பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 30, 2020

நானும் என் குறுங்கதைகளும் 1


தொடர்ந்து #குறுங்கதை கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு முறை எழுதும் போதும் புதிதான ஒன்றை முயல்வதாகவே நினைத்து எழுதுகிறேன். 

குறுங்கதைகளை வாசித்து பலரும் அவர்களின் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் சிலர் அவர்கள் வாழ்வில் நடந்தவற்றை பகிர்ந்துக் கொள்கிறார்கள். 

"இதிலிருந்து உங்களுக்கு கதை கிடைக்குதான்னு பாருங்க..?" என்றுதான் தொடங்குவார்கள். உண்மையில் அப்படி அவர்கள் சொல்லா விட்டாலும் அதிலிந்து எப்படியாவது கதையை உருவி எடுத்து விடுகிறேன். 

சமயங்களில் அவர்களுக்கு தெரியாமல் எடுத்த கதைகளை அவர்கள் குறுங்கதைகளாக வாசிக்கும் போது, அவர்கள் சொல்லாத உண்மை அதில் இருப்பதை கண்டு முழு கதையையும் ந்
சொல்லியிருக்கிறார்கள். சிலர் இப்படி நடந்திருந்தால் நிம்மதியாக இருந்திருப்பேன் என்கிறார்கள். 

எனக்கும் என் எதிரில் இருக்கும் மனிதருக்குமான பகடையாட்டம்தான் இந்த கதைகள். சமயங்கள் அவர்களாகவே என் கதைகளுக்காக காய்களை உருட்டிக் கொடுத்துவிடுகிறார்கள். அவர்கள் நன்றிக்குரியவர்கள்.



சமீபத்தில் நான் எழுதிய #குறுங்கதை களின் ஒன்றான 'ஆவியுடன் பேசுவது எப்படி..?' என்ற குறுங்கதையை, ஆசிரியை ஒருவர் தன் மாணவர்களுக்கு சொல்லி அதிலிருந்து அவர்களுக்கான கதையை எடுத்துச் சொல்லியிள்ளார்.

இது குறித்து அவர் பகிர்ந்திருந்த புலனச்செய்தி எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதனை உங்களிடம் பகிர்வதில் அம்மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். 

அவ்வபோது #குறுங்கதை களுக்கு வாசகர்கள் பகிரும் இது போன்ற கருத்துகளை பகிரலாம் என நினைக்கிறேன்.

தொடர்ந்து வாசித்து கருத்துகளைப் பகிர்ந்துவரும் உங்களுக்கு என் அன்பும் நன்றியும்....

- தயாஜி

Related Posts:

  • - பரிதாப பரிசுகள் - ரொம்பவும் பழையபுத்தக அலமாரியில்பழைய புத்தகத்தில்அதைவிட பழையதாய்ஒரு மயிலிறகு இருக்கிறதுஅது மட்டும்இன்னமும் புதியதாகவே சிரிக்கிறதுபிடித்தவர்கள் கொ… Read More
  • - நினைவுக்குமிழி - நினைவுகளின் குழிசிலருக்கு செதுக்கப்படுகிறதுசிலருக்கு புதைமண்ணாய் ஆழம் போகிறதுகையளவு தண்ணீராய்ச் சிலர்முகம் கழுவுகிறார்கள்கடலளவு தண்ணீராய்ச் சிலர… Read More
  • - உங்கள் குட் நைட்டிற்கு என்ன பொருள் ? -  குட் நைட்என்பதை எப்படிதமிழில் சொல்வீர்கள்உங்கள் தாய்மொழியில்எப்படி அதற்குபொருள் கொள்வீர்கள்?என்னால் அதன்நேரடி பொருளை என் மொழியில்புரிந்து க… Read More
  • பிப்ரவரி மாத நாவல் வாசிப்பு பிப்ரவரி மாதத்திற்கான நாவல் வாசிப்பு.இர்விங் கர்ஷ்மார் எழுதிய 'ஜின்களின் ஆசான்'Tamil translation of 'Master of the Jinn'நான் வாசிக்கும் இரண்டாவத… Read More
  • - அரசியல் தெரிந்தவர்கள் - பாலாடைபால் பாட்டில்நம்கின்பூத்தின்பௌடர்கிலுகிலுப்பைகரடி பொம்மைஇவற்றுடன்மிச்சமிருக்கும் தாய்ப்பால் சொட்டுகள்என எல்லாவற்றையும்சிதைந்தஅந்தக் குழந்த… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்