பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

வெள்ளி, 31 ஜூலை, 2009

அப்பா........
வெள்ளை ரோஜாநிஜப்பெயரில் புரிந்ததைக்
காட்டிலும்......
புனைப்பெயரில் அறிந்ததுதான்
அதிகம்............
உம்மை சந்தித்தால் கேட்பாளாம்,
என் தோழி....
“புனைப்பெயரில் மறைவதேன்..?” என,

அவளுக்கு மட்டுமல்ல பலருக்கு
தெரிவதில்லை.....
பெயர் மாற்றம் அல்ல இது,..!
சிந்தனை உருமாற்றம்,

நமக்குள் இயங்கும் இன்னொருவன்..!
நம்மை ஆட்சிபுரியும் இன்னொருவன்..!
இவன்,
நிஜப்பெயரில் ஏற்பட்ட வலிகளையும்
அவமானங்களையும் கலையும் ..
வித்தைப் புரிந்தவன்.... கற்பனை
விந்தின் உதித்தவன்......

உமக்கான நண்பர்கள்
என்னை நெருங்கினாலும்..
உமக்கு இன்பம்தான்...?

நாம் செல்லும் ஒவ்வொரு
நிகழ்ச்சிக்கும்......
பின் இருக்கை உமக்கும்
முன் இருக்கை எமக்கும்
தயாராய் இருக்கும்....உம் விருப்பப்படி.....!?
இடுப்பில் குத்தி என்னை,
எழவைத்து..
மேடைக்கு அனுப்பியது நிச்சயம்
உம் சாமர்த்தியம்........

ஆரம்பக்காலத்தில் எமக்கும்
எரிச்சல் வந்தது.....
உம் தந்தை தவறியதையும்
எம் தந்தை செய்வதையும்
உணரும் முன்பு........!

உமக்குள்ள பெண்
ரசிகர்களை மிஞ்ச எமக்கு..
கொஞ்சம் ‘அதிகம்தான்’ அவகாசம்
தேவை.....!

அதெப்படி அம்மாவைத்தவிர
பலர் உம் ரசிகைகள்.....
சிரிப்புதான் வருது...... எம் ‘கதை’யில்
குற்றம் தேடும்போது..
அம்மா எனக்கு வக்காலத்து
வாங்குவதும்...
சில சமயம் எம் கதையைப் படித்துக்காட்ட...
இப்படியும் நடக்குதா? என அம்மா....
ஆச்சர்யபட..
அம்மாவுக்கு தமிழ் தெரியாதது..
எவ்வளவு வசதி உமக்கு.......?
படைப்பவரின் மகன்
படைப்பதில்லையாம்.....
உம் மாதிரி அப்பா
கிடைக்காததாலோ.......!

“புலிக்கு பொறந்தது பூனையாகுமா ?”
இப்படியாகச் சொன்É¡லும்..

இது புலியை மிஞ்சும் பூனையென......!
சொல்லும்போது..
அப்பாவா..? ஆசானா..?
குழப்பம் ஏற்பட்டாலும்..
எம் எழுதுகோல் ,
என்றும் உம்
எழுத்தின் வாரிசுதான்..........


கண்முன்னே
“முடியுமா?” என
கொட்டினாலும்..,
மறைமுகமாய் எம் உழைப்பை
தட்டிக்கொடுப்பதை உணர்ந்தேன்......

எõ வயதினர்,
மோட்டாரில் பயணிக்கும்போது..
எம்மை நடக்கவைத்தது..
எõ சிறகுக்கு அளித்த பயிற்சியென..!
உணராமல் இல்லை....

என் மனதில்..
வயதின் காரணமாய் ஏற்பட்ட
சபலத்தை மாற்றினீர்.....!
“மாற்றம் ஏற்படும்” என்ற
நம்பிக்கைப் பார்வையில்..

அண்ணன் தம்பியென நம்மை,
நம்மை அறிந்திருப்போரை..... நினைக்கின்றேன்..!
எம்மது முதுமையா..?
உம்மது இளமையா..?

அந்த பயமே உம் அருகிள் நடக்க எனக்கு.........

பிறந்த தோட்டத்தை மறந்து பலர்.....பறக்க...!
இன்னமும் உம் பெயருக்குப்பின்னால்
வாழ்கின்றது..
உன்னை வளர்ந்த தோட்டம்...
நம் 'யு.பி' தோட்டம்,

அடிக்கடி சொல்லும் அறிவுரையில்
கட்டாயம் இடம்பெறுவது...
"பொண்ணுங்க விசியத்திலே பார்த்துடா....?!! "

உங்க பிள்ளைதானே.......????

ஆயிரம் மகுடங்கள் கூடினாலும்,
எமக்கான 'வைர கிரீடம்.......'

"வெள்ளைரோஜாவின் பிள்ளைரோஜா"
எனச் 'சொல்லும் 'கிரிடம்

அது ''வெல்லும் கிரீடம்

இப்படிக்கு,
பிள்ளை ரோஜா.....
..................தயாஜி வெள்ளைரோஜா...................


சனி, 25 ஜூலை, 2009

எனது புரிதல்..


என் தலைக்கணத்திற்கு மருந்தாக தலைவலிகளைத்தேடி நானே செல்கின்றேன்.... என் தேடல் எனக்கு மட்டும் புரிகின்றது..... ...!!


வெள்ளி, 24 ஜூலை, 2009

தப்பு என் மேலதான்... (நிஜம்)“எனக்கு எங்க அப்பாவைதான் ரொம்ப பிடிக்கும். எப்போதும் அறிவுரை சொல்லிக்கிட்டு இதை செய்யாதே, அதை செய்யாதேன்னு,சொல்ற அம்மாவைப் பார்த்தாலே எரிச்சல்தான் வரும்..........
அனா,இப்பதான் அம்மா சொன்னது என் நன்மைக்குன்னு புரியுது..!”

“அப்போ அப்பாவை சுற்றி எப்பவும் சிலர் இருப்பாங்க. அப்பாதான் ‘தலை’
அவர் பேச்சைதான் எல்லோரும் கேட்பாங்க.... அப்பா யாருக்கும் பயப்பட மாட்டாரு போலிசைத் தவற.... ஏன்னு தெரியாது..!”

“எனக்கும் அப்பா மாதிரி ஆகனும்னு தோனிச்சி..... அம்மாதான் படி படின்னு கஷ்டபடுத்துவாங்க....அப்போ நான் அதை உணரலை..!
அப்பாவைப்போலவே நடந்தேன், பேசினேன் அவருக்கு சிலர் வாங்கிகொடுத்த சிகரெட்டை யாருக்கும் தெரியாம குடிச்சேன்... அம்மா கண்டுபிடிச்சி திட்டினாங்க ஆனா அப்பா தெரியாதாமாதிரி இருந்தாரு.”

“எனக்கு எது சரின்னுப்படுதோ அதை செய்ய ஆரம்பிச்சேன்..! எல்லாரும் பயப்பட்டாங்க....இப்போ யாரும் திரும்பிக்கூட பார்க்கமாட்ராங்க.....!”

“தப்பு என்மேலதான்”

என தன் சொந்தக் காதையை சொல்லிமுடித்ததும் அந்த
இளைஞன் தட்டித்தடுமாறி எழுந்து நடக்கத்தொடங்கினான் தன் ஒற்றைக்காலோடு........
கஷ்டமாகத்தான் இருந்தது.காலம் கடந்துவிட்டதே..!!!

என் தமிழ் காதலிக்கு.......!


என் “தமிழ்”க் காதலிக்கு.......


வெயிலில் வேர்க்கின்றது.....
மழை நனைக்கின்றது....
காற்று தீண்டுகின்றது....

மகிழ்வில் சிரிப்பும்.....
கவலையில் கண்ணீரும்....
அளவாகவே வருகின்றது.......

விலாசம் மறக்கவில்லை...
விதியில் நம்பிக்கையில்லை....

சமிஞ்சை விளக்கு
கவனிக்கப்படுகின்றது......

கால் சட்டையும்,
மேல் சட்டையும்...,
வசதியாய் அமர்கின்றது......

புகைப்படங்கள் பேசுவதில்லை.....

பெயர் சொல்லி அழைத்தால்,
உணரமுடிகின்றது.........

மூணு வேலையும்,
பசிக்கின்றது.......

கடிகார நேரத்தைக்,
கணக்கெடுத்ததில்லை.....

இரவில் தூக்கமும்,
பகலில் தெளிவும்,
தொடர்கின்றது.........

கடிதங்கள் கடவுளாகவில்லை,
கவிதைகளை ரசித்ததில்லை........

பேனா மை முடிவதில்லை,
குப்பைகள் நிறைவதில்லை........

வாசனைப்பொருள் வாங்குவதில்லை,
வசதிக்காக ஏங்குவதில்லை........

கையெழுத்தில் குழப்பமில்லை,
காலுறைகளும் புதிது அல்ல........!

காதல் படங்கள் பார்ப்பது குறைவு,
காதல் கதைகளில் ஆர்வமில்லை.......

‘இப்படியே’ பயணமாகிக் கொண்டிருந்தேன்.....?
‘அவளை’ப் பார்க்கும்வரை.....!!!
..........தயாஜி வெள்ளைரோஜா..............

வெள்ளி, 17 ஜூலை, 2009

Popular Posts

Blogger templates

Categories

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்