பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 03, 2020

#கதைவாசிப்பு_2020_12 'என்ன அது ?'


#கதைவாசிப்பு_2020_12
கதை  என்ன அது ?
எழுத்துஎம்.வி.வெங்கட்ராம்
புத்தகம்காலச்சுவடு ஜனவரி 2020



       கல்கி தீபாவளி மலர்,1963-ல் வெளிவந்த கதை. காலச்சுவடு ‘கதைத்தடம்’ பகுதியில் மீள் பிரசுரம் செய்துள்ளார்கள்.

     பெரும்பாலான கதைகள் மீண்டும் நினைத்துப் பார்ப்பதுப் போல எழுதப்பட்டிருக்கும். கடந்த காலத்தை நினைவுக்கூர்ந்து மீண்டும் அதனை இன்றைய நாட்களோடு ஒப்பிடுவது, அந்த நாட்களுக்காக ஏங்குவது, அன்றைய இழப்புகளை நினைத்து வருந்ததுவது, முன்னாள் காதலியைக் குறித்து உருகுவது என கதைக்கான பல காரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

       சொல்லப்போனால் புதிய எழுத்தாளர்களுக்கு இந்த யுக்திதான் முதலில் கைகொடுக்கும். நினைவோடையில் மிதந்து தன்னை மீட்டெடுப்பது ஒரு சுகம் தான். தேர்ந்த எழுத்தாளர்களின் நினைவோடை நம்மையும் அதனுள் இழுத்துவிடுகிறது. நாமே கதாப்பாத்திரமாகி மன சஞ்சலம் அடைந்தும் விடுகிறோம்.

      எம்.வி.வெங்கட்ராமின் ‘என்ன அது?’ என்கிற கேள்விதான் இக்கதை. கதையின் முடிவில் நமக்கான கேள்வியையும் கதையின் காரணத்தையும் வைத்திருக்கிறார்.

     இக்கதையை மூன்று பகுதிகளாக பார்க்கலாம். இளம் வயது ஆண், பாலியல் தொழிலாளியுடன் நடத்தும் உரையாடல். அவனது வெகுளித்தனம் அவளின் கேட்டுப்பழைய வார்த்தைகள் என நம் கண்முன்னே அந்த காட்சியை நகர்த்தியுள்ளார்.

       அந்த இளைஞர் யார், அந்த பாலியல் தொழிலாளி யார் என்பதை கதையின் இரண்டாம் பகுதியில் சொல்கிறார்.

   தனக்கு ஏற்பட்ட இந்த உணர்வுக்கு என்ன பெயர் என்கிற கேள்வியை மூன்றாம் பகுதியாக நம்முன் வைக்கிறார்.

கதை

    ஊருக்கு செல்லும் அம்மாவிற்கும் பையனுக்கு ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. அவ்வூரில் அவள் வேசி என அழைக்கப்படுகிறாள் என அம்மாவின் தோழி சொல்கிறார். ஏதோ ஒரு வகையில் அம்மாவிற்கும் அந்த பெண்ணும் குறுகிய கால நட்பு ஏற்படுகிறது. மகனும் அம்மாவுடன் அடிக்கடி அந்த பெண் வீட்டிற்கு செல்கிறான். அந்த பெண், அம்மாவுடன் வரும் போது ஒரு மாதிரியும், அச்சிறுவன் தனியாக வரும் போது ஒரு மாதிரியும் நடந்துக் கொள்கிறாள்.

     அவளுக்கும் அச்சிறுவனுக்கும் இடையில் ஏற்படும் ஏதோ ஒன்றுக்கானத் தேடல்தான் கதை முடிகிறது.

     அம்மாவும் மகனும் தங்கள் ஊருக்கு புறப்படுகிறார்கள். அந்த பெண் அவர்களை வழியணுப்பி அச்சிறுவனுக்கு லாக்கேட் உள்ள சங்கிலியைக் கொடுக்கிறாள். முதலில் அம்மா மறுத்தாலும் பின்னர் அதனை பெற்றுக்கொள்ள சம்பதிக்கிறார்.

      அவர்கள் புறப்படுகிறார்கள். அந்த லாக்கேட்டை திறந்துப்பார்க்கையில் அதில் அந்த பெண்ணின் சிரித்த முகம் புகைப்படமாக இருக்கிறது. கதை இங்கு முடிகிறது. அதன் பின் தான் இது அவரின் நினைவோடையில் எழுந்த அர்த்தம் விளங்கிடாத சம்பவம் என புரிகிறது.

      அந்த சிறுவனிடமாவது தன் சிரித்த முகம் கடைசி வரை இருக்கட்டுமே என்கிற அல்ப ஆசையாக அவளுக்கு இருந்திருக்குமோ என யோசிக்கையில் அவள் வாழ்வில் நடந்துக்கொண்டிருக்கும் துயரங்களை புரிந்துக் கொள்ள முடிகிறது.

-          - தயாஜி


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்