பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 20, 2026

- தகப்பனின் சாமி -


பொம்மி
என் தோளில் அமர்ந்து
நீ 
காணும் உயரங்கள்
ஒவ்வொன்றும்
உனக்கானது மட்டுமல்ல
எனக்கானதும் கூட

அது
நமக்கானதும் கூட

நான் காணாத 
உயரங்களையும்
உனக்கு காட்டவே
என்
வலித்த தோள்களுக்கு
வலு 
சேர்த்து கொண்டிருக்கிறேன்

உன்னைச் சுமப்பது போல
நான் 
என்னையும் சுமந்தபடி
பயணிக்கிறேன்

இன்னும் 
எத்தனை எத்தனை
படிகளோ
அத்தனையும் 
உன் துணையால்
கடந்திட வேண்டுகிறேன்

இனி 
நீதான்
என் விதியின்
கையெழுத்து

என் புதிய 
தலையெழுத்து

தகப்பனாய் 
உனைச் சுமந்தாலும்
தகப்பன்சாமியாய் 

நீயே
எனை வழிநடத்து

#பொம்மி #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்