பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 01, 2010

படித்ததைப் பகிர்கின்றேன் 2


புத்தகம் என்பது என்ன..?

வெறும் அச்சுக்கோர்வை,

வெள்ளைத்தாள்களின் கூட்டணி,

அறிவுப்பெட்டகம்,

மறைமுக விளம்பர யுக்தி,

...............

.............

.........

.....



இப்படி அடிக்கிக்கொண்டு போவதில் விருப்பமில்லாமல் சொல்லிவிடுகின்றேன். புத்தகம் என்பது ஒரு கடத்தல்காரன்/கடத்தல்காரி. புத்தகத்தில் நீங்கள் மூழ்கும் நேரம் உங்களையறியாமல் உங்கள் மனம்; அச்சடிக்கப்படிருக்கும் வார்த்தைகள் மீது பயணித்துக் கொண்டிருக்கும். அந்த பயணம் கடத்தலாக மாறி உங்கள் இருக்கும் இடம் விட்டு, வேறு இடம், வேறு உலகம், ஏன் வேறு யுகம் வரை உங்களை கடத்திச் செல்லும்.



அந்த கடத்தலால் அடிக்கடி வேவ்வேறு வகையில் ,பல்வேறு முறையிலும் நான் பயணிக்கின்றேன். இந்த முறை அண்ணன் நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவன்.

(குறிப்பு , நா.மு-வின் பால காண்டம் கட்டுரை தொகுப்பை படித்ததும் நான் செய்த முதல் வேலை அவருக்கு தம்பியாக என்னை தத்துக் கொடுத்தது)


"பட்டாம்பூச்சி விற்பவன்" புகழ்பெற்ற ஒரு பாடலாசியரின் புத்தகத்தைப் பற்றி இவன் என்ன சொல்லப் போகின்றான்..?? இப்படி உங்களில் எந்த ஒரு தேர்ந்த அறிவாளியும் கொடி பிடிக்கத் தொடங்கினால் ஒரு வேண்டுகோல் எனக்கும் உங்கள் முன்வரிசையில் இடம் கொடுங்கள். நான் யார் கவிதை தொகுப்பைப் பற்றி கட்டுரை எழுத.....!!


கவனிக்க இது ஒன்றும் கவிதை பற்றியக் கட்டுரை அல்ல. இதன் வாசிப்பால் கடத்தப்பட்டு, அந்த கடத்தலால் பயணிக்கப்பட்டு அதன் தாக்கங்களை மனதால் சுமக்கும் சராசரி வாசகன் என்ற முறையில் என்னை பாதித்ததை பதிவு போட எனக்கு உரிமை இருக்கின்றது.


இனி சொந்த கதை வேண்டாம்.


பாலுமகேந்திரா, பாரதிராஜா, அறிவுமதி வாழ்த்துகளுடனும் 'புத்தகம் வெளியிட முடியாமல் தவிக்கும் சக கவிஞர்களுக்கு சமர்ப்பணம்' என்ற தொடக்கத்திலும் ஆரம்பமாகின்றது இந்த பயணம்.


‘ தூர்’ என்ற தலைப்பில் தன் வீட்டுக்கிணற்றில் தூரெடுத்து தூய்மைப்படுத்திய அப்பா, அம்மாவின் மனதில் இருப்பதை அறியாமலிருப்பதை சொனல்லி கடத்தல் முயற்சியை ஆரம்பிக்கின்றர். பூக்களை ரசிப்பது ஒரு கலை;அதை செடியில் இருந்து ரசிப்பது பெரும்கலை. இந்த கருத்தினை முன்னிருத்தி ‘பூ நுகரும் காலம்’’ -தில் பூக்களை நேசிப்பவனை பூக்களுக்கு பிடித்திருக்கின்றது இப்படியாகத் தொடங்கும் வாக்கியம் இப்படி முடிகின்றது; ‘பூக்களுக்கும் அவனை ரொம்ப பிடிக்கும், விரல்களால் உயிர் பறித்து அவன் நுகர்வதற்கு முந்தைய காலம் வரை’
‘சுண்டுவிரல் தாத்தாக்கள்’ –லில் இப்படி ஒரு வாக்கியம் வருகின்றது. “வாத்துகள் விட்டுச்சென்ற நட்சத்திரக் கால் பதிவை அழிக்காமல் தொடர்வோம்….” நீங்கள் வாத்துகள் பின்னால் நடந்த அனுபவம் உள்ளவரென்றால் நிச்சயம் நீங்கள் யோசிப்பீர்கள் இத்தனை நாளாய் வாத்துகளை பின் தொடர்ந்தோமே தவிர, அவை விட்டுச்சென்ற நட்சத்திர பதிவை கவனிக்க மறந்தோமே..

“டென்த் ஏ காயத்ரிக்கு” . இவரின் பால்ய சினேகதி !. இந்த பெயர் இவரின் “அ’னா ஆ’வன்னா” கவிதை தொகுப்பிலும் இடம்பெறும். பள்ளிப்பருவத்தில் தன்னை ஈர்த்த ஒருத்தி வளர்ந்து, மாற்றான் வீட்டில் வாடுகிறாள். இதை சொன்னவர் இப்படி முடிக்கின்றார், ‘காயத்ரி எங்கே இருக்கா மாப்ள..?’ என் பதில் “பத்து வருடத்துக்கு முந்தைய டென்த் ஏ கிளாஸ் ரூம்ல”. இவர் வரையில் இவரை ஈர்ந்த அந்த பெண் அப்படியேத்தான் இருக்கின்றாள். எனக்கும் ஒருத்தி இருக்கின்றாள். என் 8 வயது குட்டி தேவதை அவள். இப்போது வளர்ந்து விரைவில் திருமணம் செய்விருக்கின்றாள். 8 வயதில் அவள் சொன்ன தேவதைகள் கதைதான் , கதைகேட்கும் ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியது. இன்னும் கூட அவள் வளந்துவிட்டால் என்பதை என்னால் நம்ம முடியவில்லை. மன்னித்து விடு குட்டி தேவதையே.. நாளை உனக்கே ஒரு தேவதை பிறந்தாலும்.. சத்தியமாய் நீ, அப்போதும் இவனுக்கு குட்டி தேவதைதான். நன்றி நா.மு-வின் காயத்ரிக்கும் எனது கோமதிக்கும்.

‘அப்பாவின் உலகம்’ என் அப்பாவில் DNA இங்கிருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்க வைத்தை கவிதை. தன் தந்தையின் புத்தக ஆர்வத்தை சொல்லிக்காட்டியவர் நிறைவு வரிகளில் தனக்கான பயத்தை பதிகின்றார் இப்படி, “ஒரு மூட்டை புத்தகம் கிடைத்தால் என்னையும் விற்றுவிடுவார்” இப்படி சொல்லக்கூடிய தகுதி என் தந்தைக்கும் இருக்கின்றது. நாளை என்னை தந்தையாக்கும் பிள்ளைக்கும் இருக்கும். நீங்கள் எப்படி….?

இன்னமும் பல கவிதைகள் நமக்கு கேள்வியாகவும் நமது மனதின் பதிலாகவும் இவர் பேனா படைத்திருக்கின்றது. புத்தகத்தின் நிறைவாக இவர் சொல்லியிருக்கும் ஹைக்கூ பற்றி சொல்லவேண்டுமெனில் பக்கங்கள் போதாது. இருந்தும் சிலவற்றை பகிர்கின்றேன்.

'பொருட்படுத்தா மனிதர்களை
நாற்றத்தால் அரைந்தது
குடல் சரிந்த நாய்’‘

இறந்த நாயைக் கண்டும் கண்டுக்கொள்ளாமல் செல்லும் பொருப்பற்றவர்களை இந்த வரிகள் அரையும், நாயின் நாற்றத்தைப் போல.

’பன்றிகளின்
காய்ந்த கழிவுகளில்
தக்காளிச் செடிகள்’’


தொடக்கத்தில் இதை எழுத எனக்கு தகுதி உண்டா…? யார் இவன்..? போன்ற கேள்விகள் இன்னமும் உங்கள் மனதில் இருக்குமென்றால் அண்ணன் நா.மு-வின் இந்த சவுக்கடி உங்களுக்குத்தான் சொந்தம்.

இறுதியாக அண்ணன் சொல்லும் “ஒப்புதல் வாக்குமூலம்”

நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கான
மூன்று குறிப்புகள்.
ஒன்று
நான் கவிதை எழுதுகின்றேன்;
இரண்டு
அதை கிழிக்காமல் இருக்கின்றேன்:
மூன்று
உங்களிடம் படிக்கச் சொல்கின்றேன்…’’

இவர் சொல்வதை பார்த்தால் நானும் நல்லவனில்லை என்பதற்கு நான்காவது காரணம். படித்த கவிதையை உங்களோடு பகின்ர்கின்றேன் நீங்களும் வாங்கிப் படித்து கருத்தை பகிரும் நோக்கத்தில்.

இதனுடன் விடைபெறுகின்றேன்

அடுத்த புத்தகத்தில் சந்திப்போம்
நன்றி,
தயாஜி






Related Posts:

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்