பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 28, 2022

- போர்க்கால பொம்மைகள் -

சாலை காலியாக இருக்கிறது. வண்ணங்கள் நிறந்த சாலையில் இப்போது சிவப்பும் சிதறிய உடல் பாகங்களுமே காய்ந்து கிடக்கின்றன.ஒரே வாரத்தில் இவ்வளவு மாற்றங்கள். அவ்வபோது வானில் பறக்கும் விமானங்கள், உடைந்தும் உடையாமலும் இருக்கும் கட்டிடடங்களை அதிரச்செய்கின்றன. ஆங்காங்கு கைவிடப்பட்டிருக்கும், தோட்டாக்கள்...

பிப்ரவரி 26, 2022

- இயந்திரப்பறவை -

முதன் முறையாகப் பார்க்கிறார்கள். உற்சாகம் பொங்க ஆராவாரத்துடன் சிறுவர்கள் அதனைப் பின் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதன் சத்தத்திற்கு ஈடாக அவர்களும் ஆர்ப்பரிக்கிறார்கள்.அதிகம் வெளி உலகம் அறியாத மக்களின் கூட்டமைப்பு. அவர்களே விதைத்து அவர்களே விற்று அதை அவர்களே பண்டமாற்றுச் செய்து வாழ்ந்து...

பிப்ரவரி 25, 2022

புத்தகவாசிப்பு_2022_7_நிலவழி

தலைப்பு – நிலவழிஎழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்வகை – கட்டுரைவெளியீடு – தேசாந்திரி பதிப்பகம்நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)மாத இதழொன்றில் தொடராக வந்தபோது வாசித்தது. இப்போது புத்தகமாக மீள்வாசிப்பு செய்வதில் மகிழ்ச்சி. எஸ்.ராவின் மூலம் பல எழுத்தாளர்களும் அவர்களின்...

- ஒற்றைச்சாபம் -

யாரோ இடும் கையெழுத்துஎங்கோ செல்கிறதுயாரோ சாகிறார்கள்யாரோ வீசும் குண்டுஎங்கோ வெடிக்கிறதுயாரோ சாகிறார்கள்யாரோ சுடும் துப்பாக்கிஎங்கோ சுடுகிறதுயாரோ சாகிறார்கள்யாரோ யுத்தம் செய்கிறார்கள்எங்கோ நடக்கிறதுயார்யாரோ சாகிறார்கள்ஏனோ நம் கையிலும்இரத்தம் படிகிறதுநம் மனதும் துடித்துஅழுகிறதுநாமும் சாகத்தான்...

- நிறுத்து... நிறுத்து... நிறுத்து... -

"உங்களுக்கு என்ன வேண்டும் ?" கேட்டோம். "அம்மா... " "எனக்கு அப்பா.." "எனக்கு எங்க வீடு.." "எனக்கு என்னோட கால்.." "எனக்கு என்னோட கண்ணு.." "எனக்கு எங்க ஸ்கூலு டீச்சர்.." "எனக்கு என் தங்கச்சியோட கரடி பொம்மை.." " எனக்கு நான் ஸ்கூலுக்கு போகனும்.." "நான் கொஞ்ச நேரம் தூங்கனும்..." "எங்கப்பாவை ஒரு...

பிப்ரவரி 24, 2022

- நண்பர்களை அழைக்கிறேன் -

மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் 'இயலின் குறுங்கதைப்' போட்டியை நடத்தினோம். போட்டிக்கு முன்பதாக பங்கேற்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறையையும் வழிநடத்தினோம். மாணவர்கள் ஆர்வத்துடனும் எதிர்ப்பார்ப்புடனும் கலந்துகொண்டார்கள். ஒரு நாள் பயிற்சி பட்டறையில் அவர்கள் பெற்ற அறிமுகத்தைத்...

பிப்ரவரி 23, 2022

- அம்மா வருவேன் -

"அம்மா.... என்னை மன்னிச்சிடுங்கமா...""ஏன்யா... மன்னிப்பெல்லாம் கேட்கற.. உனக்கு ஒன்னும் ஆகாதுயா..." "நீங்க ரொம்ப பாவம். இப்படி ஓர் அம்மாவை நான் பாக்கல... ஆனா நீங்க எனக்காக எல்லாமே செய்றீங்க... என்னால உங்களுக்கு ஒன்னுமே செய்ய முடியலம்மா..." "பெத்த பிள்ளைக்கு செய்யாத அம்மா எங்கயா இருக்காங்க.....

பிப்ரவரி 21, 2022

அடையாளம் காணுதல்

என் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. என்னை சிதைக்க முயன்றவர்களிடமிருந்தும் என்னைச் செதுக்க கற்றுக்கொள்வதற்கு அதுதான் காரணம். எல்லாவற்றையும் எழுதி கடக்க முயன்றே எழுதிக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிலும் பெரிய ஆறுதல் நீங்கள் என் எழுத்தை வாசிப்பதுதான். யாரோ ஒருவருக்கு...

- உப்பிட்டவரின் உள்ளளவு -

இரண்டாண்டுகளாக மருத்துவப்பரிசோதனைக்குச் சென்று வருகிறேன். ஆட்கள் மாறியிருக்கிறார்களே அன்றி, வியாதிக்காரர்கள் குறைந்த பாடில்லை. அவர்கள் கணவன் மனைவியாகத்தான் இருக்க வேண்டும். சர்க்கர நாற்காலியில் அவரை வைத்து என்னருகில் வந்து அமர்ந்தார். கணவன் ஏதோ முனகுவது கேட்டது. மனைவி சமாதானம் செய்துகொண்டிருந்தார்....

பிப்ரவரி 20, 2022

- யார் வாழ்க்கை யார் கையில் -

“இதோ பாருங்க… நான் நல்லாத்தான் இருக்கேன்.. காணாமல் எல்லாம் போகல.. யாரும் என்னைத் தேட வேண்டாம்.. என்னை நிம்மதியாக இருக்க விடுங்க.. உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை… “ “இதுக்கு முன்ன நீங்க எல்லாம் எங்க இருந்தீங்க… எங்கம்மாவைப் பத்தி எனக்கு தெரியாதா.... அவங்க என்னை எப்படியெல்லாம் வேலை...

பிப்ரவரி 17, 2022

- தீக்குள் விரலை வைத்தால்.... -

அந்த ஒரு கேள்வி என் வாழ்வை அப்படியே திருப்பி போட்டது. தரிசனம் என சொல்வார்களே அதுதான் என் வாழ்வின் தரிசனம். புகழ்பெற்ற தன்முனைப்பு பேச்சாளர். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தலைப்பில் பேசுவார். அவர் பேசுகின்றார் என்றாலே கூட்டம் சேர்ந்துவிடும். அவரின் சிறப்புகளில் ஒன்று கர்த்தரைப்பற்றியும் பேசுவார்...

பிப்ரவரி 16, 2022

- பாவத்தின் சம்பளம் -

பேயைப் பார்த்தால் யார்தான் பயப்படமாட்டார்கள். அதனால்தான் இன்று இருவரும் இங்கு வந்திருக்கிறார்கள். எப்படியாவது எவ்வளவு செலவு செய்தாவது அந்தப் பேயிடமிருந்து தப்பிக்க வேண்டும். இறந்த சில நாட்களில் இப்படி பேயாக வந்து நிற்பாள் என அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. தெரிந்திருந்தால் தங்களின்...

பிப்ரவரி 15, 2022

- 6 சிறியது 5 பெரியது -

இன்னும் எவ்வளவு தூரம்தான் ஓடும். ஓட முடியும். ஓட வேண்டும். மானின்  வேகத்தை எது முடிவு செய்கிறது. அதன்  கால்களா அல்லது துரத்தும் சிறுத்தையின் கால்களா.?அதிவேக சிறுத்தைக்கு சாமர்த்தியமாக போக்கு காட்டுகிறது மான். ஓடிய வேகத்தில் சட்டென மான் நின்றுவிடுகிறது. இதனை எதிர்ப்பாக்காத சிறுத்தை...

பிப்ரவரி 14, 2022

- பெயரில் என்ன இருக்கிறது? -

செல்வனுக்கு ஒரு வித்தியாசமானத் தேடல் இருந்தது. என்னதான் பகுத்தறிவு பகலவன்களாய் ஜொலித்தாலும் திருமணத்திற்கு ஜாதியை எப்படியாவது பார்த்துவிடுபவர்களின் மத்தியில் செல்வனின் தேடல் உண்மையிலே வித்தியாசமானதுதான். அவன் தேடுவது அதை மட்டும்தான். ஆமாம், அது ஒன்றைத்தான். வேறெதுவும் செல்வனுக்கு முக்கியமாகப்படவில்லை....

பிப்ரவரி 13, 2022

- தனிமையிலே இனிமை காண... -

யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது. தோள் மீது கையைப் போட்டு எனக்கு அறிவிரையும் கூற முடியாது. அப்படியாக யாரையும் நான் விரும்பவில்லை. யாருக்கும் நான் அப்படியிருக்க விருப்பமில்லை. தனிமையைக் கொண்டாடும் மனம் எனக்கு. மற்றவர்களின் துணை எதற்கு. நான் தனிக்காட்டு ராஜா. சம்பாதிக்கிறேன் செலவு செய்கிறேன்....

பிப்ரவரி 12, 2022

- மனம் ஒரு.... -

பத்துமலை கோவில். வண்ணமடித்த படிகளில் வெள்ளைக்காரர்கள் வேட்டி சட்டை , புடவையில் நடந்து கொண்டிருந்தார்கள். சிலர் நேர்த்திக்கடனுக்காக படியேறிக்கொண்டிருந்தார்கள். சிலர் தங்களின் பூர்த்திக்கடனுக்காக படியிறங்கிகொண்டிருந்தார்கள். இரண்டுக்கும் இடையில் சிலர் டிக்டாக்கில் ஆடி கொண்டிருக்கிறார்கள்....

பிப்ரவரி 11, 2022

- தவறவிடக் கூடாதக் குறுங்கதை -

நீங்கள் வாசித்து விட்டீர்களா?. நான் வாசித்த குறுங்கதையிலேயே மிக முக்கியமானது அதுதான். கதையல்ல அது ஒரு காவியம். என்ன ஒரு வார்த்தை வருணனை. எப்படியானக் கற்பனைத்திறன். எல்லையற்றக் கற்பனை எதுவரையும் செல்லும் என எடுத்துக்காட்டும் கதை.ஆயுள் ரேகையைவிட அறிவு ரேகை அழுத்தமாக இருப்பவரால்தான் இப்படியொன்றை...

பிப்ரவரி 10, 2022

புத்தகவாசிப்பு_2022_6 'பா.வெங்கடேசன் கதையும் புனைவும்'

பா.வெங்கடேசன் கதையும் புனைவும்தலைப்பு – பா.வெங்கடேசன் கதையும் புனைவும் (புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்)எழுத்து – த.ராஜன், பா.வெங்கடேசன்நேர்காணல் – த.ராஜன்வகை – நேர்காணல்வெளியீடு – எதிர் வெளியீடுநூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)    புத்தகம் குறித்து...

- வேர் தேடும் மரம் -

யார்தான் அவள். அவ்வப்போது காணக்கிடைக்கிறாள். அழுக்காக இருக்கிறாள். கையில் எப்போதும் ஒரு பை இருக்கிறது. அவளைவிடவும் அவளது பை அழுக்கடைந்ததாக இருந்தது. எதையோ தேடுபவள் என முதல் பார்வையிலேயே அவளை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் அவளை ஏதாவது ஒரு மரத்தின் அருகில் பார்க்கலாம். ஒரு நாள் பூங்காவில்...

பிப்ரவரி 09, 2022

உனக்கு 20 எனக்கு 20

ஒருத்தரிடமிருந்து 20 ரிங்கிட் கிடைத்தால் 100 பேரிடமிருந்து ஒரே நாளில் 2000.00 வெள்ளிவரை சம்பாதிக்கலாம் என்றார். கணக்கு சரிதான் ஆனால் எங்கிருந்து 100 பேர்களைத் தேடுவது?"முதலில் நண்பர்கள், உறவினர்கள் என பட்டியல் போடுங்க... கைப்பேசி எதுக்கு இருக்கு அதிலிருந்து எடுங்க... முயற்சிதான் முக்கியம்.......

பிப்ரவரி 08, 2022

- நான் பாதி ; நீ பாதி -

முகநூல் விளையாட்டில் நானும் பங்கெடுத்தேன். நம்மிடம் யாரும் கேள்வி கேட்கலாம். தனிப்பட்ட முறையில் வரும் கேள்விகளை நாம் விரும்பினால் பொதுவில் பகிரலாம். நண்பர்களிடமிருந்து கிண்டல்கள் நிறைந்த கேள்விகளும் சிலரிடமிருந்து என் செயல்பாடுகள் பற்றிய கருத்துகளும் வந்தன. வழக்கமானதுதான். ஆனால் ஒரு...

பிப்ரவரி 07, 2022

- குறுங்கதை எழுதுவது எப்படி? -

பக்க அளவு இருக்கிறதா? ஆம். வார்த்தை எண்ணிக்கை வேண்டுமா? ஆம். தலைப்பு அவசியமா? ஆம். வசனங்கள் கட்டாயமா? ஆம். கதை சொல்லி வேண்டுமா? ஆம். இவைதான்; இவை மட்டும்தான் குறுங்கதையா? ஆம். - பின்குறிப்பு ஆம் என்று சொன்ன எல்லாவற்றையும் இல்லை என்று சொல்வதுவும் குறுங்கதைகள்தான்.. #தயாஜி...

பிப்ரவரி 06, 2022

நன்றி நவில்தல்

மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றம்,  நூலிழை குறுங்கதை பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதன் வழி குறுங்கதைகள் பற்றியும் எங்கெல்லாம் குறுங்கதைகளைக் காணலாம் என்றும் பேசினேன். இம்முறை மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாய் இருந்தது. பலரும் எழுதுவதில் ஆர்வமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ஏதோ...

- பிக்கபூ -

மூவாயிரம் வெள்ளி. ஆனால் வெறும் ஐநூறு வெள்ளிக்கு கிடைத்தது. முழங்கை அளவுள்ள கிளி. நீலவண்ண இறகுகள் கொண்டது. கணவனின் மரணத்திற்கு பின் அவரின் செல்லப்பிராணியை மனைவியால் பார்க்க முடியவில்லையாம். அதனாலேயே குறைந்த விலையில் விற்றார். இதுதான் சமயமென வாங்கிவிட்டேன்.நன்றாக பயிற்சி அளிக்கப்பட்ட கிளிதான்....

பிப்ரவரி 05, 2022

- தொழில் ரகசியம் -

நேற்று காலை , ஏதும் சாப்பிடாமல் வேலைக்குப் புறப்பட்டேன். பத்து மணி வாக்கில் பசி மயக்கம் வயிற்றில் தொடங்கி காதுகளை அடைத்தது. செல்லும் வழியில் இருந்த கடையில் அமர்ந்தேன். அவ்விடம் செல்லும் போது பல சமயங்களில் அங்குதான் காலை உணவு எடுப்பேன்.வழக்கமாக காலையில் இஞ்சி டீ குடிப்பது பிடித்த ஒன்று. இம்முறையும்...

பிப்ரவரி 04, 2022

- வாழ்வின் வலி நிவாரணி -

அந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன். அது மிகவும் கேவலமானது. அருவருப்பானது. என்னை மட்டுமல்ல என் குடும்பத்தையும் அது அவமானப்படுத்தும்.ஆனால், என் தலையின் பாரம் என்னைக் கொல்கிறது. மருந்துகளும் மருத்துவர்களும் இரண்டு நாட்களுக்குத்தான் பயன்படுகிறது/கிறார்கள். மூன்றாம் நாள் மீண்டும் தலை பாரமாகிவிடுகிறது....

பிப்ரவரி 03, 2022

புத்தகசவாசிப்பு_2022_5 ' மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்'

மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் தலைப்பு – மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் எழுத்து – டயான் ப்ரோகோவன் தமிழாக்கம் – ஆனந்த் வகை – குறுநாவல் வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம் நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)   டயான் ப்ரோகோவன், ஃப்ளெமிஷ் எழுத்தாளர். அவரின் ‘மிஸ்டர் ஜூல்ஸுடன்...

- என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா -

நள்ளிரவு. தூக்கம் வரவில்லை. ஏதாவது வாசிக்கலாமென வரவேற்பறையில் அமர்ந்தேன். எப்போதும்  பால்கனியைப் பார்த்தவண்ணம் அமர்ந்து புத்தகம் வாசிப்பேன். இப்போதும் அப்படித்தான்.வாசிப்பதற்கென்றே மெல்லிய ஒளி தரும் விளக்கையும் சொடுக்கிவிட்டேன். வாசிக்கலானேன். 'அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல' என்ற புத்தகம்,...

பிப்ரவரி 02, 2022

-'சிங்கியா மங்கியா' என்றொரு நாடு-

பலரும் நன்கு அறிந்த சிறு நாடு. பரப்பளவு எவ்வளவு இருந்தாலும் நாட்டையும் நாட்டு மக்களையும் நல்வழிப்படுத்த அரசாங்கம் அவசியம்தானே. அங்கும் ஓர் அரசாங்கம் அமைந்திருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த குற்ற விசாரணையால் 'சிங்கியா மங்கியா' நாடு மிகவும் பிரபலமானது. அரசாங்கப் பணியில் இருக்கும் முக்கிய...

பிப்ரவரி 01, 2022

- எளிய கேள்விகள் எப்போதும்... -

"அம்மா, அப்பா அந்த ஆண்டிகிட்ட ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தாங்க.." " யாருங்க அது....?" ############### "குட் மார்னிங். இது என்னோட ரெசிமி" "அது அங்கயே இருக்கட்டும், உங்களுக்கு முன் அனுபவம் இருக்கா..'' " இதான் சார் என் முதல் இண்டர்வியூ" "நான் அதைக் கேட்கல...." ############### "சத்தியமா நான்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்