2026-ம் ஆண்டில் நான்கில் இரண்டு (4/2)
2026-ம் ஆண்டில் நான்கில் இரண்டு (4/2)
ஒவ்வொரு மூன்று மாதங்களாக நான் வாசிக்கும் புத்தகங்களைப் பிரித்து கொள்கிறேன்; அல்லது இப்படி சொல்ல விரும்புகிறேன் நான் என் புத்தக வாசிப்பை ஒவ்வொரு மூன்று மாதங்களாக பிரித்து கொள்கிறேன். இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 16 புத்தகங்களை வாசித்திருந்தேன்.
எனது வலைப்பூவிலும் எனது சமூக ஊடகங்களிலும் அதனை பகிர்ந்திருந்தேன்.
அப்படி பகுதி பகுதியாக புத்தகங்களை பிரித்து வாசிப்பது ஒரு வகையில் நமக்கு உதவியாகத்தான் இருக்கின்றது. அதோடு மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்திலும் மாதம் ஒரு நாவல் என வாசித்து வருகின்றேன். ஒவ்வொரு முன்று மாதத்திற்கு வாசிக்க வேண்டிய புத்தகங்களைத் தனியே எடுத்து ஒரு பெட்டியில் வைத்து என் வாசிப்பு மேஜைக்கு அருகில் வைத்து கொள்வேன். புத்தகத்தை வாசித்து முடித்து அடுத்த புத்தகமாக எதை வாசிக்கலாம் என்று புத்தக அலமாரி முழுக்க தேடும் மன உளைச்சலைத் தவிர்த்துவிடுகிறேன்.
ஆனாலும் பெட்டியில் இருக்1கும் அனைத்து புத்தகங்களையும் திட்டமிட்டபடி வாசித்து முடிக்க முடியாமல் அவ் 21வப்போது சில புது புத்தகங்கள் நுழைந்து தங்களை வாசிக்க வைத்துவிடுகின்றன. அது அப்படித்தான் நடக்கும். வாசிக்க வேண்டும் என்கிற முடிவையும் அதற்கான நேரத்தை உருவாக்கினால் போதும் வாசிக்க வேண்டியவைத் தானாய் வந்து நம் காதுகளைத் தட்டும். அப்படி என் காதுகளைத் தட்டிய புத்தகங்களை எப்படியாவது வாங்கிவிடுவது என்னிடமே நான் அதிசயக்கும் ஒன்று.
இப்போது மார்ச் முதல் ஜூன் வரை வாசித்த புத்தகங்களை எழுதுகிறேன்
நாவல்கள்
17. சுமித்ரா
- கல்பற்றா நாராயணன் (தமிழாக்கம் கே.வி.ஷைலஜா)
18. அந்த மரத்தையும் மறந்தேன், மறந்தேன் நான்
- கே.ஆர்.மீரா (தமிழாக்கம் சிற்பி பாலசுப்பிரமணியம்)
19. தண்ணீர் (அசோகமித்திரன்)
20. கரிப்புத் துளிகள்
- அ.பாண்டியன் (மீள் வாசிப்பி)
கவிதைகள்
21. மரணம் முற்றுப்புள்ளி அல்ல
- கவிக்கோ அப்துல் ரகுமான்
22. குளிர்மலை
- ஹான்ஷான் (தமிழாக்கம் சசிகலா பாபு)
23. காற்றின் கைகள்
- அமுதபாரதி – ஹைக்கூ கவிதைகள்
24. மழை நின்ற வீதி
- மகேந்திரன் நவமணி – ஹைக்கூ கவிதைகள்
25. கள்ளிப்பழத்தால் தொய்யில் எழுதுவேன்
- மௌனன் யாத்ரிகா
26. காலாதீத இடைவெளியில்
- ரவிசுப்ரமணியன்
27. துந்தனா
- ஶ்ரீ ஷங்கர்
28. கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்
- மீரா
29. தொடுதிரை
- கல்பற்றா நாராயணன் (மலையாளத்தில் இருந்து தமிழுக்கு ஜெயமோகன்)
30. ஊர்க்காரி ஒருத்தியின் காதல்
- மௌனன் யாத்ரிகா
31. 360 இரவு
- கவிதைக்காரன் இளங்கோ
32. குமரகுருபரன் கவிதைகள்
- குமரகுருபரன்
33. விடாய்
- தில்லை
34. யாமக்கோடங்கி
- மதிக்குமார் தாயுமானவன்
சிறுகதைகள்/குறுங்கதைகள்
35. மில்லேனியல் அவ்வை
- அழகுநிலா, குறுங்கதைகள்
36. இருபத்தாறு ஆண்களும் ஓர் இளம்பெண்ணும்
- நெடுங்கதை
- மாக்சிம் கார்க்கி (தமிழாக்கம் ஜான்சி ராணி)
37. சின்னச் சின்ன வெளிச்சங்கள்
- வெ.இறையன்பு – குட்டிக்கதைகள்
38. சாமி மூர்த்தி சிறுகதைகள்
- சாமி மூர்த்தி
39. சங் கன்ச்சில்
- அழகுநிலா
40. வெண்மையின் நிறங்கள்
- சித்ரா ரமேஷ்
41. பேரவைக் கதைகள் 6 (1991)
கட்டுரைகள்/பிற
42. வான் கேட்கிறது
- எஸ்.ராமகிருஷ்ணன்
43. கதைகளில் ஒளிரும் வாழ்க்கை
- சுகுமாரன்
44. விதியும் தன்னம்பிக்கையும்
- ரால்ஃப் வால்டோ எமர்சன் (தமிழாக்கம் வி.ஆர்.எம்.செட்டியார், சு.நடராஜன்)
45. குழந்தைகள்
- வெ.இறையன்பு
இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஜூன் வரை 45 புத்தகங்களை வாசித்துள்ளேன். தனித்தனியாக வாசிக்கும் கவிதைகளையும் சிறுகதைகளியும் இதில் சேர்க்கவில்லை. முழுக்கவும் புத்தகங்களாக வாசித்தவற்றை மட்டுமே எழுதியுள்ளேன்.
இதிலிருந்து ஆறு மலேசிய புத்தகங்கள் குறித்தும் ஆறு சிங்கப்பூர் புத்தகங்கள் குறித்துய்ம் நடுகல்.காமிற்கு இரு மாதாந்திர தொடர்களாக எழுதியுள்ளேன். அதோடு மலேசிய நண்பன் ஞாயிறு மலரில் வாராந்திர தொடராக வாசித்த புத்தகங்கள் குறித்து எழுதி வருகின்றேன்.
இவை தவிர்த்து வாசித்த புத்தகங்கள் குறித்த சிறு வாசிப்பனுபவத்தையாவது எழுதிவிடுகிறேன்.
இனி 2026-ஆம் ஆண்டி நான்கில் மூன்றாவது பகுதிக்கு என்னென்ன புத்தகங்கள் வாசிக்க வருகின்றன என பார்ப்போம்.
அதேபோல நீங்கள் வாசித்த சிறந்த புத்தகமாக நீங்கள் நினைக்கும் புத்தகமொன்றை எனக்கு பரிந்துரைக்கவும்.
நன்றி.
அன்புடன் #தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக