பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 05, 2010

தெரிஞ்சா.. சொல்லுங்களேன்..!!



தெரிஞ்சா சொல்லுங்க...


இதை நான் சொல்லக் கூடாது. என்ன செய்வது எனக்கு வேற வழி தெரியலை. ஒரு வேளை உங்களில் யாருக்கும் இப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டிருக்கும் அல்லது இப்படி ஒரு அனுபவம் உங்களுக்காகக் காத்திருக்கும். அப்படி காத்திருக்கும் யாருக்காவது இது முன்னெச்சரிக்கையாக இருக்கட்டுமே என்றி இதனை எழுதுகின்றேன்.
பேய் இல்லாவிட்டால் ஆத்மாக்கள் என்பதனைப் பற்றி உங்களின் கருத்து என்ன..?

ச்சே...அப்படியெல்லாம் ஒன்னுமில்லை எல்லாம் ‘காதுல பூ’ சுத்தும் வேலைன்னு சொல்றிங்களா..? பரவாயில்லை. ஒன்னு சொல்லட்டுமா ஆரம்பத்தில் நானும் உங்கள் கட்சிதான்? இப்போ என் நிலையைப் ‘பாருங்க...’ மன்னிக்கவும் படிங்க. அப்போதுதான் தெரியும். உங்கள் யாரையும் பயமுறுத்துவது என் நோக்கம் அல்ல. அதற்கு நான் ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்..! ஆனால் ஏன் எழுதுகிறேன்..? எனக்கே தெரியலை..



சரி, ரொம்ப குழம்பாடாதிங்க, நானே சொல்றேன். ஆரம்பத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கான உங்களின் பதிலை மனதில் வைத்து தொடர்ந்து படிக்கனும் என்ன...


எனக்கு ஒரு நண்பன் இருந்தான்.(அது என்ன ஒரு நண்பனு கேள்வியெல்லாம் கேட்டா நான் எழுதமாட்டேன்.. அதனால சும்மா கேள்வி கேட்காம படிங்க... சரியா..)

அந்த நண்பனோட பெயர் காளிதாசு. அவனை எனக்கு நாலு வருசமா தெரியும். இது இப்போ அவசியமான்னு கேட்கறிங்கலா..? நான் சொல்லப் போறதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கு. சம்பந்தம் இல்லாம பேச நான் என்ன அர...(எதுக்கு வம்பு விடுங்க..!!)

தொடர்ந்து எழுதுவதற்கு முன்னாடி, ஒரு சின்ன தகவல். அது என்னான்னா.. ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு மேல் யார் எனக்கு ‘போன்’ எடுக்கமாட்டேன்.அதும் அன்னிக்கு பிரைவட் நம்பர்-னு இருந்தா, தூக்கம் போச்சி. ஏன்னு கேட்கறிங்கலா..? அப்படின்னா, என்னோட ‘நள்ளிரவு மணி’- என்ற கதையை (நயனம் 26/7/2010) படிங்கத் தெரியும். அதும் பெரிய கதைதான்.

இப்போ சொல்ல வந்ததை சொல்றேன். ஆம் அந்த காளிதாசு எப்போதும் எனக்கு ‘போன்’ செய்து பேசுவான். அப்பப்போ வந்தும் பார்ப்பான்.இப்போ என்னான்னா.. மூனு மாசமா, ஆளையே காணோம்.போன மாசம்தான் இன்னொரு நண்பன் மூலம் தெரிஞ்சது, காளிதாசு இறந்துட்டான்னு. உங்களுக்கு இது அதிர்ச்சியா இருக்காது. ஆனால் அடுத்து நடந்ததை சொன்னா நீங்க என்ன நினைப்பீங்கன்னு எனக்கு சொல்லத் தெரியலை.

கடந்த ஒரு வாரமா என்னால அவனைப் பார்க்கமுடியுது. அட ஆமாங்க, அந்த காளிதாசைதான். அவன்தான் இறந்துட்டானே அவனை எப்படி பார்க்க முடியும்னு உங்களுக்கு வர சந்தேகம் எனக்கும் வந்தது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒரு நாள் என்ன நடந்தது தெரியுமா..? ஓ.. நான் சொன்னாதானே தெரியும்னு சொல்றிங்கலா..? சொல்றேன் அதுக்குதானே எழுதவே ஆரம்பிச்சென்.

எப்போதும் போல பேருந்துக்குக் காத்திருந்தேன். என் அருகில் நால்வர் நின்றுக் கொண்டிருந்தனர்.கவனித்தேன். தூரத்தில் ஒரு உருவம் என்னையே பார்ப்பதாக உணர்ந்தேன். ஏற்பட்ட உணர்வு உண்மையாகிப் போனது.என்னையேப் பார்த்து கொண்டிருந்த உருவம் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் வரத்தொடங்கியது. அது்..அது.. காளிதாசு.என்னால் உறுதியாய் சொல்ல முடியும். அப்பறம் நாலு வருச பழக்கமாச்சே.. சும்மாவா..!
அவன் செத்துட்டான்னு சொன்னாங்கலே..... இங்க எப்படி..... ?


எனக்குள் பல கேள்விகள். உங்களுக்கும் ஆரம்பிச்சிருக்கும்னு நினைக்கிறேன். காளிதாசு, இருக்க இருக்க நெருக்கத்தை அதிகரிச்சான். எனக்கோ லேசான நடுக்கும் ஆரம்பிச்சிருக்கும். நானும் பயத்தில் புதுப்புது சாமி பெயர்களையேல்லம் சொல்லிக்கிட்டேன்.



கொஞ்சம் அருகில் வந்தான் .@ கொஞ்சம் அருகில் வந்தது.

“நீங்க மணிதானே..?” என்றான். @ என்றது.

நானும் நடுங்கியவாறு,

“ஆமாம் .. நீ.. நீங்க..க்க்காளிதாசு”

“இல்லைங்க நான் காளிதாசோட அண்ணன். ஒரு தடவை வீட்டுக்கு வந்திகலே , மறந்துட்டிங்கலா..?”

“ம்..ம்,.. காளிதாசு”

“ம்.. என்ன செய்யறதுங்க கஷ்டன்மாதான் இருக்கு. அம்மாதான் இன்னும் அவன் நினைப்பாவே இருக்காங்க.. நானும் அங்கயே இருக்க முடியாம. கோலாலும்பூருக்கு வந்துட்டேன். இங்க கூட்டாளி வேலை இருக்குன்னு சொல்லியிருக்கான். எல்லாம் சரியா வந்தா.. அம்மாவையும் கூட்டி வந்திடுவேன். அங்கயே இருந்தா தம்பி ஞாபகமாவே இருக்கும் பாருங்க..!”

இவ்வாறு பேசி பக்கத்தில், இருக்கும் கடையில் சாப்பிட்டோம். காளிதாசும், அவனோட அண்ணனும் ஒரே மாதிரிதான் இருப்பாங்கன்னு எனக்கு தெரியாம போயிருச்சி. நல்ல பையன் காளிதாசு. இப்படி அற்ப ஆயுசில போவான்னு யாருக்குத் தெரியும்.

அதற்கு பிறகு பேருந்துக்காக போகும்போதும், காத்திருக்கும் போதும் காளிதாசின் அண்ணனைப் பார்த்தா மரியாதைக்காக கை காட்டுவேன்.அப்படி கையை காட்டும் போது பக்கத்தில் இருக்கிறவங்க என்னை ஒரு மாதிரியாப் பார்ப்பாங்க. ஏன்னு எனக்குத் தெரியலை.உங்களுக்கு ஏதும் யூகம் இருக்கா..? அந்த யூகத்தை அப்படியே வச்சிக்கோங்க. நான் சொல்ல வந்ததை சொல்றேன்.மன்னிக்கவும் எழுதறேன்.

“தேவி எங்க இந்த பக்கம் .. சொல்லவேயில்லை..?”

“ஹாய், மணி எப்படி இருக்கே.. ஒரு வாரம் லீவு அதான் அத்தை வீட்டுக்கு வந்தேன். உன்னையும் பார்க்கனும்ன்னு இருந்தேன் நீயே வந்துட்டே..”

“அத்தை வீடா இங்கயா..?”

“ம்.. செர்டாங் செரி கெம்பாங்கந்ல இருக்கு . எல்லாம் வேலைக்கு போயிருக்காங்க அதான் அப்படியே பஸ் ஏறி வந்தேன். கொஞ்சம் சுத்திட்டு இப்பதான் கிளம்பப் போறேன்..ஆமா நீ என்ன பஸ்ல போறயா..?”

சிரித்தேன்.

“என்னோட கார் கொஞ்சம் பிரச்சனை அதான் இன்னிக்கு பஸ். இரு தேவி காளிதாசோட அண்ணன் வர நேரம் அபப்டியே அவரையும் பார்த்த மாதிரி இருக்கும்.”

தேவி அதிர்சியில்,

“என்ன மணி சொல்ற. நீ பார்த்தியா..?”

“ஆமாம் தேவி . இவரும் பார்க்க காளிதாசு மாதிரியெ இருந்தாரா. நானும் செத்துப் போன காளிதாசுன்னு நெனைச்சி பயந்துட்டேன்.”

“காளிதாசு இறந்துட்டான்னு யார் சொன்னா உனக்கு..?”

“கேசவன்தான் சொன்னான், காளிதாசு இறந்துட்டான்னு.. ஏன் தேவி என்ன ஆச்சி..?”

“அடக்கடவுளே, மணி செத்துப் போனது காளிதாசு இல்லை. அவனோட அண்ணனும் உன்கிட்ட சொன்னதா சொன்னியே அந்த கேசவனும்தான். மோட்டர் விபத்துலதான் ரெண்டு பேரும் இறந்தாங்க. ”

“என்னது..!!!!”

இதை தேவி மூலம் கேட்ட நான் என்ன செய்யனும்னு தெரியாம / புரியாம முழிச்சேன்.இப்பகூட பாருங்க பஸ்லதான் போய்கிட்டு இருக்கேன்.இன்னும் குழப்பம் தீரலை. அப்போ எனக்கு தகவல் சொன்ன கேசவன் , காளிதாசோட அண்ணன் ..இது எப்படி சாத்தியம்.

அங்க பாருங்க கேசவனும் காளிதாசின் அண்ணனும் கை காட்டறாங்க. உங்கள் யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்களேன்..... நான் கை காட்டட்டுமா வேண்டாமா..?






தயாஜி வெள்ளைரோஜா

4 comments:

lolly999 சொன்னது…

அடக்கடவுளே! நல்ல குழப்புறீங்க தம்பி! OK OK WELL DONE

தயாஜி சொன்னது…

m..... நன்றி... இன்னும் இருக்கு.. தயாரா இருங்களேன்....

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

கதை அயர்ச்சி தட்டுகிறது... திருப்பங்கள் இல்லாமல் நேரடியாக பயனிக்கும் வகையில் கதையை அமைத்திருக்கிறீர்கள். எழுத்து நடையில் சுவாரசியம் உள்ளது.

தயாஜி சொன்னது…

நன்றி.... வருகைக்கு..
தொடர்ந்து வருக....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்