- பிரிவுகள் தொடர்கதை -
எப்படி தொலைக்கிறோம்
என்பதெல்லாம்
தெளிவாக தெரிவதே இல்லை
உறங்கி
விழித்ததொரு நாளில்
மறைந்து போன
புதிரான கனவால்
நாள் முழுக்க
புலம்பி கொண்டிருப்பது மாதிரி
நன்கு பழகியவர்கள்
எப்படி பகைவராகிறார்கள்
என
குறிப்பாய் அறிந்திட
எந்தவொரு குறிப்பும் இல்லை
புலம்பியும்
ஒன்றும் ஆகப்போவதில்லை
விலகல் நல்லதுதான்
நமக்கு நாமே
சொல்லிக்கொண்டாலும்
என்றாவது ஒருநாள்
தூக்க கலக்கம் போல
வார்த்தைகளில் வராத
துக்க கலக்கத்தில்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
பேசியிருப்போம்
நாம் பிரியாமலேயே இருந்திருந்தால்
கண்கள் கலங்குகின்றன
மூக்கின் இடைவெளியை மறந்து
கண்ணீராவது
இருகண்ணிலும் ஒன்றுபோலவே
வழிந்தோடட்டும்
0 comments:
கருத்துரையிடுக