பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 25, 2020

ஆவிகளுடன் பேசுவது எப்படி ?



    இது விளையாட்டல்ல. முதலில் உங்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். நம்மை மீறிய ஏதோ ஒன்று இருப்பதை நம்ப வேண்டும். அல்லது இருப்பதாக நம்ப வேண்டும். அதுதான் நாம் செய்யவிருக்கும் காரியத்திற்கான முதல் வேலை.

      நெகட்டிவ் பாசிட்டிவ் போல எல்லா இடத்திலும் இரண்டு தரப்புகள் இருக்கின்றன. ஒன்று தூய சக்தி இன்னொன்று தீய சக்தி. அந்த இரு வித சக்திகளிலும் பல்வேறு நிலைபாடுகள் உள்ளன. ஆனால் நமக்கு அவை தேவையற்றவை.

   ஆவியுடன் பேசுவதற்கான அடிப்படைகளின் மூலத்தை சொல்லி விட்டேன். மேற்கொண்டு செய்ய வேண்டியவைக்கு வரலாம்.

   உங்களுக்கு நன்கு பழக்கமான ஒருவரின் புகைப்படத்தையும் பெயரையும் ஏற்பாடு செய்துக் கொள்ளுங்கள். மறந்துவிட்டேன்! அவர் செத்துப் போயிருக்க வேண்டும். அதற்காகவே ஒரு கொலையை செய்துவிட்டு என்னை போலீஸீல் கோர்த்து விட்டுவிடாதீர்கள். 

   முக்கியமாக செத்துப்போனவர் நல்லவராக இருக்கவேண்டும். அது சிக்கல் இருக்காது. நல்லவர்களைத்தாம் சீக்கிரம் கொன்றுவிடுவார்களே..

    நள்ளிரவு 12.00க்கு சரியாக இருட்டறையில் அமர வேண்டும். மெழுகுவர்த்தி இருக்க வேண்டும். பிடித்தமான வாசனையுள்ள ஊதுபத்தி இருக்க வேண்டும். எடுத்து வைத்திருந்த இறந்தவரின் புகைப்படம் இருக்க வேண்டும். அதன் கீழ் வெள்ளைக் காகிதத்தில் சிவப்பு வண்ணத்தில் அவரின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள். இப்பொழுது கண்களை மூடிக் கொள்ளுங்கள் (உடனே அல்ல.!! முழுக்க வாசித்து முடித்த பின்). ஆழ்ந்து மூச்சை இழுத்து விடவும். மெல்ல விட வேண்டும். அவசரப்பட்டு முழுக்கவும் விட்டுவிடாதீர்கள். அப்பறம் உங்கள் புகைப்படம் இன்னொருவருக்கு தேவைப்பட்டுவிடும்.

      எழுதி வைத்த பெயரை மெல்ல மெல்ல சொல்ல வேண்டும். அப்படியே கண்களை மூடிக்கொள்ள வேண்டும். விடாது அந்த பெயரைச் சொல்ல வேண்டும். அறை முழுக்க அந்த பெயர் நிறைய வேண்டும். உங்கள் உடல் தானாக சிலிர்க்கத் தொடங்கும். மெல்ல உங்கள் கைகளில் அதிர்வு ஏற்படும். நீங்கள் கூப்பிட்ட ஆவி உங்கள் முன் வந்துவிட்டதற்கான அறிகுறி இதுதான்.

   கண்களைத் திறக்க வேண்டும். இப்போது உங்கள் முன் ஒரு வெண்மேகம் வடிவில் ஓர் உருவம் தெரியும். அதன் ஒளி உங்கள் கண்களைக் கலங்கச் செய்யும். அதுதான் நாம் பேச அழைத்த ஆவி என அறிக. அதன் பிறகு நீங்கள் ஆவியுடன் பேச ஆரம்பிக்கலாம்.

   ஒரு வேளை அப்படி ஏதும் நடக்கவில்லை என்றாலோ ஆவி வரவில்லை என்றாலோ கவலை வேண்டாம். எனக்கும் வரவில்லைதான். இருவரும் சேர்ந்து இன்னொரு முறை முயற்சிக்கலாம்.


#தயாஜி

Related Posts:

  • முதலிரவு (கற்பனை கடந்து........)“ஏங்க நம்மை நம்ம வீட்டில உள்ளவங்க ஏத்துக்குவாங்களா..?” “இந்த நேரத்தில் போய்... இந்த கதை தேவையா..? நேரத்தை ஏன்தான் இப்படி வீணடிக்கிறயோ..... !”“என்னங்க … Read More
  • அடுத்தது நீ............ #3/8 முதல் 14/8 வரை மின்னல்fm (மின்னல் பன்பலையில்) நாள் ஒன்றுக்கு 2 நிமிடம் முதல் 3 நிமிடம் வரை ' எண்ணங்கள் வண்ணங்கள் ' தொகுப்பில் பிற்பகல் மணி… Read More
  • x-சும் y--யும்அந்தத் தினம் வென்றது ஒரு எக்ஸ்! அந்தப் புள்ளி முட்டையின் அருகில் வந்து சேர்ந்தது அதன் மேல் அழுத்தி அதனுள் ஒரு துளையிட்டு உள்ளே புகுந்து வாலைப் புறக்கண… Read More
  • என் தமிழ் காதலிக்கு.......!என் “தமிழ்”க் காதலிக்கு.......வெயிலில் வேர்க்கின்றது.....மழை நனைக்கின்றது....காற்று தீண்டுகின்றது....மகிழ்வில் சிரிப்பும்.....கவலையில் கண்ணீரும்....அள… Read More
  • காத்திருங்கள்............ஸ்.....சத்தம் போடாமல் அழுங்க....அவன் தூங்கறான்....பாருங்களேன் சிரித்த முகமாய்..அவனின் தூக்கம்.....என்ன,குறட்டைதான்காணோம்...?!.ம்........ம்.....… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்