பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 16, 2022

- பாவத்தின் சம்பளம் -

பேயைப் பார்த்தால் யார்தான் பயப்படமாட்டார்கள். அதனால்தான் இன்று இருவரும் இங்கு வந்திருக்கிறார்கள். 
எப்படியாவது எவ்வளவு செலவு செய்தாவது அந்தப் பேயிடமிருந்து தப்பிக்க வேண்டும். 

இறந்த சில நாட்களில் இப்படி பேயாக வந்து நிற்பாள் என அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. தெரிந்திருந்தால் தங்களின் முகங்களை அவளிடம் காட்டாமலேயே அவளை சிதைத்திருப்பார்கள். அல்லது பணத்தையும் பலத்தையும் காட்டி மிரட்டி விட்டிருப்பார்கள்.

இப்போது செத்து பேயாக வந்து நிற்கிறவளை எப்படி மீண்டும் சாகடிப்பது. அவர்களால் முடியாது. அதனால்தான் இங்கு வந்திருக்கிறார்கள். மொத்தமாக ஆளுக்கு பத்தாயிரம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்ற பூஜை நடந்துகொண்டிருக்கிறது.

இரண்டு மணிநேரத்தில் பூஜை முடிந்தது. ஆனால் பூஜை முழுமையாக நிறைவு பெற,  பூஜையில் கொடுக்கும் தண்ணீரை வீட்டைச் சுற்றியும் தெளிக்க வேண்டும். ஆனால் அதற்கு அந்தப் பேய் விடாது. அது இவர்களை நெருங்காதபடிக்கு இருவர் நெற்றியிலும் விபூதியை வைத்துவிட்டார்கள்.

நெற்றியில் விபூதி இருக்கும்வரையில் அந்தப் பேய் இவர்களை எதுவும் செய்யாது. அதற்குள் அவர்கள் வீட்டிற்கு சென்று பூஜை நீரை வீட்டில் தெளிக்க வேண்டும். 

பணமும் பூஜையும் கொடுத்த நம்பிக்கையில் வீட்டை அடைந்தார்கள். வீட்டைவிட்டு சற்று தூரத்தில்தான் வாகனத்தை நிறுத்த முடிந்தது. கையில் பூஜை தண்ணீருடன் இருவரும் மெல்ல நடக்கலானார்கள்.

ஏதோ ஒன்று, இருவர் தலையிலும் சொட்டியது. என்ன இதுவென மேலே பார்க்கவும். மறு நொடியில் பேய்மழை. அடுத்த அடி வைப்பதற்குள் இருவரும் முழுக்க நனைந்துவிட்டார்கள்...

Related Posts:

  • கண்மணி அன்போடு காதலன்    'கண்மணி அன்போடு காதலன்'           கே.கவி நந்தன் இயக்கிய டெலிமூவி. நேற்றைய இரவு கண்மணியோடும் காதலோட… Read More
  • 'அவளும் என் கவிதைகளும்' உன்னால் என் கவிதைநூலுக்கு என்ன கொடுக்கமுடியுமென்பதே விவாதம் எதுவும் பேசவில்லைஎழுந்தாள்என் கவிதை நூல்களைஒன்றின் பின் ஒன்றாக கோர்த்தாள்படுத்… Read More
  • புத்தகவாசிப்பு_2020_9 ‘ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள்’ #புத்தகவாசிப்பு_2020_9  ‘ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள்’ புததகம் –ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள்’ எழுத்து – அதி. இராஜகுமாரன் பதிப்பகம் – மழை… Read More
  • மந்திரக்காரி நீ வரைவதற்கு கொடுத்திருந்த காகிதங்களைக் காணவில்லை வைத்த இடம் நினைவில் உண்டு காகிதங்களைக் காணவில்லை வரைவதற்கு நான்  என்னை தயார்படுத்தித் திர… Read More
  • தற்காலிகத் தனிமை        இன்னும் இரண்டு வாரங்கள். நேரலையில் பிரதமர் பேசி முடிக்கப்போகிறார். சுகுமாறனுக்கு அது மன உளைச்சலைக் கொடுத்தது. சுகுமாறனு… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்