கதை வாசிப்பு -15 ' திருநங்கையின் மகள்'
கதை வாசிப்பு -15 ' திருநங்கையின் மகள்'
ஜூலை மாத (2016) உயிர்மையில் இந்து மேனன் எழுதிய சிறுகதையை ஸ்ரீபதி பத்மா 'திருநங்கையின் மகள்' என்று மொழிப்பெயர்த்துள்ளார்.
சீக்கிரத்தில் கதைக்குள்ளே செல்ல முடியவில்லை. கவனமாக
படிக்கவேண்டியுள்ளது. பெண்ணின் மன உணர்வில் இருந்து கதை தொடங்கி தொடங்கிய
இடத்தில் முடிகிறது. அதற்குள்ளாக ஒருத்தியில் வாழ்க்கை பதிவு
செய்யப்பட்டிருக்கிறது.
திருநங்கையால் காப்பாற்றபடும் சிறுமி எந்த நொடியில் தன்னை திருநங்கையின்
மகள் என அறிவிக்கிறாள் என்பதுதான் கதை நிறைவு பெறும் இடம். ஆனாலும் கதை
அங்கிருந்து பின் வழியாக கதையின் தொடக்கதை நோக்கி வாசகரை அழைத்து
செல்கிறது.
கதையின் நடை அவளின் மனவோட்டம் போல பிடிகொடுக்காமல் முன்னோக்கி போய்க்கொண்டே இருக்கிறது. இதுதான் கரு இதுதான் கதை என வாசகரை முடிவெடுக்க இக்கதை சிரமப்பட்டுத்துகிறது. அதுவே இக்கதையின் சுருக்கத்தை எழுத தடையாக அமைந்துள்ளது. மீண்டும் கதையை படித்தாலன்றி அது பிடிகொடுக்காது.
ஏன் அப்படி செய்தாள், எதனை அவள் நிரூபிக்க தன் உடலையே ஆயுதமாக்குகிறாள் என வாசகரை சிந்திக்க வைப்பதில் கதை தன்னை காப்பாற்ற எத்தனிக்கிறது.
- தயாஜி

0 comments:
கருத்துரையிடுக