பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 28, 2009

வினாடியின் வேதனை...

ஒவ்வொரு வினாடிக்கும்,
நடப்பதை அளக்கும்......
பொறுப்பு எனக்கு ,

நடைப்பாதை முள்ளை
மிதித்தேயாக வேண்டும்...
இல்லையேல் கால்கள்
காணாமல் போகும் அபாயம்....
கண்ணருகிள் காணப்படும்...!!!

கண்ணிமைக்கும் நேரமும்..
கணநேரக் காமமும்....
கடக்க முயற்சித்து,
கையிடைந்தவன் நான்...?

இது பெறுமையல்ல..
இருந்தும்..
இது பெறுமைதான்...
காலத்தின் கணக்கிள்
கண்வைத்தால் தெரியும்.....

விமர்சணங்களும் எதிர்ப்பார்ப்புகளும்
காயத்தை ஆழமாக்குகின்றது....!!!!

ஆறியக் காயங்காளும் நோகும் தழும்பிகளும்.....!?
சொல்லிச் செல்வது என்ன.....?
சொல்லி வந்தது என்ன.....?
சொல்ல மறந்ததும் என்ன...?

விளக்கம் தெவையில்லை
அதன் அவசியம்
எனக்கு .......
அநாவசியம்.....!!!!!

வெள்ளைக் காகிதம் இருக்க..
கருப்பு மையும் நனைக்க.......

தன்னை அறிந்து..
என்னை மறந்து.......

ஆரம்பித்துவிட்டேன்.....




..........தயாஜி வெள்ளைரோஜா..................

ஆகஸ்ட் 05, 2009

உருண்டை பூமியில் விட்டது.....



யார் சொன்னது
பூமி உருண்டைனு.......?
அப்படின்னா,
என்னை விட்டுப்போனது
என்னோட சேர்ந்திருக்கனுமே.....!

ஆமா,
என்னோட படிப்பு
..ம்..... பதின்ம வயது படிப்பு..
என் ‘கூடா’ நட்பால்,
என்னை ‘நாடா’ போனது கல்வி...!

பணம் கட்டியே,
இன்னைக்கு ‘போட்டாவில்’
தொங்கும்......
‘பொறுப்பான’ அப்பா...
நான்தான் காரணம்னு..
என்மேல்,
‘வெறுப்பான’ அம்மா.....!

என் கீழ்
நாலு பேரு,
நான் மட்டும் சந்தோஷமாய்....
நணபர்களுடன்....
‘புகை’யும் ‘குடி’யும்,
அதால் என் உறவுக்கு
‘பகை’ என்மெல்....!

நான் தெளிய நாள்
‘பலவாச்சி’......!
இன்னைக்கு எல்லாம்,
என்னை விட்டுப் ‘போயாச்சி’....?


வந்ததைப் பார்த்தா......
‘ஏக்கம்’
வருவதைப் பார்த்தால்
‘துக்கம்’

அடிக்கடி கடிக்கும்
‘செருப்பு’........
அழுக்கான கிழிஞ்ச
‘சட்டை’.......
கறைப்பட்டு தோய்க்காத்
‘சிலுவார்’.......
வெட்டாதா சீவாத
‘தலைமுடி’.......

என்னை யாருக்கும் ,
இனி அடையாளம்.......!
‘தெரியாது’...
அடையாளம் காட்டவும்
‘முடியாது’.......

‘போட்டோ’வில் அப்பா...
‘போ’ சொன்ன அம்மா.....
ஏற்காத ‘உறவு’.....
ஏறாதா ‘அறிவு’.......

இன்னும்.....
இன்னும்......
எவ்வளவோ.....!

பூமி உருண்டைனு
சொன்ன அறிஞர்களே......

இந்த உருண்டை பூமியில் ,
நான் விட்டது....
இல்லையில்லை..!?
தொலைத்தது..
திரும்ப வருமா..?

..........தயாஜி வெள்ளைரோஜா..............

ஆகஸ்ட் 02, 2009

பருவப் பரிட்சை......

தினமும் நாங்கள்
சந்திக்கின்றோம்...
பள்ளியில் அருகருகிள்
அமர்கின்றோம்......

வீட்டுப் பாடங்களை அவளே,
எழுதிக் கொடுப்பாள்,
நான் பார்வையாளன் மட்டும்தான்.....

என் மேஜையில்
அவள் தந்த பரிசுகளே
அதிகம் ஆக்கிரமிக்கின்றன.....!!!

பேனாவும் அவள்...,
தந்தால்தான் அழகாய்
எழுதுகின்றது...?


அவள் வீட்டுக்கண்ணாடியில்தான்
நான் அழகாய் தெரிவேன்..!

எங்கள் உறவுகள்
புனிதமாகக் கருதப்பட்டுவந்தது....

பருவச் சண்டையில்
அவளின் தேகம்.......
‘.....வீங்கின.....!!!’

ஆடைகள் மாறின,
அவள் மேல் வீட்டில்
அக்கரைக் கூடின.......

அவளை சுற்றி
ஏதோ வாசம்
இன்னதென்று கூறமுடியாது............
ஏதோ புதுமை வாசம்.....!!



அவள் நடையில்
என்னுள் அதிர்ந்தன..
ஏதேதோ.....!?!?!?

இப்பொழுதெல்லாம்..
நாங்கள் சந்திப்பதில்லை.
அவள் வீட்டார் இதை
விரும்புவதில்லை.....?

என் வீட்டிலும் என்னை
விடுவதில்லை...?

அவளைப் பார்க்காத
நாட்கள்தான்
நான்..........

இன்னும் அவளருகில்
நெருக்கமானேன்..!!?

இப்போது எங்கள் உறவு..
பாவமா..?
புனிதமா..?
விளங்கவில்லை......


..........................தயாஜி வெள்ளைரோஜா.............................

முதலிரவு (கற்பனை கடந்து........)

“ஏங்க நம்மை நம்ம வீட்டில உள்ளவங்க ஏத்துக்குவாங்களா..?”

“இந்த நேரத்தில் போய்... இந்த கதை தேவையா..? நேரத்தை ஏன்தான் இப்படி வீணடிக்கிறயோ..... !”

“என்னங்க இப்படி பெசறீங்க..!?”

“அதுக்கில்லை, நாம என்ன ஊர்ல உலகுத்துல செய்யாததையா செஞ்சிட்டோம்.எல்லார் போலவும் காதலிச்சோம். வீட்டில் நம்ம காதலை ஏத்துக்கலை அதான் ,ஓடி வந்திட்டோம் நம்ம காதலை வீட்டில் ஏத்துக்கிட்டிருந்தா நாம ஏன் வீட்டைவிட்டு ஓடி வந்திருக்கப்போறோம் ”

“என்னதான் உங்களை நம்பி வந்திட்டாலும், என் ஞாபகம் எல்லாமே என் வீட்டில் உள்ளவங்க மேலதான் இருக்கு.....!”

“நீ சொல்றதும் சரிதான். யாருக்குதான் வீட்டு ஞாபகம் இல்லாமப் போகும்..?.. அதும் நீதான் வீட்டுக்கு மூத்தப் பொண்ணு ..... நீதான் தம்பி தங்கச்சிக்கு ஒரு உதாரணமா இருந்திருக்கனும்....? ஆனா நீயே .....இப்படி.... ”

“இப்ப மட்டும் என்ன புத்தர் மாதிரி பேசறிங்க..!? அன்னிக்கு இந்த அறிவு எங்கே போச்சாம்.....? என்னை ஓடிவர சொன்னதே நிங்கதானே..! ”

“சரி....சரி...இப்போ நீ என்னை என்னதான் செய்யசொல்ற.....?”

“நம்ம குடும்பத்தில உள்ளவங்க ,நம்மை சேர்த்துக்கனும் முடியுமா..? ”

“..ம்.. எல்லாம் குழந்தைப் பொறந்தா சரியாகிடும்”

“ஆமா இப்படி சொல்லியே ஆறு பிள்ளையாயிடுச்சி.. இப்போ.. இன்னும் ஒன்னா....???!!!”




........தயாஜி வெள்ளைரோஜா.......

ஆகஸ்ட் 01, 2009

திருவிழா.....!

பல வருசமாச்சி,
என் தோட்டத் திருவிழாவைப்பார்த்து
எப்படி மாறியிருக்கும்..?
யார் பூசாரி..?
எந்த வழியா தேர் போகும்..?
என்னக் கடைகள்..?
ம்.....!
அதான் வந்தாச்சே,
இனிமே நாமே பார்த்துக்கவேண்டிதான்..
அட..அட.. அம்மன்,
பவனி வரும் அழகே தனிதான்..
புடவைக்கூட்டமும்,
வேட்டிக்கூட்டமும்,
கலந்தே நடந்துக்கொண்டிருந்தன...
உறுமியுடன் பஜனையும்,
பலரை முறைக்கவைத்தது..
சிலரைச் சிரிக்கவைத்தது..
நானும் இருதலைக்கொள்ளி எறும்பானேன்..!!!!
அம்மன் ஆலயத்தை
நெருங்கி கொண்டிருந்த சமயம்..
ஏதோ சலசலப்பு..?!?!!?!?!?!?!
பெண்களின் அலறல்..?!?!?!!?!?!
சிறுவர்களின் ஓட்டம்.??!?!?!??!?!



“டேய் அவந்தாண்டா”
“ஐயோ..!”
“கடவுளே..”
“உடாதிங்கடா..”
“அவன் அங்க ஓடறாண்டா..?!?!”



கையில் ஆயுதங்களுடன்,
காவல் தெய்வத்திற்குப் போட்டியாக,
சில இளைஞர்களின் செயல்???!!!?!?!!?
கோவில் படிக்கட்டில் ‘இரத்தம்’
திருவிழா நிறுத்தப்பட்டது..
என் மனதில் ‘கறை’


................தயாஜி வெள்ளைரோஜா...................

நானும் அவனில்லைதான்......!


இதை படிக்கும் முன்பு, எனது சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். இது அவசியமா....? என்று நீங்கள் கேட்பதில் ஞாயம் இருந்தாலும் என் பக்கத்திலும் ஞாயம் இருக்கவே செய்கின்றது.

சரி இப்பொழுது நீங்கள் தயாரா இருப்பீர்கள் என நம்பிக்கையோடு என் கேள்விகளை தொடங்குகின்றேன்.

என்ன தயார்தானே...?

கேள்விகளுக்கு எண்கள் கொடுக்கப்போவதில்லை, உங்கள் எண்ணப்படி நீங்களே வாசிக்களாம். மகிழ்ச்சிதானே..!

உங்கள் அலுவலகத்தில் என்றும் இல்லாதா ஒரு நாள் உங்கள் மேலதிகாரியோ அல்லது சக பணியாளர்களோ முதல் நாள் நீங்கள் விரும்பிப்படித்த, ஏதாவது ஒன்றைப்பற்றி கெட்க அதற்கு நீங்கள் பதில் சொல்லி பாராட்டு வாங்குவீர்கள்.


ஆமாம் / இல்லை


மின்தூக்கியில் நீங்கள் எட்டாவது மாடிக்கு செல்ல கீழ்மாடியில் இருந்து செல்லவேண்டும்தானே....? அப்படி நீங்கள் செல்லத் தயாராய்

இருக்கும்போது விசையை அழுத்த முயலும் அந்த ஒரு வினாடி வித்தியாசத்தில் மின்தூக்கி சட்டென்று மேலே செல்ல ஆரம்பிக்கும்.

நீங்களும் மேலிருந்து யாரோ வருவதற்காக விசையை அழுத்தியிருப்பதாக உங்களை சமாதானம் செய்யும்போது, அந்த மின் தூக்கி வேறு எங்கும் நிற்காமல் நேராக நீங்கள் இருக்கும் முதல் மாடிக்கு வரும்......

யாரோ விசையை அழுத்தி விளையாடியிருப்பார்கள் என இப்போதும் உங்களை மீண்டும் சமாதானம் செய்வீர்கள்.

பின்னர் மின் தூக்கியில் நீங்கள் ஏறியதும் எட்டாம் மாடிக்கு செல்ல விசையை அழுத்துவீர்கள். ஆனால் அந்த மின் தூக்கி எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒன்றாம் மாடி இரண்டாம் மாடி மூன்றாம் மாடி என ஒவ்வொரு மாடியாக ‘நின்று கதவை திறந்து மூடிச் செல்லும்’
இதற்கு என்ன நினைத்து தன்னை சமாதானம் செய்வதென்று தெரியாமல் முழிப்பீர்கள்.



ஆமாம் / இல்லை



காரில் தனியாக செல்வீர்கள், துனையாக யாரும் இல்லையென குறைபடாமல் ஏதாவது குறுந்தட்டோடு நீங்களும் பாடிக்கொண்டிருப்பீர்கள் அல்லது எதாவது வானொலிய கேட்டு ஒன்று பாராட்டுவீர்கள் இல்லை திட்டித் தீர்ப்பீர்கள்
(அறிவிப்பாளர்க்கே வெளிச்சம்...! )

காரில் உங்கள் தனிமை உறுதி செய்தபின், இயற்கையாகவே உங்களுக்கு பயம் தோன்றும்.
அதும் தூரத்தில் தெரிந்த மரங்களேல்லாம்.... உங்களை துரத்துவதாகவும் உங்களைப் பார்த்து சிரித்து கையசைப்பதாகவும் நினைப்பீர்கள்.
அந்த நேரத்தைச் சரியாக பயன்படுத்தி யாரும் ஒருவர் உங்கள் காருக்கு சுமார் கொஞ்சதூரத்தில் தனியாக நின்று கையசைத்து உதவிக் கேட்பார்.
நீங்களும் (உங்களில் சிலர்) “ஏதோ அவசரம் போல” என்று நினத்து காரை நிறுத்துவீர்கள் . அந்த நேரத்தில்தான் உங்கள் கைபேசி அலறும்.
கைபேசியில் பேசிக்கொண்டே நிறுத்திய காரில் இருந்து, கையசைத்தவரைப் பார்ப்பீர்கள் . ஆனால் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள்..! கைபேசியும் சட்டென்று உயிர் இழந்திருக்கும்..!



ஆமாம் / இல்லை



முக்கியமாக செல்ல வேண்டிய நிகழ்ச்சிக்கு, செல்லும் முன்பு உங்கள் கைபேசியை தேடுவீர்கள்... கிடைக்காது ..!
மனைவியிடம் கோவப்படுவீர்கள்....
பிள்ளைகளையும் திட்டுவீர்கள்.....
தலையை பிய்க்கும் நிலைக்கு நீங்கள் போனதும், உங்கள் கால்சட்டையில் இருந்து உங்கள் கைபேசி சிரிக்கும்..




ஆமாம் / இல்லை




உங்கள் பதில் ஆமாம் என இருந்தாலும் இல்லை என இருந்தாலும்......
இனி அப்படியெதும் நடந்தால் பயம் வேண்டாம். பதட்டம் வேண்டாம். கோவம் வேண்டாம்.
உண்மையை சொல்லிவிடுகின்றேன். என் சகதோழர்கள்தான் அப்படி செய்வது.
என்னைப் போன்று அவர்களுக்கு கதை சொல்லத் தெரியாததால் இதுதான் பொழுது போக்கு.

மன்னித்துவிடுங்களேன்.

.............. தயாஜி வெள்ளைரோஜா............

அப்பா........








வெள்ளை ரோஜா



நிஜப்பெயரில் புரிந்ததைக்
காட்டிலும்......
புனைப்பெயரில் அறிந்ததுதான்
அதிகம்............
உம்மை சந்தித்தால் கேட்பாளாம்,
என் தோழி....
“புனைப்பெயரில் மறைவதேன்..?” என,

அவளுக்கு மட்டுமல்ல பலருக்கு
தெரிவதில்லை.....
பெயர் மாற்றம் அல்ல இது,..!
சிந்தனை உருமாற்றம்,

நமக்குள் இயங்கும் இன்னொருவன்..!
நம்மை ஆட்சிபுரியும் இன்னொருவன்..!
இவன்,
நிஜப்பெயரில் ஏற்பட்ட வலிகளையும்
அவமானங்களையும் கலையும் ..
வித்தைப் புரிந்தவன்.... கற்பனை
விந்தின் உதித்தவன்......

உமக்கான நண்பர்கள்
என்னை நெருங்கினாலும்..
உமக்கு இன்பம்தான்...?

நாம் செல்லும் ஒவ்வொரு
நிகழ்ச்சிக்கும்......
பின் இருக்கை உமக்கும்
முன் இருக்கை எமக்கும்
தயாராய் இருக்கும்....உம் விருப்பப்படி.....!?
இடுப்பில் குத்தி என்னை,
எழவைத்து..
மேடைக்கு அனுப்பியது நிச்சயம்
உம் சாமர்த்தியம்........

ஆரம்பக்காலத்தில் எமக்கும்
எரிச்சல் வந்தது.....
உம் தந்தை தவறியதையும்
எம் தந்தை செய்வதையும்
உணரும் முன்பு........!

உமக்குள்ள பெண்
ரசிகர்களை மிஞ்ச எமக்கு..
கொஞ்சம் ‘அதிகம்தான்’ அவகாசம்
தேவை.....!

அதெப்படி அம்மாவைத்தவிர
பலர் உம் ரசிகைகள்.....
சிரிப்புதான் வருது...... எம் ‘கதை’யில்
குற்றம் தேடும்போது..
அம்மா எனக்கு வக்காலத்து
வாங்குவதும்...
சில சமயம் எம் கதையைப் படித்துக்காட்ட...
இப்படியும் நடக்குதா? என அம்மா....
ஆச்சர்யபட..
அம்மாவுக்கு தமிழ் தெரியாதது..
எவ்வளவு வசதி உமக்கு.......?
படைப்பவரின் மகன்
படைப்பதில்லையாம்.....
உம் மாதிரி அப்பா
கிடைக்காததாலோ.......!

“புலிக்கு பொறந்தது பூனையாகுமா ?”
இப்படியாகச் சொன்É¡லும்..

இது புலியை மிஞ்சும் பூனையென......!
சொல்லும்போது..
அப்பாவா..? ஆசானா..?
குழப்பம் ஏற்பட்டாலும்..
எம் எழுதுகோல் ,
என்றும் உம்
எழுத்தின் வாரிசுதான்..........


கண்முன்னே
“முடியுமா?” என
கொட்டினாலும்..,
மறைமுகமாய் எம் உழைப்பை
தட்டிக்கொடுப்பதை உணர்ந்தேன்......

எõ வயதினர்,
மோட்டாரில் பயணிக்கும்போது..
எம்மை நடக்கவைத்தது..
எõ சிறகுக்கு அளித்த பயிற்சியென..!
உணராமல் இல்லை....

என் மனதில்..
வயதின் காரணமாய் ஏற்பட்ட
சபலத்தை மாற்றினீர்.....!
“மாற்றம் ஏற்படும்” என்ற
நம்பிக்கைப் பார்வையில்..

அண்ணன் தம்பியென நம்மை,
நம்மை அறிந்திருப்போரை..... நினைக்கின்றேன்..!
எம்மது முதுமையா..?
உம்மது இளமையா..?

அந்த பயமே உம் அருகிள் நடக்க எனக்கு.........

பிறந்த தோட்டத்தை மறந்து பலர்.....பறக்க...!
இன்னமும் உம் பெயருக்குப்பின்னால்
வாழ்கின்றது..
உன்னை வளர்ந்த தோட்டம்...
நம் 'யு.பி' தோட்டம்,

அடிக்கடி சொல்லும் அறிவுரையில்
கட்டாயம் இடம்பெறுவது...
"பொண்ணுங்க விசியத்திலே பார்த்துடா....?!! "

உங்க பிள்ளைதானே.......????

ஆயிரம் மகுடங்கள் கூடினாலும்,
எமக்கான 'வைர கிரீடம்.......'

"வெள்ளைரோஜாவின் பிள்ளைரோஜா"
எனச் 'சொல்லும் 'கிரிடம்

அது ''வெல்லும் கிரீடம்

இப்படிக்கு,
பிள்ளை ரோஜா.....
..................தயாஜி வெள்ளைரோஜா...................






Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்