பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 30, 2020

சர்க்கஸ் துப்பாக்கி

    உண்மையில் சாகசம்தான். நூறு மீட்டர் தூரத்தில் இருந்தாலும் குறி தப்பவில்லை. நின்றிருக்கும் வட்ட மேஜையில் அவள் சுழன்றுக் கொண்டிருந்தாள். மிகச் சரியாக  கைக்கு அருகில், காலுக்கு அருகில், கழுத்திற்கு அருகில் என, சுடும் துப்பாகி குண்டு சரியாகப் பட்டது.   அந்த துப்பாக்கி சுடும்...

ஜூன் 29, 2020

ஆளுக்கொரு ஆசை

     இன்னும் நான்கு எண்கள் உள்ளன. உள்ளே போனவர்கள் அங்கேயே தூங்கிவிட்டார்களா தெரியவில்லை. மீதமுள்ள நான்கு பேர்களும் உள்ளே சென்று வருவதற்குள் நான் தூங்கிவிடுவேன் போல. என முணுமுணுத்துக் கொண்டே இருந்தான் கேசவன்.    கைராசியாக மருத்துவர். பலரும் இவரது மருத்துவத்தாலும் ஆலோசனைகளாலும்...

ஜூன் 28, 2020

நான் ஒரு பென்சில்

     நான் மிகவும் அழகாக இருப்பேன். நான் ஜப்பானின் பிறந்தேன். என்னுடன் பல வண்ணங்களில் நண்பர்கள் பிறந்தார்கள். நான் மஞ்சள் வண்ணமாக இருந்தேன். நாங்கள் பிறந்த சில நாட்களிலேயே எங்களை தனியாக பெட்டியில் அடைத்தார்கள். இருட்டாக இருந்தது.      கண் விழித்துப் பார்த்தேன். என்னைச்...

ஜூன் 27, 2020

பூனைகளின் ராஜ்ஜியத்தின் உய்யலாலா...

    தம்பதிகள் கைகோர்த்தபடி அத்தனை நெருக்கமாக இருக்கிறார்கள். ஒவ்வொருவர் முகங்களிலும் பலவித எதிர்ப்பார்ப்புகள். இளம் தம்பதிகள் முதற்கொண்டு பல வயதுகளில் தம்பதிகள் இருக்கிறார்கள். அதோடு ஆண்கள் ஒரு குழுவாகவும் பெண்கள் ஒரு குழுவாகவும் இருக்கிறார்கள். ரசிக்கிறார்கள். லயிக்கிறார்கள். மிதக்கிறார்கள். ...

ஜூன் 26, 2020

இருட்டு அறையில்..

   சுட்டித்தனத்திற்கு ஒரு அளவு வேண்டாமா. தினமும் இதே தொல்லைதான். இன்றும் சித்தி கோவத்தின் உச்சிக்கு சென்றுவிட்டார். இறங்கி வரத் தெரியவில்லை. அவனோ கைக்குக் கிடைக்காமல் ஓடிக்கொண்டே இருந்தான்.    எப்படியாவது அவனை பிடித்து, அடித்து, உதைத்து , துவைத்து, பிழிந்து, காயப் போட்டுவிட துடித்தார்....

ஜூன் 25, 2020

கடவுளும் கேள்விகளும்

   சில நாட்களாகவே ஆஸ்துமா அதிகமாகியிருந்தது. முச்சு விட சிரமம் ஏற்பட்டது. மருந்துகளுக்கும் மருத்துவருக்கும் அவை அடங்கியபாடில்லை. முத்தன நாள் நடு இரவில் மூச்சுத் திணறல் அதிகமாகிவிட்டது. எப்படியோ வீட்டில் உள்ளவர்கள் சமாளித்தார்கள்.   இனி மருந்துகள் பயனில்லை. ஹீலிங் போகலாம். தனக்கு...

ஜூன் 24, 2020

கடவுள் VS சாத்தான்

    தான் விளையாடிக் கொண்டிருப்பது கடவுளிடமென்ற பயம் கொஞ்சம் இல்லை. அந்த சாத்தானின் மனம் முழுக்க ஆட்டத்திலேயே இருந்தது. அதிஸ்டவசமாக    அது வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தது.     எல்லாம் அறிந்திருந்தார் கடவுள். ஆடுபவர்களை முதலில் ஆடவிட்டு பிறகு ஆட்டத்தை முடித்து வைப்பது...

ஜூன் 22, 2020

அந்த கண்கள் விற்பனைக்கல்ல...

   பல பெண்களை கடந்துவிட்டான். அவர்களின் பல கண்களை கடந்துவிட்டான். ஆனாலும் எந்த கண்களும் அவனுக்கு கொடுக்காததை இந்த கண்கள் கொடுத்தன.    கண்கள் என்ற பெயரில் காந்தத்தை வைத்திருந்தாள். முதல் பார்வையிலேயே முழுவதும் ஈர்க்கப்பட்டான். இன்றுவரை அப்படியே. கொஞ்சமும் மாற்றமில்லை.   கண்களுக்கென்றெ...

ஜூன் 20, 2020

ஆண்பால் பெண்பால் அன்பால்

ஒரு நாள் இன்பத்திற்கென இன்னொரு பால் முகம் கொண்டு நீள் கூந்தல் வில் வடிவ புருவம் மெல்லிய உதடு மெலிதான வெட்கம் தனக்கே தனக்கான புகைப்படங்களைப் பகிர்ந்து மகிழத் தெரிந்த நமக்கு இன்னொரு பால்தான் தன் பால் என அன்பால் அதன் பால் தன் மொத்த வாழ்நாளையும் சுமந்து நிற்பர்வர்களை எப்போதும் உணரத்தெரிவதில்லை....

அதனதன் இருப்பும் அதனதன் இயல்பும்

-அதனதன் இருப்பும் அதனதன் இயல்பும்-        அப்போதுவரை பணக்காரர்கள் என்றாலே திமீர் பிடித்தவர்கள் என்றுதான் நினைத்திருந்தான். அந்த குளிரடிக்கும் கார்காரரின் பேச்சு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. பறவைகளை பிடித்து வந்து விற்பதுதான் தற்போதைய ஒரே தொழில். அடுத்தவர் காலுக்கு கீழ்...

வெட்டுக்கிளிகள்

- வெட்டுக்கிளிகள் -        அம்மாவின் அறைக்குச் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டன. அந்த மரணத்தை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அப்பாவிடம் முகம் கொடுத்துக்கூட பேசுவதில்லை. அவ்வபோது ஆறுதல் சொல்ல வரும் பெண்களிடம் அவன் பேசுவதில்லை. பணக்காரர்கள் எல்லாம் நிம்மதியானவர்கள் என்ற சொன்னவர்களை...

ஜூன் 17, 2020

பேயாவது பிசாசாவது...

   முதலில் பயம் இருந்தது. இப்போது இல்லை. முழு வீடியோ காட்சியையும் பார்த்துவிட்டாள். பிறகு எதற்கு பயப்பட வேண்டும்.    ராஜ் வாங்கிக் கொடுத்த கரடி பொம்மை அவ்வபோது நகர்ந்து அமர்ந்து மாயாவிற்கு பயத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஒரு முறை பார்த்தால் ஒரு வாக்கிலும் ஒன்னொரு முறை பார்த்தால்...

ஜூன் 16, 2020

உரையாடல்

   வீட்டிற்கு வந்தாள். கைபேசியை எடுத்து வைத்தாள். கையில் கொண்டு வந்திருந்த எதையோ மேஜையில் வைத்தாள். நாற்காலியில் அமர்ந்திருப்பவனுக்கு எதும் எந்த சலனத்தையும் கொடுக்கவில்லை. கைபேசியில் வேகவேகமாக எதையோ எழுதிக் கொண்டும் சத்தமின்றி சிரித்துக் கொண்டுமிருந்தான். அவளும் அவனை சட்டை செய்யவில்லை....

ஜூன் 15, 2020

முகத்தைத் தேடி

    ஆமாம். அது முகம் தான். பார்த்தீர்களா? நீங்களும் பார்க்கவில்லையா. ஓ மை காட். காலையில் இருந்து தேடிக் கொண்டிருக்கிறேன். விசாரித்துக் கொண்டும் வருகிறேன். யாருமே பார்க்கவில்லையாம். உண்மையைத்தான் சொல்கிறார்களா இல்லை. அவர்களும் பயப்படுகின்றார்களா தெரியவில்லை.    ஏன் பயப்பட வேண்டும்....

ஜூன் 14, 2020

அம்மாவின் நட்ச்சத்திரம்

- அம்மாவின் நட்ச்சத்திரம் -    அந்த நபரின் பெயர் மறந்துவிட்டது. காலையில் நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவர் அவனிடம் வந்தார். அவனது அம்மாவின் பெயரைச் சொல்லி, அவரது மகனா என கேட்டார். அவனும் ஆமாம் என்றான்.அம்மாவும் அவரும் பள்ளித் தோழர்கள் என்றுச் சொல்லி அவரை அறிமுகம் செய்துக்கொண்டார்....

சீ.முத்துசாமியின் 'மண்புழுக்கள்'

சீ.முத்துசாமியின் மண்புழுக்கள் (மலேசிய) நாவல் குறித்து.. வழக்கமாக நம் நாட்டு படைப்பாளிகளால்  எழுதப்படும் படைப்புகளில், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அக்காலக்கட்ட தமிழக தாக்கங்கள் ஓரளவேனும் இருந்துவிடுகிறது. திராவிட எழுத்தின் எழுச்சி மொழி, மு.வ மொழி என ஒப்பிட்டுப்பார்த்து இந்த நிலைப்பாட்டை...

ஜூன் 13, 2020

மீசை...

   வலது பக்கத்தில் ஒரு கோடு. இடது பக்கத்தில் ஒரு கோடு. அழகாக அமைந்துவிட்டது. அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் இது போதுமா என தெரியவில்லை. அப்பாவின் முகத்தை நன்றாக நினைவுக் கூர்ந்தாள். கொஞ்சம் மொத்தமாக இருக்க வேண்டும். ஆக இந்த கோடுகள் போதவில்லை என்பதை உணர்ந்தாள்.  மகள் என்னதான்...

ஜூன் 12, 2020

கருப்பும் வெளுப்பும்

"அன்னிக்கு திடீர்னு இருட்ட ஆரம்பிச்சது. மழை வரும்னுதான் முதல்ல நினைச்சோம். ஆனா அது மழை மேகத்துனால வந்த கருப்பு இல்ல..""அப்பறம்..?""எங்களை அழிக்க வந்த கருப்பு.""ஹையோ...!!""அந்த இருட்டு அனல் போல ஒவ்வொன்னா பொசுக்கத் தொடங்கிச்சி.. நாங்க எல்லாம் ஆளுக்கு ஒரு மூலைக்கு ஓடினோம். ஆனா அந்த இருட்டு இன்னும் வேகமா...

ஜூன் 10, 2020

ஊஞ்சலாட்டம்

   முதலில் அவள் நம்பவில்லை. அவன் அதை எதிர்ப்பார்க்கவும் இல்லை.  பள்ளியில் இந்த கதையைச் சொன்னபோது எல்லோரும்தான் சிரித்தார்கள்.    கடைசியில் அவள் அதனை நம்பவும் செய்தாள். அது அவனுக்கு ஆனந்தத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. தன்னிடம் யாரும் விளையாடவில்லை என்கிற காரணத்தால்...

ஜூன் 08, 2020

பசித்திருக்கும் ஓநாய்கள்

  இன்று பொம்மியின் முறை. பௌர்ணமியும் கூட. இன்றைய நாள் அதிக பசியெடுக்கும். அதற்குள்ளாகப் பாட்டி வீட்டை அடைந்துவிட வேண்டும்.   ஒத்தையடிப் பாதையில் தைரியத்தையும் பயத்தையும் ஏற்ற இறக்கமாய் சுமந்தபடி நடந்துக் கொண்டிருக்கிறாள். கையில் பிடித்திருக்கும் விளக்கின் வெளிச்சம் குறைந்தது பத்து அடிகள்...

வாங்க... வாங்க...

   ராணி இனி வரமாட்டாள். ராஜனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.  ஆனாலும் அவனால் அழாமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொருவரும் அவனுக்கு ஆறுதலைச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.    "வீட்டுக்கு யார் வந்தாலும் வாங்க வாங்க என்ன சாப்டறீங்கனு கேட்பியே , இன்னிக்கு உன்னைப் பார்க்க இத்தனை பேரு வந்திருக்காங்களே...

ஜூன் 07, 2020

பின் தொடரும் பிசாசு...

   மூன்று முறை குளித்தாள். இருந்தும் அந்த மையை அவளால் அழிக்க முடியவில்லை. நேற்று இரவு. இரண்டு மணி இருக்கும். அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. விழித்துக் கொண்டாள். அவளின் கட்டிலுக்கு அருகில் ஒரு கருப்பு உருவம்.    அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது....

ஜூன் 03, 2020

ஆயிரம் பொன்னைக் கொன்றீர்கள்...

நீ நம்பியிருக்கக் கூடாதுஇந்த பாழாய்ப்போனமனிதனைநீ நம்பியிருக்கவேக் கூடாதுஅவன் உன் பசிக்குக் கொடுக்கவில்லைதன் தலைமுறைகளுக்கான பாவத்தைப் பெற்றுக்கொண்டான்அன்னாசியில் வைத்த வெடியில்வாய்க்கிழிந்துப் போனவளேஅடிவயிற்றுக் குழந்தைக்குஉஷ்ணம் ஆகாது என்றோஆற்றுக்குள் நுழைந்துக்கொண்டாய்நீயும் உன் குட்டியும்ஆகக்கடைசியாக என்ன...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்