- நிபந்தனையற்ற தண்டனை -
எல்லா கடவுள்களையும்
வரிசையாய் நிறுத்தி
யாருக்கு பலமதிகம் என்று
சோதிக்க
எந்தப் பக்தனுக்கு
அந்த இடத்தில்
அதிகாரம் அதிகமாய் இருக்கிறதோ
அந்தக் கடவுளே
தன்னை பலசாலி என
பிரகடனம்
செய்து கொள்கின்றன
செய்தும் கொல்கின்றன
ஆகவேதான்
மதத்தை பழித்தால்
இங்கு தண்டனை
அது யார் மதம்
என்பதுதான்
முதல் நிபந்தனை
0 comments:
கருத்துரையிடுக