- ஆறுதல் -
எதையெல்லாம்
மறக்கக்கூடாது என நினைக்கிறோமோ
அதைத்தான் முதலில் மறக்கிறோம்
எதையெல்லாம்
இழக்கக்கூடாது என
நினைக்கிறோமோ
அதைத்தான் முதலில் இழக்கிறோம்
எதையெல்லாம்
விலகக்கூடாது என
நினைக்கிறோமோ
அங்குதான் முதலில் விலகுகிறோம்
எதையெல்லாம்
பார்க்கக்கூடாது என
நினைக்கிறோமோ
அதைத்தான் முதலில் பார்க்கிறோம்
எதையெல்லாம்
பழகக்கூடாது என
நினைக்கிறோமோ
அதைத்தான் முதலில் பழகுகிறோம்
எல்லாம் முடிந்த பின்
எதுவுமே முடியவில்லை என்றாவது
யாரும் சொல்வார்களா
என
தேடித்தேடிப்பார்க்கிறோம்
நமக்கு ஆறுதல் சொல்ல
நம்மைவிட நமக்கருகில்
யார்தான் வந்துவிடப்போகிறார்கள்..
0 comments:
கருத்துரையிடுக