பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 30, 2020

நானும் என் குறுங்கதைகளும் 1

தொடர்ந்து #குறுங்கதை கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு முறை எழுதும் போதும் புதிதான ஒன்றை முயல்வதாகவே நினைத்து எழுதுகிறேன். குறுங்கதைகளை வாசித்து பலரும் அவர்களின் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் சிலர் அவர்கள் வாழ்வில் நடந்தவற்றை பகிர்ந்துக் கொள்கிறார்கள். "இதிலிருந்து...

அது மட்டும் அல்ல...

     இயல்பாகவே உயரம் என்றால் பயம். ஏணியில் ஏறி நின்றாலும் கூட கொஞ்ச நேரத்தில் கால்கள் கதகளி ஆட ஆரம்பித்து விடும். நான் மட்டும் எப்படி சும்மா இருப்பது என்று இடுப்பும் அது பாட்டுக்கு ஒரு ஆட்டதை ஆடிக்காட்டும்.    இன்னும் சொல்லப்போனால் தைரியமாக எறிவிடலாம். ஆனால் இறங்குவது...

ஜூலை 28, 2020

அன்புள்ள அக்காவிற்கு...

அக்கா.....      நீங்கள் இந்த கடிதத்தை வாசிக்கும் போது நான் இங்கிருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். உங்களைப் போன்ற சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களைப் பார்ப்பது கடினம். என்னைப் போன்ற பல பெண்களுக்கு நீங்கள் ஓர் உதாரணம். எத்தனையோ பெண்கள் உங்களால் நல்வாழ்வு வாழ ஆரம்பித்துள்ளார்கள்.  ...

ஜூலை 26, 2020

ராமனும் கிருஷ்ணனும்

   இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இன்றுதான் பிறந்தகம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. விமான நிலையத்தில் இருந்தே நேராக ராமனைப் பார்ப்பதற்காகத்தான் சென்றுக் கொண்டிருந்தான் கிருஷ்ணன். இவர்கள் இருவருக்கும் எப்படி இந்த பொருத்தமான பெயர் அமைந்தது என வியக்காதவர்கள் இல்லை.   ...

ஜூலை 25, 2020

ஆவிகளுடன் பேசுவது எப்படி ?

    இது விளையாட்டல்ல. முதலில் உங்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். நம்மை மீறிய ஏதோ ஒன்று இருப்பதை நம்ப வேண்டும். அல்லது இருப்பதாக நம்ப வேண்டும். அதுதான் நாம் செய்யவிருக்கும் காரியத்திற்கான முதல் வேலை.       நெகட்டிவ் பாசிட்டிவ் போல எல்லா இடத்திலும் இரண்டு தரப்புகள்...

ஜூலை 21, 2020

நானே இன்னும்...

   "இவன் பண்ணிருக்கற காரியத்துக்கு இவனை அடிக்காம என்ன செய்ய சொல்றீங்க...?"  "..."  "நீங்க ஒன்னு.. இவன் பண்ண காரியத்துக்கு இவனை...." "..."    "என்ன பேசறீங்க நீங்க....??என்ன பேசறீங்க...? எப்படி விட முடியும்..? இன்னிக்கு இவனை அடிக்கற அடில....." "..."  ...

ஜூலை 14, 2020

WWW.செய்வினை.COM

    மார்க்கெட் சென்று வந்தவன் தூங்குகிறான்.  அதிகாலை நான்கு மணிக்கே எழுப்பி விட்டிருந்தாள். இதோடு பத்து மணி வரை தூங்கலாம். தொந்தரவு செய்ய மாட்டாள். சமைப்பதற்கு முன் வாசலை கூட்டிப் பெருக்கும் பழக்கம் அவளுக்கு உண்டு. பிறகு சமைத்துவிட்டு கணவனை எழுப்புவாள். அதன் பிறகு மத்தியானம்...

ஜூலை 12, 2020

காதல் கடிதம் எழுதவே

    அனு, அவள் பெயர். சின்ன பெயர். அதற்கு ஏற்றார் போல குட்டி உருவம். காதருகில் சுருள் முடி. 'ஸ்ப்ரிங்' போல அவள் நடக்கும் ஒவ்வொரு அடிக்கும் மேலும் கீழும் சென்று வருகிறது.      கண்களில் எதையோ தேடும் தீவிரம். எதனையும் பொருட்படுத்தாதப் பார்வை. சிரிக்கும் போது வலது கன்னத்திலிருந்து...

ஜூலை 11, 2020

தங்கக் காலணி

    அந்த பெயரை அத்தனை சீக்கிரத்தில் மறந்திருக்கக் கூடாது. நான் அப்போது ஆரம்பப்பள்ளி படித்துக் கொண்டிருந்தேன். படிப்பு வந்ததோ இல்லையோ, பந்து விளையாட்டு நன்றாகவே வந்தது.    நான் பந்தை உதைக்கும் லாவகத்தைப் பார்த்த கணித ஆசிரியர் பொறாமை பட்டார். அதற்காகவே ஒவ்வொரு முறையும் கணித தேர்வில்...

ஜூலை 10, 2020

ஏய் டூப்பு..

   எல்லாம் தயார். ஆனாலும் மீண்டும் பரிசோதிக்க வேண்டும். நாயகன் தனக்கான டெம்போவில் இருந்து இறங்கினார். ரசிகர் பட்டாளம் ஆரவாரம் செய்தது. தனது கறுப்பு கண்ணாடியை கழட்டி, ரசிகர்களைப் பார்த்து கைசயைத்தார். ரசிகர் பட்டாளம் துள்ளி குதித்தது.   தொடர்ந்து பல வெற்றி படங்களைக் கொடுத்த நாயகனின்...

ஜூலை 09, 2020

எழுத்தாளரின் வாசக கடிதம்

   அவர் பிரபலமான எழுத்தாளர். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஒவ்வொரு வாரமும் அவரது படைப்புகளில் ஏதாவது ஒன்று இதழ்களில் வெளிவந்துவிடும். அடுத்த வாரமே அவரின் படைப்பை குறித்த ஆழமான விமர்சனமும் வாசக கடிதங்களும் அதே இதழில் பிரசுரமாகும்.   அவர் எழுதும் முழு பக்க கதை என்றாலும், ஆள் காட்டி...

ஜூலை 08, 2020

ஒரு கசமுசா கதை

      திரையரங்கம். சமீபத்தில் கொரிய படங்களுக்கு ரசிகைகள் அதிகமாகி விட்டார்கள். அதனால் மொழி விளங்கா விட்டாலும் பரவாயில்லை என ஒரு கொரியன் படத்திற்கு சென்றான். படத்திற்காக அல்ல பார்வையாளர்களுக்காக.      முதல் அரை மணி நேரத்திற்கு யார் நாயகன் யார் நாயகி என கண்டு பிடிப்பதற்கே...

ஜூலை 07, 2020

இது பேய்க்கதை அல்ல..

   பூஜை நடந்துக் கொண்டிருக்கிறது. பூசாரியும் அவரது உதவியாளனும் மாற்றி மாற்றி மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் இன்று பேயை ஓட்டிவிடுவார்கள் என அங்கிருந்தவர்கள் நம்புகிறார்கள்.   சில நாட்களுக்கு முன்பு. இரவில் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்த சமயம். சிறுநீரும் குமாருடன்...

ஜூலை 06, 2020

அவளின்னும் பிறக்கவில்லை

   அவளும் எதிர்ப்பாக்கவில்லை. சட்டென கடவுள் கண்முன் தோன்றுவார் என யார்தான் எதிர்ப்பார்ப்பார்கள். நம்பவில்லை. அவளுக்கு அதிலெல்லாம் நம்பிக்கையும் இல்லை.   கண் கூசும் வெளிச்சத்தைக் கடவுள் குறைத்துக் கொண்டார். அவளால் இப்போது ஓரளவிற்கு கடவுளைப் பார்க்க முடிந்தது. ஆனாலும் அவளின் கண்கள்...

ஜூலை 05, 2020

ராஜா ராணி

    கல்யாண மண்டபம். விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மணமக்கள் மேடையிலும் மற்ற மக்கள் கீழும் அமர்ந்திருந்தார்கள். நான் தான் நிகழ்ச்சியில் அறிவிப்பாளர்.    சில பாடகர்களும் நகைச்சுவை நடிகர்களும் இருந்தார்கள். ஒத்திகைக்கு ஏற்றவாறு  விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது....

ஜூலை 04, 2020

ஆகாயம் தொட்ட மரம்

    தங்களின் மூதாதையர்கள் அதில் வாழ்வதாக நம்புகிறார்கள். தினமும் அந்த மரத்தை வணங்குவதுதான் முதல் வேலை. தேவைக்கு ஏற்ற மழையும் தேவையான உணவும் அவர்களுக்கு கிடைத்துக் கொண்டே இருந்தன. அந்த மரம் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.   வியாதிகள் அவர்களை ஒன்றும் செய்வதில்லை. அந்த இலைகளைத் தொட்டு...

ஜூலை 03, 2020

வினோத ஜாலக்கண்ணாடி

   பழைய புத்தகக்கடையில் வாங்கியது. சாக்லெட் நிற கெட்டி அட்டை. மஞ்சள் படிந்த பக்கங்கள். 'வினோத ஜாலக்கண்ணாடி' என்னும் தலைப்பே அவனை வசீகரித்தது. வேறேதும் காரணம் சரியாக தெரிந்திருக்கவில்லை. ஏதோ ஈர்ப்பு இருந்திருக்க வேண்டும்.   கட்டிலில் படுத்திருக்கிறான். பக்கத்தில் அந்த புத்தகம். அதனையே...

ஜூலை 02, 2020

போர் வீரனின் பரிசு

     இன்று பொம்மிக்கு பிறந்தநாள். ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதுதான் வாய்ப்பு கிடைத்தது. பிரிவு என்பது எத்தனை சிறிய சொல். ஆனால் எத்தனை அடர்த்தி நிறைந்தது. பொம்மிக்கு இன்றோடு பத்து வயது பூர்த்தியாகிறது.     இப்போது அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என எனக்கு தெரியவில்லை....

ஜூலை 01, 2020

எதற்கும் ஒரு விலை உண்டு...

   தூக்குவதில் சிரமம் இருபின்னால்னாலும் பாதியில் விட முடியாதே. எடுத்துவிட்டான். பிடித்துக்கொண்டான். ஓடுகிறான். நிற்க கூடாத ஓட்டம். இந்த வேகத்தில் ஓடினால் மட்டுமே தன் முகம் அவ்வளவாக பிறர்க்கு அடையாளம் தெரியாது.     சில நாட்களாக அந்த கருப்பு அங்கி மனிதனை இவன் கவனித்துக் கொண்டு வருகிறான்....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்