- பேரிடர் -
மழையோ புயலோ பூகம்பமோ
அதன் விருப்பத்தில் வந்து
சென்ற பின்
ஒருவன்
தன் விலை உயர்ந்த காரும்
தனக்கு மட்டும் கட்டிகொண்ட
நான்கு தூண் மாளிகையும்
தீயில் கருகியதைச் சொல்லிச்சொல்லி
அழுதபடி
மீதமுள்ள காஸ்ட்லியான
வைனில் மூழ்கி தன் துக்கத்தைப்
போக்கி கொள்கிறான்
அவனது எரிந்து சாம்பலான
நான்கு தூண் மாளிகைக்குள்
தன் குடும்பம் உண்பதற்கு
ஏதும் கிடைக்குமாவென்று
நேற்றிலிருந்து
சாம்பலோடு சாம்பலாக
மூழ்கிய
இன்னொருவன்
எப்போதும் போல பசியோடு
மூச்சு திணறிக்கொண்டிருக்கிறான்
இங்கு
எது யாருக்கு இடர்
எது யாருக்கு பேரிடர்
0 comments:
கருத்துரையிடுக