பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

வியாழன், 21 ஜூன், 2012

அதே மோதிரம் 5 - மர்மத் தொடர்

À¡¸õ 5    உடைந்த கைபேசியில் இருந்து இப்படியொரு குறுஞ்செய்தி வருவது சாத்தியமா..? வந்திருக்கிறதே! எப்படி..?
    மணியின் கைபேசி கோளாறை எப்படி சொல்வது. அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் சில சமயம் இதைவிட தாமதமாகவும் கிடைத்திருக்கிறதுபல முறை பொம்மி சொல்லியும் தன் கைபேசியை மணி மாற்ற விரும்பவில்லை.
    வழக்கம் போலவே எழுந்தவன் அலுவலகம் சென்றான். வழக்கத்திற்கு மாறாக மணியின் முகம் வேறுமாதிரி இருந்தது. யார் கவனித்தார்களோ இல்லையோ மணியின் மேலதிகாரி கவனித்திருக்க வேண்டும். மணி, முதலாளி அறைக்கு அழைக்கப்பட்டான். மதிய உணவு நேரம். கைபேசியைக் கையில் எடுக்காமலேயே மதியம் வரை மணி கடந்திருப்பது அதிசயம்தான். பொம்மி நிச்சயம் மூன்றுமுறையாவது அழைத்து பேசிவிடுவாள். மணியும் அப்படித்தான். ஒரு அலுவலகத்திற்கே தெரியும் மணி அழைக்கும் நேரமும் பொம்மி அழைக்கும் நேரமும். கிண்டலும் இடம்பெறுவதுண்டு.
   மேலதிகாரியின் அறை,
வணக்கம் சார்...”
வணக்கம் மணி. உட்காருங்க.... ”
சார் கூப்டிங்கலாமே...?”
ஆமாம். வேலையெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு.”
ஏன் சார்..? என் வேலையை நான் சரியாதான் செய்துகிட்டு வரேன். ஏன் ஏதும் பிரச்சனையா..?”
ச்சே ச்சே, பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்ல.... கொஞ்சம் குழப்பம் அதான்.”
குழப்பமா.. என்ன சார் ஆச்சி..”
அதை நான் உங்களை கேட்கனும். அதான் கூப்டேன்
ஒன்னும் புரியலையே சார், யாரும் என் மேல புகார் கொடுத்திருக்காங்களா சார்..?”
அதையெல்லாம் காது கொடுத்து கேட்க எனக்கு நேரம் இல்லை மணி. நீங்கள் இங்க வேலைக்கு வந்து மூனு வருசம் ஆகியிருக்குமா..?”
இருக்கும் சார்.”
ஒவ்வொருமுறையும் உங்க வேலையில் ஒரு சுறுசுறுப்பு இருக்கும், வேகம் இருக்கும், தெளிவு இருக்கும். ஆனா இப்போ...”
ஆனா என்ன சார்...எனக்கு புரியல
எனக்கும்தான் புரியலைஇந்தாங்க இதை பாருங்க...”
    மேலதிகாரி மணியிடம் சில கடிதங்கள் உள்ள கோப்புகளை நீட்டினார். மணி அந்த கோப்புகளை ஒவ்வொன்றாக பார்க்கப் பார்க்க இதயத்துடிப்பு அதிகரித்தன. கைகள் நடுங்கின. குளிர்சாதன அறையிலும் வேர்த்தது.
    வேலைக்கு வந்த சில மாதங்களிலேயே, வேலைகளைக் கற்றவன் மணி. பாகுபாடின்றி அனைத்து வேலைகளையும் செய்ய தயார இருப்பான். மேலதிகாரி சொன்னது போலவே, எப்போதும் வேலையில் வேகமும் சுறுசுறுப்பும் இருக்கும். ஆனால் இப்போது..!
   வழக்கமாக மணி பார்வையிட்டு கையெழுத்திட வேண்டிய கடிதங்களில்தான் அப்படியொரு அதிர்ச்சி. ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட்டுருந்தான். எப்போதும் அப்படித்தான் செய்வது வழக்கம். ஆனால், இப்போது அந்த ஆச்சர்யம், குழப்பம் அதே கையெழுத்துதான். மணி என கையெழுத்திடும் எல்லா இடங்களிலும் யாதவி என்ற பெயரை எழுதியிருந்தான்.
   யார் அந்த யாதவி..!
மணியின் கை அந்த கையெழுத்தை பயத்தில் தடவியது. மோதிர விரல் அந்த பெயரை தடவியதும் இதுவரை இருந்த பயம் மணிக்கு இல்லை. மோதிரம் மின்னியது அவனது கண்களும். இதுவரை தான் சிரித்திடாத ஒருவகை சிரிப்பை சத்தமின்றி சிரித்தான்.
   “மணி... மணி...”
   ஏதோ மயக்கத்தில் இருந்தவன் தெளிந்தான்.
ம்..ம்.ம்.ம் என்ன சார்..?”
என்ன ஆச்சி மணி உங்களுக்கு..? யார் இந்த யாதவி..?”
தெரியலை சார்..”
இது வழக்கமா நீங்க பார்வையிடும் கோப்பு தானே..?”
ஆமாம்
எப்போது நீங்கதானே சைன் வைப்பீங்க..?”
ம்
அப்போ இதில் யாதவின்னு எழுதினது நீங்கதானா..?”
அதான் சார் எனக்கும் தெரியலை... குழப்பமா இருக்கு...”
சரி, உங்களைப் பார்த்தாலே தெரியுது. ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் இதை பார்த்துக்கறேன். உங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை கொடுக்கறேன்......”
முடிப்பதற்குள் மணி,
சார்....!”
மணி இது நான் கொடுக்கற தண்டனை இல்லை. நீங்க நல்லா வேலை செய்யற ஒரு ஆள். எனக்கு என்னமோ இந்த குழப்பத்துக்குக் காரணம், அதிகமான வேலைப்பளுன்னு நினைக்கிறேன். நீங்க நிம்மதியா ஒரு வார விடுமுறைக்கு பிறகு புது தெம்போடு வாங்க. நம்பறேன்.”
நன்றி சார்...”
   மணி, கோப்புகளுடன் வெளியேறினான். இன்னும் பொம்மியிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. மணி அதனை சட்டையும் செய்யவில்லை. அலுவலகத்தின் தன் இடத்தில் செய்ய வேண்டிய வேலைகளை நண்பர்களிடம் கொடுத்து கிளம்பினான். மின் தூக்கிக்கு வந்ததும் அருகில் மேலதிகாரி அறையை பார்த்தான்.
   மீண்டும் ஒருமுறை மேலதிகாரியுடம் சொல்லி விடைபெற அறைக்கதவை திறக்க முயற்சித்தான் மணி, கதவில் கை படும் முன்பே மின் தூக்கி திறந்தது. அதில் மேலதிகாரிதான் வந்தார்.
என்ன மணி கிளம்பியாச்சா..?”
ஆமாம் சார், அடுத்த வாரம் தெளிவோட வருவேன்னு நினைக்கிறேன்.”
கண்டிப்பா அந்த நம்பிக்கையில்தான் நானும் இருக்கேன். இந்த விடுமுறையில் நிச்சயம் உங்களுக்கு பதில் கிடைக்கும், கிடைக்கனும்
சார்..!”
கவனமா போய்ட்டு வாங்க...”
மேலதிகாரியின் பேச்சு மணிக்கு புரியவில்லை. தலையாட்டியவாரே மின் தூக்கியில் நுழைந்தான். அப்போது,
எது எப்படியோ மோதிரம் பத்திரம் மணி!”
சொல்லி சிரித்தார் மேலதிகாரி.
மின் தூக்கி மூடியது.
 கீழ் நோக்கி இறங்கியது.
 நின்றது.
 கதவு திறந்தது.

எதிரில் மணியின் மேலதிகாரி. அவரே பேச ஆரம்பித்தார்,
மணி நீங்க வேலைக்கு வந்ததில் இருந்து இப்பதான் முதன் முதலா ஒருவாரம் விடுமுறை கேட்டிருக்கிங்க. ஏன் ஏதும் விசேசமா.... , கல்யாணம் வேலைன்னு சொல்லுங்க. சரி சரி பார்த்து கவனமா இருங்க. ஒரு வாரம் கழிச்சி பார்க்கலாம்.”
மணிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. மேலதிகாரிதான் விடுமுறை கொடுப்பதாக சொன்னார். இப்போது தான் விடுமுறை கேட்டதாக சொல்கிறார். இதனையே திரும்ப திரும்ப யோசித்ததால், மாடியில் பார்த்த மேலதிகாரி எப்படி தனக்கு முன் கீழே வந்தார் என்பதை யோசிக்கவில்லை. அலுவலகத்தை விட்டு வெளியேறினான்.
    எல்லா குழப்பத்திற்கும் இந்த மோதிரம்தானே காரணம், இதை எப்படியாவது கழட்டுவது என முடிவெடுத்தான்.
வலது கை விரல்களை விரித்தான். கையை திருப்பித்திருப்பி மோதிரத்தைப் பார்த்தான். இடது கையை வலது கைபக்கம் கொண்டுவர மணியால் முடியவில்லை. இரு கைகளுக்கும் இடைவெளிகள் அப்படியே இருந்தது. இடது கை எவ்வளவு நெருக்கமாக வலது கைபக்கம் வர முயல்கிறதோ அவ்வளது தூரமாக வலது கை நகர்ந்தது. நேருக்கு மாறான இரு காந்தங்களை ஒட்ட வைக்க முயலும் போது காந்தம் நகர்ந்துக் கொண்டே இருப்பது போல் இருந்தது.
   மோதிரம் மணியில் விரலில் இறுகுவது போல் உணர்ந்தான் மணி. வலித்தது. அந்த மோதிரம் மீண்டும் ஜொலிக்க ஆரம்பித்தது. இந்த முறை அந்த மோதிரத்தில் மணியால் ஒரு பெண்ணின் உருவத்தைக் காண முடிந்தது.
    அவள்................

அவள் குறித்த அறிமுகம் அடுத்த வாரம்

(தொடரும்)
நன்றி ஜூன் 2012 'அன்பு இதயம்.'

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

Blogger templates

Categories

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்