தகப்பன்சாமி தந்தவேல் அது கந்தவேல்
எல்லோரிடலும் எல்லாவற்றையும் சொல்லவோ கேட்கவோ என்னால் முடியாது. அதற்கான தகுதியும் வாய்ப்பும் இருந்தாலும் என் மனம் ஒப்புக்கொள்ளாத வரை நான் அதனைச் செய்யமாட்டேன்.
புதியவர்களுடன் 'வாங்க டீ குடிப்போம்' என்பதும், கொஞ்சம் பழகியவர்களிடம் 'பிரியாணி' வாங்கி கொடுங்க என்பதையும் உரையாடலின் தொடக்கமாகவும் நகைச்சுவையாகவும் பயன்படுத்துவேன். அதன் தேநீருக்கு நானும் பிரியாணிக்கு அவர்களும் பணம் கட்டிய நிகழ்வுகளை அதிகமாகவெல்லாம் நான் அனுபவிக்கவில்லை.
ஆனால், எழுத்து, கதை, புத்தகம் என வரும் போது, இயல்பாகவே நான் உற்சாகமாகிவிடுகிறேன். அவர்களிடம் நெருக்கமாகிவிடுகிறேன்.
ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் ஒரு கதையாவது பகிர்வதற்கு இருக்குமென நம்புகிறேன். அதனை எழுத வைத்துவிட்டால் அடுத்தடுத்த கதைகள் தானாகவே வந்துவிடும். அதற்கு அவர்களும் சிரத்தை எடுக்கவேண்டும் என்பதுதான் எப்போதுமான என் அதார உரையாடல்.
அப்படி எழுத்து மூலமும் சிறுகதை கலந்துரையாடல் மூலமும் புதிய நண்பர்கள் நெருக்கமாகியுள்ளார்கள்/ நெருக்கமாகிக் கொண்டிருக்கிறார்கள். என் அளவுக்கு தவறாத் சட்டையும், தமிழகத்திலிருந்து எனக்கு பிடித்த வண்ணத்தில் அரை கை ஜிப்பாவும், பழங்கள் என இப்படி பலவற்றை சொல்லலாம்.
அதிலொன்றுதான் காக்கும் கந்தனின் கைவேல்.
சமூக/சமய ஆர்வளரும் எழுத்தாளருமாகிய ஏ.கே.ரமேஷ் தன் தமிழகப் பயணத்திலிருந்து நினைவுப்பரிசாகவும் அன்பின் உருவாகவும் எனக்கு கொடுத்தார்.
"தமிழகத்திலிருந்து உங்களுக்கு என்ன வேணும்..." என கேட்டதும், தயக்கமின்றி வேல் வாங்கிட்டு வாங்க சார் என்றேன். தலையாட்டியவர் தவறாது கந்தவேலை கண்டுபிடித்துவிட்டார். அதிலும் இது கையடக்க கந்தனின் வேல் என்பது கூடுதல் அன்பு. தமிழை நேசிப்பவர்கள் தண்டாயுதபாணியை நேசிக்காமல் இருக்க முடியுமா என யோசிக்கிறேன்.
எதற்கும் அடங்கா கந்தவேலை அவர் தந்தவேளை பக்தனின் கைக்குள் அடக்கமாக கொடுத்ததில் அவ்வேல் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி.
அவருக்கு என் அன்பு, அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என் விருப்பம்.
1 comments:
இன்று என் அன்பிற்குரியவர்களிடமிருந்தும் அவர்களைச் சார்ந்தும் பல நல்ல செய்திகளும் நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. உங்கள் blogspot நான் என்பது இது இரண்டாவது முறை. ஏதோ ஒரு வகை அன்பும் நட்பும் என்னை ஆக்கிரமிக்கிறது.
சில பேர் மீது ஏற்படும் அன்புக்குக் காரணங்களை விவரிக்க இயலாது. அடிக்கடி சந்திப்பதில்லை. தினமும் சிந்திப்பதில்லை. ஆனால் சந்திக்கும் தருணம் யாவும் குதூகலிக்கும் மனம்.
அன்பின் பரிமாற்றத்தில் பல புத்தகங்கள் கைமாறியதற்கான கைம்மாறில்லை இந்த கந்தவேல். உங்கள் நலம் விரும்பும் படலமே.
‘தமிழும் தண்டாயுபாணியும்’.... நல்ல சொல்லாடல். எனக்குப் பொருத்தமான பிடிமானம்.
என்னை எழுத வைப்பதில் நீங்கள் காட்டும் மிதமான தீவிரத்திற்கு என்றும் அன்புக்கடன் பட்டிருக்கிறேன்.
விரைவில் நீங்கள்..... நான்..... பிரியாணி. சந்திப்போம்.
இடைச்செறுகலாக ஒரு விஷயம். இன்று நான் பிறந்த மாதாந்திர நட்சத்திர நாள். ஒவ்வொரு நட்சத்திர பிறந்தநாளுக்கும் ஆலயம் செல்வது வழக்கம். இன்று உங்கள் அன்பையும் ஆலயத்திற்கு எடுத்துச் செல்வேன்.
கருத்துரையிடுக