பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 24, 2022

- விலை -

"ஒரு பத்து வருஷம் இருக்குமா?" எனதான் அந்த உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருவரின் காபியும் முடிந்துவிட்டது. சாப்பிட்டத் தட்டில் மட்டும் சிதறிய தின்பண்டங்கள் கிடந்தன. இனி அதை இவர்கள் சாப்பிடப்போவதில்லை. "ஆமா இருக்கும்...." என்று ஆமோதித்தான் சுகுமாறன். அடுத்ததாக நண்பன் என்ன கேட்கப் போகிறான்...

மார்ச் 19, 2022

புத்தகவாசிப்பு_2022_9_வாசிப்பின் வழிகள்

வாசிப்பின் வழிகள்தலைப்பு – வாசிப்பின் வழிகள்எழுத்து – ஜெயமோகன்வகை – கட்டுரைகள்வெளியீடு – விஷ்ணுபுரம் பதிப்பகம்நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா) ‘வாசிப்பின் வழிகள்’ கட்டுரைத் தொகுப்பு மொத்தம் 21 கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் முன்னமே ஜெயமோகன் வலைத்தளத்தில்...

மார்ச் 16, 2022

- துரோகி -

"யாராவது என்னைக் கொல்லத்தான் போகிறார்கள்....""அதற்காக....""நீயே என்னைக் கொன்றுவிடு....""முட்டாளா நீ...... வாயை மூடு...""முட்டாள் அல்ல... வீரன்...""அதிகம் பேசாதே... சுட்டுவிடுவேன்..."" அதற்குத்தான் பேசுகிறேன்.. சுடு.. சுடு... என்னைச் சுட்டு கொன்றுவிடு....""நீ என் நண்பன்..... ""யார் இல்லையென்றது... ...

மார்ச் 14, 2022

- வந்த வேலை -

நான் முதலில் பயந்துவிட்டேன். எப்படி பயப்படாமல் இருக்க முடியும். இந்த இடத்தில் யார்தான் நிற்பார்கள். அதுவும் உச்சி நேர வெயிலில். "ஹையோ ரொம்ப பாவம்ங்க...' என மனைவிதான் சொன்னாள். புருஷனைத் தவிர மற்ற எல்லாமும் அவளுக்கு பாவம்தான். காரை அந்த வயதான அம்மாவின் அருகில் நிறுத்தினேன். கையில் துணிப்பையுடன்...

மார்ச் 12, 2022

புத்தகவாசிப்பு_2022_8_திமிரி

தலைப்பு – திமிரி எழுத்து – ஐ.கிருத்திகா வகை – சிறுகதைத் தொகுப்பு வெளியீடு – எழுத்து பிரசுரம் நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)   எழுத்தாளர் ஐ.கிருத்திகாவை முகநூல் வழி அறிந்துகொண்டேன். அவ்வப்போது அவரது படைப்புகள் இணைய இதழ்களில் வாசிக்க நேர்ந்தது. ஒரு கட்டத்தில்...

மார்ச் 09, 2022

- குழந்தையா அது...? -

குழந்தை ஒன்று வந்திருந்தது. குழந்தையா அது; அது ஒரு குரங்கு அப்படித்தான் நடந்து கொண்டது. ஐந்து வயதுதான். எனக்கு அவன் பையன். வீட்டிற்கு அவன் குழந்தை.சரி குழந்தையாகவே வைத்துக்கொள்ளட்டும். இப்படியா வளர்ப்பார்கள். அது எதையாவது செய்துக்கொண்டே இருக்கிறது. ஓரிடத்தில் உட்கார மாட்டேன் என்கிறது. சாப்பிடும்...

மார்ச் 08, 2022

- இயந்திர மனிதர்கள் -

இன்று யுத்தம் முடிந்ததாக அறிவித்தார்கள். யார் அறிவித்தார்கள், யாரிடம் அறிவித்தார்கள் என தெரியவில்லை. அன்று யுத்தகம் தொடங்கியது என அறிவித்தப்போதும் யார் அறிவித்தார்கள். யாரிடம் அறிவித்தார்கள் என தெரியவில்லைதான்.அவ்வப்போது இப்படி புரளிகள் வந்து கொண்டிருக்கவே செய்கின்றன. ஆட்களைக் கொல்பவர்களுக்கு...

மார்ச் 07, 2022

- இரத்தக்கறை -

பல தடவைகள். பல முயற்சிகள். ஒன்றும் சரிவரவில்லை. பலரின் ஆலோசனைகள். அறிவியல் விளக்கங்கள். எதுவும் உதவவில்லை. நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது. தயார்தான். ஆனால் திருப்தி இருக்கவில்லை. கையில் கிடைத்த எத்தனையோ வாசனைத் திரவியங்களைக் கையில் ஊற்றினாலும் வேலைக்கு ஆகவில்லை. அடுத்த ஐந்து நிமிடத்தில் துர்நாற்றம்...

மார்ச் 06, 2022

- பாப்பா -

ஒரு வாரமாக வெளியே செல்ல முடியாதச் சூழல். யார் தலை தெரிந்தாலும் துப்பாக்கி சூட்டுக்கு இரையாகிடுவார்கள். பல கட்டிடங்களின் சுவர்கள் துப்பாக்கி சூட்டில்  உடைந்தும் சிதைந்தும் போயிருக்கிறது. வலுவற்றச் சுவர்களைத் தாண்டியும் மறைந்திருந்தவர்களை குண்டுகள் துளைத்துள்ளன. வீட்டில் இருந்த அவசரகால...

மார்ச் 05, 2022

- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -

"யுத்தம் முடிந்தது. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்.. பயப்படவேண்டாம்.... நாங்கள் உங்களுக்கு உதவுவதற்காக வந்துள்ளோம்" ஒலிபெருக்கியில் சத்தமிட்டபடி இராணுவ வாகனங்கள் குடியிருப்பில் நுழைந்தன. எஞ்சி இருக்கும் கட்டிட இடிபாடுகளில் ஒழிந்திருக்கும் சிலருக்கு இன்னமும் பயம் இருக்கவே செய்கிறது. யாரை...

மார்ச் 04, 2022

- தப்பித்தலும் காப்பாற்றுதலும் -

இப்போதுதான் சத்தம் அடங்கியது. காலையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தங்கள், குண்டு வெடிப்பு சத்தங்கள், விமானங்களின் சத்தமென எங்களை பீதியாக்கிக் கொண்டிருந்தன. இது யுத்தகால ஓய்வு நேரம் போல, பெரியதொரு வெடி சத்தத்தைத் தொடர்ந்து மயான அமைதி நிலவிக்கொண்டிருக்கிறது. யுத்தத்தின் சத்தத்தைவிட,...

மார்ச் 03, 2022

- குழந்தையின் சிரிப்பில்... -

குழந்தையின் அழுகையை யார்தான் தாங்குவார். என்னதான் திடமான மனம் கொண்டவராக இருந்தாலும், அதிகாரம் முழுக்க தன் கைவிரல் அசைவில் இருந்தாலும் அவருக்குள்ளும் ஈரம் இருக்கத்தான் செய்கிறது. இன்று அவருக்கு முக்கியமான கடமையொன்று காத்திருக்கிறது. கடமை மட்டுமல்ல உலகின் பல மூலைகளில் இருக்கும் மக்களும்தான்...

மார்ச் 02, 2022

- வெற்றுத்துப்பாக்கி -

சிதைந்து போன கட்டிடங்கள். கடைசி நம்பிக்கையாய்ச் சில செங்கல் சுவர்களைப் பிடித்திருந்தன. நல்லவேளையாக சில வீடுகளுக்கு மட்டும் கீழ்த்தளம் இருந்தது. வீட்டின் ஒரு பகுதியாக இருந்தவை இப்போது பதுங்கு குழியாகிப் போனது.ஆயுதம் ஏந்திடாத அப்பாவி மக்கள் அவ்வப்போது வெளியேறுவார்கள். சாப்பிட முடிந்தபடி பார்க்கக்...

மார்ச் 01, 2022

- அவளை நீங்கள் பார்க்க வேண்டும் -

அவளுக்கு பெயர் அவசியமில்லை. தேவதை என்கிற பெயருக்கு நூறு சதவிதம் பொருத்தமான முகத்தைப் பெற்றிருந்தாள். அவளை நீங்கள் பார்க்க வேண்டும்.சில முகங்கள் சில வண்ணங்களால் அழகடையும். ஆனால் இவள் முகமோ எல்லாவித வண்ண ஆடைகளையும் அழகடையச்செய்யும். அவளை நீங்கள் பார்க்க வேண்டும்.இயற்கை ஏதோ ஒன்றை அவள் கண்களில்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்