிகள்' சிறுகதை கலந்துரையடலில் தொடங்கினோம்.
எதிர்ப்பாராத விதமாக இன்றைய கலந்துரையாடலில் எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தன் கலந்து கொண்டார். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய அவரின் சிறுகதையைக் குறித்து நாங்கள் பேசுவதை அவர் ஆர்வமாக கேட்டார்.
நிறைவாக சிலவற்றை பேசவும் செய்தார். விரைவில் அவரின் படைப்புகள் குறித்த ஒரு சந்திப்பு கூட்டத்தை அல்லது இன்னொரு முழுமையான உரையாடல் நிகழ்ச்சியை செய்ய திட்டமுள்ளதை பேசினேன். அவரும் சம்பதித்தார்.
இவ்வாண்டின் முதல் கலந்துரையாடலுக்கு சம்பந்தப்பட்ட எழுத்தாளரே எதிர்ப்பாராதவிதமாக கலந்து கொண்டு எங்கள் செயல்பாடுகளை வாழ்த்தியது எங்களுக்கான ஆசீர்வாதமாக பார்க்கிறோம்.
இன்றைய நிகழ்ச்சியில் பேசும் போது அரு.சு.ஜீவானந்தனின் பழைய புகைப்படங்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த புகைப்படம் குறித்து பேசினேன். அவர் சிரிக்கலானார். அவரிடமே இதனை பலமுறை சொல்லியுள்ளேன். இதனுடன் அந்தப் புகைப்படத்தையும் இணைக்கிறென்.
இன்று நடந்த சிறகுகளின் கதை நேரம் நிகழ்ச்சி குறித்த பதிவை வழக்கம் போல முழுமையாக எழுதி இந்த வாரத்தில் பகிர்கிறேன்.
அதற்கு முன்பாக எங்கள் செயல்பாட்டுக்கு கிடைத்த செயலூக்கத்தைச் சொல்வதற்காக இதனை எழுதியுள்ளேன்.
0 comments:
கருத்துரையிடுக