அரை மண்டையனும் கா மண்டையனும்
90களின் தொடக்கம். எங்கள் வீடுகளின் சீடிகள் வந்திடாத காலகட்டம். ஒரு வீடியோ படத்தை வாங்கி பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பார்ப்போம்.
வேலையிடத்தில் பேசிக்கொண்டது முதல் ரேடியோ நாளிதழ்களில் கேள்விப்பட்டது
வரை நன்கு கலந்து பேசி வாடகைக்கு வீடியோவை எடுப்போம். நாளொன்றுக்கு 3
ரிங்கிட் என நினைக்கிறேன். இப்போது இந்த மூன்று ரிங்கிட்டுக்கு படத்தின் கவர் கூட கிடைக்குமா என தெரியவில்லை. அப்போது ஒரு முழு வீடியோ படமே கிடைத்தது.
அன்றும் அப்படி வீடியோ படத்தை அப்பா கொண்டு வந்திருந்தார். என்ன படம் என்ன கதை என அதுவரை தெரிந்திருந்தவற்றை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். குழுவில் ஒருவன் திடிரென்று கதற கதற சிரித்தான்.
எங்களுக்கு ஒன்றும்
புரியவில்லை. சிரித்தவனின் கண்களில் நீர்வழிய மீண்டும் எங்களை பார்த்து ,
"ஆமா என்ன படம் பேரு சொன்ன?" என கேட்டான்.
நாங்கள் ’அரண்மனை காவலன் ' என்றோம். சட்டென சிரிப்பை நிறுத்திவிட்டான்.
நாங்கள் ’அரண்மனை காவலன் ' என்றோம். சட்டென சிரிப்பை நிறுத்திவிட்டான்.
"அப்போ படம் பேரு அரமண்ட காமண்ட இல்லையா"
அந்த செவிட்டு நண்பனை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வந்துவிடுகிறது.
0 comments:
கருத்துரையிடுக