பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 16, 2026

நாவல் வாசிப்பு 2026-1

இந்த ஆண்டு தொடங்கி வாசித்து முடித்த முதல் நாவல்,  எஸ்.ராமகிருஷ்ணனின் 'உப பாண்டவம்'.

"சூதின் முன் அமர்ந்த எவரும் சமமானவரே. அது பேதம் அறிவதில்லை. அது சாவின் முற்றம். அங்கே முன்விதிகள் எதையும் தீர்மானிப்பதில்லை."
(நாவலில் இருந்து)

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மார்ச் 15, 2026

புத்தகச்சிறகுகள் - தொடர் 5

நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 5' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான அரு.சு.ஜீவானந்தனின் சிறுகதைகள் குறித்து எழுதியுள்ளேன். 
கட்டுரையின் நிறைவு பகுதி இது.

அடுத்து வாரம் இன்னொரு மலேசிய எழுத்தாளரின் புத்தகத்தைப் பற்றிய வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன்.

இனி ஒவ்வொரு வாரமும் புத்தகங்கள் குறித்த 'புத்தகச்சிறகுகள்' எனும் எனது தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும். 

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.

வாசிப்போம்... 
நேசிப்போம்... 
வளர்வோம்...
அன்புடன் 
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மார்ச் 08, 2026

புத்தகச்சிறகுகள் - 4

நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 4' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான அரு.சு.ஜீவானந்தனின் சிறுகதைகள் குறித்து எழுதியுள்ளேன்.

கட்டுரையின் இரண்டாம் பகுதி இத்தொடரில் வெளிவந்துள்ளது.

இனி ஒவ்வொரு வாரமும் புத்தகங்கள் குறித்த 'புத்தகச்சிறகுகள்' எனும் எனது தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.

வாசிப்போம்...
நேசிப்போம்...
வளர்வோம்...

அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மார்ச் 03, 2026

- ஆகக்கடைசியாய் ஓர் அதிசயம் -

எது அதிசயம் ?
கடலை பிளந்து நடப்பதா
தூணை உடைத்து தோன்றுவதா
அசரீரியாய் அழைப்பதா

இல்லை
எதுவும் இல்லை

குழந்தைகளைச் சுடாத
துப்பாக்கிகளும்
குழந்தைகளை கொல்லாத
வெடிகுண்டுகளுமே

இவ்வுலகில்
தோன்ற வேண்டிய
ஒரேயொரு
அதிசயம்

எந்தக் கடவுளாலும்
நிகழ்த்த முடியாத
ஆகக்கடைசியான
அதிசயம்
இது ஒன்றுதான்....

#தயாஜி

- உலகின் ஓயாத ஒப்பாரி -

இவ்வளவு
சின்னச்சின்ன குழிகளைத்
தோண்டுவதற்கு
ஏன் 
இத்தனை இத்தனை
துயரை 
நாம் சுமக்க வேண்டியுள்ளது

வெடித்து சிதறியது
அவர்களின் சின்னஞ்சிறு
உடல்கள்தானே
என 
கடந்துவிடுகிறார்கள்
அதிகாரங்களை ஆள்கிறவர்கள்
 
இந்த உலகை
தன் தூய 
அன்பின் குதூகலத்தில்
பார்த்தக் குழந்தைகளின்
கனவுகள் 
எவ்வளவு பெரியது
எதுவரை பறந்தது

ஒருபோதும் 
ஓயாத இந்த ஒப்பாரிகள் 
ஏன் 
நம் காதுகளுக்கு மட்டுமே 
கேட்கிறது

#தயாஜி

- வண்ணம் மாறாத இரத்தம் -

அந்தப் 
பள்ளிக்கூட வாசலில்
ஏதோ ஒரு குழந்தையின்
புத்தகப்பை மட்டும்
தனித்திருக்கிறது
பல நாட்களாக

தனித்திருக்கும்
அந்தப் புத்தகப்பையில்
வழிந்து 
பின் காய்ந்து போயிருப்பது
 
தன் சக நண்பர்களின்  
பெயர் கூட 
இன்னும் 
முழுதாய் மனப்பாடம் ஆகாத 
குழந்தைகளின்

என்றுமே வண்ணம்
மாறாத இரத்தம்

#தயாஜி

மார்ச் 01, 2026

புத்தகச்சிறகுகள் - தொடர் 3

நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 3' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான அரு.சு.ஜீவானந்தனின் சிறுகதைகள் குறித்து எழுதியுள்ளேன். கட்டுரையின் முதற்பகுதி இத்தொடரில் வெளிவந்துள்ளது.

இனி ஒவ்வொரு வாரமும் புத்தகங்கள் குறித்த 'புத்தகச்சிறகுகள்' எனும் எனது தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.

வாசிப்போம்...
நேசிப்போம்...
வளர்வோம்...

அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்