- God No Where vs God Now Here -
"கடவுள் இல்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும் பார்க்கறியா?"
"அப்படியா...?"
"நிரூபிக்க முடியும்ன்றேன்... அப்படியான்னு கேட்கற..."
"சரி நிரூபி. பாக்கலாம்..."
அதற்காகவே காத்திருந்தவர், தன் முகநூலில் 'கடவுள் இல்லை' என எழுதி பகிர்ந்தார். பார்த்தவருக்கு ஒரே குழப்பம். இதில் கடவுள் இல்லையென்று எங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது. கேட்டேவிட்டார்.
"இதில் கடவுள் இல்லைன்னு எப்படி நிரூபிச்சிருக்க...?"
"ஹஹஹ... அதான் நிரூபனம். இப்ப கடவுள் இல்லைன்னு எழுதி போட்டிருக்கேனா...?"
"ஆமா... போட்டிருக்க.. நீ அதை மட்டும்தான போட்டிருக்க...."
"கடவுள் இல்லைன்னு நான் போட்டதை, கடவுள்னு ஒருத்தர் இருந்தார்னா வந்து நான் இருக்கேன்னு எழுதிருக்கனும் தான..... அப்ப எதுவும் வரல.. ஆக கடவுள்னு ஒருத்தர் இல்ல.. எப்படி நிரூபிச்சேன் பார்த்தியா...?? "
"அதைவிடு காலம்காலமா இந்த குழப்பம் இருந்துகிட்டுதான் இருக்கு... ஆனா லஞ்சம் ஊழல் இல்லாத இந்த நாட்டுல நாம் இருக்கறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு..."
"என்னது லஞ்சம் ஊழல் இல்லையா.. என்ன கனவு காண்றயா....?"
"கனவா... நானும் நிரூபிக்கிறேன் பாக்கறியா...?"
"எப்படி..?"
"தோ... இப்படி..."
என்றவர் தன் முகநூலில் ஊழலும் லஞ்சமும் இல்லை. இல்லவேயில்லைன்னு எழுதி பகிர்ந்தார். பார்த்தவரின் கண்கள் சுருங்கின,
"என்னதிது..?"
"ஆமா பின்ன... லஞ்சம் ஊழன்னு ஒன்னு இருந்திருந்தா நான் சொன்னதுக்கு வந்து 'உள்ளேன் ஐயா'னு எழுதிருக்கனும் தான...."
"இதுக்கு இது பதில் இல்லையே...?"
"அதுக்கும் அது பதிலில்லையே...?"
0 comments:
கருத்துரையிடுக