பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 31, 2025

- சொல்லாததே சொற்களின் அர்த்தம் -

என் கவிதைகள்உங்களைஆறுதல் படுத்துவதாகச் சொல்லிஎழுதியெழுதிஎன்னை நானேஆறுதல் படுத்திக்கொள்கிறேன்எந்தவித குழப்பமும் இல்லாமல்கவிதைகள் வந்து நிற்கின்றனநான் மட்டும்வார்த்தைகளின் இடைவெளியில்சிக்கிவழியறியாது தவிக்கின்றேன்தண்ணீரில் பிறந்துதண்ணீரிலே இறக்கும்உப்பென கண்ணீரில் கரைந்துகண்ணீரிலே பிறக்ககவிதைகள்உண்டு...

மார்ச் 29, 2025

- மனிதரற்ற வீடுகள் -

தன் வாழும்நாள்  முழுக்க சொந்தமாய் வீடொன்று இல்லாத ஒருவனின்இறுதி ஊர்வலம் அதுவாடகை கட்டியே வாழ்க்கையைத்தொலைத்தவன் அவன்வாடகை கட்டாமல் வசைகளைச்சுமந்தவன் அவன்வீடே இல்லாமல்சாலையோரத்தில் சாய்ந்திருந்தவன் அவன்இரவு நேரம் மட்டும் கூரையுள்ள பேருந்து நிலையத்தில்அவனைப் பார்க்கலாம்பனியோ மழையோ...

மார்ச் 27, 2025

- வண்ணமிழக்கும் பகல்கள் -

 அது ஒரு வித்தியாசமான கனவுஎன்னைச் சுற்றிலும் எத்தனையோ பேர்வருகிறார்கள் போகிறார்கள்நன்கு கொழுத்த தேகத்தில்அவர்கள் பக்கத்தில் நான்துரும்பிலும் துரும்பெனசுருங்கி கிடக்கிறேன்என் முன்நீண்டதொரு சாப்பாட்டு மேசைமுழுக்க முழுக்கஉணவுகளால் மூழ்கடிக்கப்பட்டிருந்ததுஉலகின் ஒட்டுமொத்த உணவு வெள்ளத்தின்...

மார்ச் 26, 2025

- நிலமென்னும் நல்லூழ் -

ஒரு நிலத்தில்பெரும்பான்மை மனிதர்கள் எதற்காக கொண்டாடப்படுகிறார்களோஎவர்களை பந்தாடுகிறார்களோஎப்படி ஏளனப்படுத்துகிறார்களோஇன்னொரு நிலத்தில் சிறும்பான்மை மனிதர்கள் அதற்காகவே திண்டாடப்படுகிறார்கள்அடுத்தடுத்து பந்தாடப்படுகிறார்கள்அப்படியே ஏளனப்படுகிறார்கள்நிலமென்பது எதையும் புதைப்பதற்கு ...

மார்ச் 25, 2025

- கனவுத்தின்னிகள் -

இன்றொருநாள்ஓய்வெடுக்கலாம் எனஉறங்க நினைத்தால்உள்ளுக்குள்ளிருந்து கனவொன்றுஎக்கி குதித்துவெளியே வருகிறதுசிறுவயதின் கனவதுரொம்பவும் பிடித்த கனவதுஎப்போதெல்லாம் பரீட்சையில்லட்சியம்எதிர்கால ஆசை என எழுதச் சொல்லி கேட்கிறார்களோஅப்போதெல்லாம் அச்சு அசலாய்க்கொஞ்சமும் பிசகாமல்ஒரே மாதிரி எழுதி எழுதிபுள்ளிகளுக்கு...

மார்ச் 24, 2025

- சதிரங்க வினையாட்டு -

 இதுநம்நாடுஇது நம் நாடுஇ து நம் நாடுஇ து ந ம் நாடுஇ து ந ம் நா டுஇ   து   ந   ம் நா   டுஇ +@(&*:]@?#&#-@(@(℅©©=¢[> ...

மார்ச் 23, 2025

- கையும் வாயும் -

 பசிக்கிறதா என கேட்காமல்பசிக்கிறது எனவும்சொல்லாமல்தட்டு நிறையஎதையாவது எடுத்து வாயில் தினிக்கும் கைகளுக்கும்வாயில் தினித்த எல்லாவற்றையும் தின்று தீர்க்கும் வாய்களுக்கும்இருக்கும் உறவை புரிந்து கொள்ள தாயாகவும் சேயாகவும்இருக்க வேண்டுமென்பதில்லைகொடுக்கும் கையாகவோ கேட்கமுடியாத...

மார்ச் 22, 2025

- நெஞ்சின் நஞ்சுகள் -

 பழைய சட்டையில்எப்போதும் போலஉன் நினைவுகள்அங்கொன்றும் இங்கொன்றும்நூல்களென பிரிந்து கிடக்கின்றனஎன்னையும் உன்னையும் போலவே x2எப்படி திணித்தாலும்உள்நுழையாத நூல்  பஞ்சுகளாய்எப்படி தள்ளினாலும்வெளியேறாமல் நிற்கும்நினைவுகளின் நஞ்சுகளைஎன்ன செய்யலாம்எப்படி சமாளிக்கலாம்ஆலகால நஞ்சென்ற போதும்அதுசென்ற...

மார்ச் 21, 2025

- நிபந்தனையற்ற தண்டனை -

 எல்லா கடவுள்களையும்வரிசையாய் நிறுத்தியாருக்கு பலமதிகம் என்று சோதிக்கஎந்தப் பக்தனுக்குஅந்த இடத்தில் அதிகாரம் அதிகமாய் இருக்கிறதோஅந்தக் கடவுளே தன்னை பலசாலி என பிரகடனம் செய்து கொள்கின்றனசெய்தும் கொல்கின்றனஆகவேதான்மதத்தை பழித்தால் இங்கு தண்டனைஅது யார் மதம் என்பதுதான் முதல்...

மார்ச் 20, 2025

- தலை தப்பிய கடவுள் -

 தற்கொலை செய்துகொண்டவளின்கடிதம் ஒன்றுகைக்கு கிடைத்ததுரொம்பவும் நிதானமாகஅவளதைஎழுதியிருக்கக்கூடும்ரோஸ் காகிதத்தில்ஒவ்வொரு மூலையிலும்ரோஜா பூத்திருக்குமேஅந்தக் காகிதத்தைஎடுத்திருந்தாள்அதையும் அவள் பிள்ளையார் சுழியில்தான் தொடங்கியிருந்தாள்தன்னைக் காப்பாற்றாத கடவுளுக்குஎந்த கூந்தலுக்காக!வணக்கம்...

மார்ச் 19, 2025

- உஸ்... சத்தம் போடு -

எனக்கு என்னிடம்மிகவும் பிடித்ததுஎன் குரல்ஆனால்அது முக்கியமல்லஎப்போதிருந்து பிடிக்கிறதுஎன் சொல்கிறேன்அதுதான் முக்கியம்ஒருநாள்பேசியதற்காகநாக்கில் சூடு வைத்தார்கள்என்றாவதுபேசுவேன் என்பதற்காககழுத்தை நெரித்தார்கள்இனியெப்போதும்பேசக்கூடாது என்பதற்காகவாயில் அமிலத்தை ஊற்றினார்கள்அப்போதுதான் புத்தி வந்ததெனக்குஇந்த...

மார்ச் 18, 2025

- பசித்திருக்கும் பசி -

சர்க்கஸ் கோமாளியைசிங்கம் கடித்து குதறுகிறதுமேடை முழுக்க இரத்தம் தெறிக்கிறதுகாணக்கிடைக்காத முப்பரிணாம ஓவியக் காட்சி போலசட்டகத்தில் இருந்து பல்வேறு நிலையிலான சிவப்பு வண்ணங்கள் வழிந்து பார்வையாளர்களின்நாற்காலி கால்களை நனைக்கஅரங்கமே கைத்தட்டிஆர்ப்பறிக்கிறதுகோமாளியென்றால்குறும்புகள்...

மார்ச் 17, 2025

- கிணறு தாண்டிய வசைகள் -

'போடா நாயே...!'கையடக்கத்திரையைத் தட்டித்தடவி வார்த்தைகளைச் சேர்க்கும் போதேமனமும் சேர்ந்து அதிர்கிறதுதுணுக்குறுகிறதுஏறக்குறைய இதுவும் கூடபாதி கிணறு தாண்டிய வசை சொல்தான்அந்தரத்தில் தன் சுயம்தெரியாதுமிதந்து மிதந்து தப்பித்துக்கொள்கிறதுஅம்மா சொன்னால்ஒருமாதிரி கேட்கும்அப்பா சொன்னால் ஒருமாதிரி...

மார்ச் 16, 2025

- காயப்பெட்டகம் -

எல்லாம் முடிந்துவிட்டதுஎன்பதாகவட்சப்பில் செய்தி அனுப்பிப்ளாக் செய்துவிட்டவளிடம்ஒரேயொரு கேள்வி கேட்க வேண்டியுள்ளதுஅவள் சொன்ன'எல்லாம் முடிந்ததில்'எதையெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறாள்எதையெல்லாம்சேராமல் வைத்திருக்கிறாள்எதையெல்லாம் விட்டு வைத்திருக்கிறாள்எதையெல்லாம் விடாமல் வைத்திருக்கிறாள்என்பதைதான்எல்லாம்...

மார்ச் 15, 2025

- பாழாய்ப்போன பழக்கம் -

பெரிதாக அலட்டிக்கொள்ளஅவசியம் உண்டாசொல்லுங்கள்எப்படியும் நம்மைஏமாற்றத்தான் போகிறார்கள்அல்லதுநாமே சென்றுஏமாறத்தான் போகிறோம்வேறென்ன செய்யநமக்கு பழகிவிட்டதுஇந்த ஏமாற்றங்கள் எல்லாம்எங்கே எப்போது தொடங்கியது என நமக்குதான் தெரியவில்லைஅவர்களுக்குமிகத்துள்ளியமாகத் தெரிந்திருக்கிறதுநம்மை காட்டிலும்அதிகமாய்...

மார்ச் 14, 2025

- தீ பற்றும் கைகள் -

ஏதோ ஒன்றைஇறுக்கமாக பிடிக்கத்தான் வேண்டுமா?இல்லையென்றால் விழுந்துவிடுவோமா அல்லதுதள்ளிவிடுவார்களாதள்ளப்படுவதைவிடதானே விழுவதில்பெரிய பாதகமில்லைஆனாலும் பாதுகாப்பு அவசியம்யாரின் கைகளைநாம் பிடித்துக்கொண்டால்தப்பிக்கலாம்எவனொருவன் நம்வீழ்ச்சியில் சிரிப்பானோநாம் விழுந்தால் ரசிப்பானோநம் இயலாமையை...

மார்ச் 13, 2025

- தாலாட்டு -

 பூக்களை நேசிப்பவர்களுக்குபூந்தொட்டிகள் தேவையில்லைமீன்களை நேசிப்பவர்களுக்குமீன் தொட்டிகள்தேவையில்லைபறவைகளை நேசிப்பவர்களுக்குகூண்டுகள்தேவையில்லைகாதல் கவிதைகளுக்குகாதல் தேவையில்லை என்பது போலகவிதை எழுதுவதற்குகவிதையே தேவையில்லை என்பது போலவும்ஒன்றைச் சொந்தம் கொண்டாடவடிவமும் சிறையும் பூட்டும்...

மார்ச் 12, 2025

- எந்த நாவில் ஊறுகிறது இந்தக் காதல் -

 "சீ" என்று சொல்லிவிட்டதால்உடைந்த காதலும் உண்டுஉயிரையே எடுத்தாலும்உடையாத காதலும் உண்டுகாதலில் ஒரு தம்பதிகவியமாகிறார்கள்காதலில் மறு தம்பதிகாணாமலே போகிறார்கள்இனிப்பாக இருப்பதேசிலருக்கு கசப்பாய் அமைகிறதுகசப்பாய் இருப்பதேசிலருக்கு இனிப்பாய் இனிக்கிறதுசிலருக்கோ ருசியும் தெரிவதில்லைஅதன் பசியும்...

மார்ச் 11, 2025

- தொடாவானம் -

 உண்மையைச் சொல்லுங்கள் மறைக்காமல் சொல்லுங்கள்அன்பின் பெயரால்கூர்வாளை மார்பில் ஏந்திஉடல் உடைந்தூற்றும் உதிரத்தில் பூக்களை மலர்விப்பவர்கள் நீங்கள்தானேவலிக்கவில்லை வலிக்கவில்லையெனசிரித்துக்கொண்டே செல்பவர்கள் நீங்கள்தானேமுழுக்க முட்டாளாக்கி உங்களை உதாசினம் செய்பவர்களுக்காகவும்நீங்கள்...

மார்ச் 10, 2025

- மறைந்தாடும் மௌனிகள் -

அந்த மௌனத்தைஅப்படியே விட்டுவிடலாம்தானேஎன் சகாவேஏன் தடுமாறுகிறாய்மீண்டும் மீண்டும்காயப்படும் இதயத்தின்வலியைஇன்னும் எத்தனை நாட்கள்தான்பொறுப்பாய்நெருப்பாய் விழும்சொற்களைவெறுமனே தாங்கிகொள்ளஉன் இதயம் என்னகற்களா அவர்கள்மௌனம் காக்கிறார்கள் என்றால்உன்னை இன்னமுமேவதைக்க வழிமுறைகளை யோசிக்கிறார்கள்என...

மார்ச் 09, 2025

- சமாதி புறா -

 தொலைக்காட்சி விவாதமேடைகாதலால் சாதியை எதிர்த்துஓடிப்போய்எங்கோ ஓர் மூலையில்நிம்மதியாய்வாழ்ந்திருந்த தம்பதிகள்முகம் காட்டினார்கள்கடந்த காலத்தின்கசப்புகளையும் எதிர்காலத்தின் நம்பிக்கையையும்கண்கலங்க பேசினார்கள்இழந்துவிட்டஅம்மாவின் பாசம்அப்பாவின் அக்கறைஅண்ணன் தம்பிகளின் அரவணைப்புஅக்கா தங்கைகளின்...

மார்ச் 08, 2025

- அரசியல்வியாதி -

 எழுத எதுவும்இல்லையென்றால்இருக்கவே இருக்கிறதுகிறுக்கல்பகிர எதுவும்இல்லையென்றால்இருக்கவே இருக்கிறதுபுரளிபாட எதுவும்இல்லையென்றால்இருக்கவே இருக்கிறதுஒப்பாரிபேச எதுவும்இல்லையென்றால்இருக்கவே இருக்கிறதுவசைசிரிக்க எதுவும்இல்லையென்றால்இருக்கவே இருக்கிறதுபகடிதப்பிக்க எதுவும்இல்லையென்றால்இருக்கவே இருக்கிறதுகழிவிரக்கம்மில்லியன்...

மார்ச் 07, 2025

- பி(ர/ரே)மை -

 சகாவேதற்கொலைக்கும் முக்தியடைவதற்கும்என்ன வித்தியாசம்எங்கே போகிறோம் எதற்கு போகிறோம்ஏன் போகிறோம்என்கிறதெளிவின் ஆழம்தான் இல்லையாஎன்னை மறைத்துக்கொள்ளஎனக்கிருப்பது என் கவிதைகள்மட்டுமேஎன்னை கண்டுபிடிக்கஉனக்கிருப்பதும்என் கவிதைகள் மட்டுமேயாராவதென்னைகண்டறியட்டும் என்றேகாலம் முழுக்கமறைந்தாடுகிறேன்நான்...

மார்ச் 06, 2025

- ஒரே கவிதை -

 நெடுநாட்களாக மனதை இம்சித்திருந்தகவிதையை இன்று எப்படியோ எழுதி முடித்து விட்டேன்இன்றுதான்எதோ கொஞ்சம்பெருமூச்சு விடமுடிகிறதுஇனியாவதுநிம்மதியாய் உறங்குவாயாஎன கேட்கிறாள்இல்லைஇனி ஒருபோதும்என்னால் நிம்மதியாகவேஇருக்க முடியாதுநாம் அடுத்த கவிதைக்குசெல்லவேண்டாமாஒரு கவிதை என்பதைஒரே கவிதை...

மார்ச் 05, 2025

- சொற்களே வாதை, சொற்களே போதை, சொற்களே பாதை -

 ஒருவனை உடைக்கஒரு சொல்போதுமானதுஒருவனை வதைக்கஒரு சொல்போதுமானதுஒருவனை சிதைக்க ஒரு சொல்போதுமானதுஒருவனை வஞ்சிக்கஒரு சொல்போதுமானதுஒருவனை தாழ்த்தஒரு சொல் போதுமானதுஒருவனை வீழ்த்தஒரு சொல்போதுமானதுஆனால்,ஒருவன் தன் தேடலைதெரியஒருவன் தன் மீட்சியை அறியஒருவன் தன் அறத்தை விளங்கஒருவன் தன் அவமானத்தைதுடைக்கஆயிரமாயிரம்...

மார்ச் 04, 2025

- உனக்கு வேறு கவிதை -

 அன்பேஉனக்கொரு காதல் கவிதைஅனுப்பியிருந்தேன் வாசித்தாயா?என் மனதிலிருந்த வார்த்தைகளைஎந்த பாசாங்குமின்றிஎந்த ஒளிவும் மறைவும் இன்றிவார்த்தைகளில் வடித்திருக்கிறேன்நாம் இருவருக்குமானகாதல் காவியத்தைஉனக்கே உனக்கெனசெதுக்கியிருக்கிறேன்இப்படியொரு கவிதையைஇன்னொருவன் எழுதவே முடியாதபடிக்கு எழுதியிருக்கிறேன்வாசித்தாயாஇல்லையென்றால்ரொம்பவும்...

மார்ச் 03, 2025

- மழையடிக்கும் குடை -

 மழைவிடும் வரைகுடை என்பது கொடைபெருங்கொடைமழைவிட்ட பின்அக்குடையே நமக்கு தடை பெருந்தடைஇங்கு தடையாகும் ஏதொன்றும்நமக்கொருநாளில் பெருங்கொடையென இருந்ததைஅறிந்து கொள்மனமேஅறிவில் கொள் தினமே....

மார்ச் 02, 2025

- எளிய மனிதனின் ஆயுதம் -

தனக்கென்ற மேளத்தைதானே அடித்துதன் தாண்டிஇசையைக் கொடுத்துவயிறு நிறைத்தவனின்மேளத்தை பிடுங்கிவிட்டீர்கள்சாட்டையில் முட்களை சொருகிவிட்டீர்கள்அடையாளத்தை அழித்துவிட்டீர்கள்உங்கள் பாவங்களுக்குஆயிரம் காரணம் இருக்கலாம்மேளமடிப்பதற்கு பதில்தன் மேல் தோலைஅடித்து அடித்துசதைகளின் பிளவில்குருதிகளின் கொடையில்நிறுத்தாமலவன் இசையைக்...

மார்ச் 01, 2025

- தொப்பை முளைத்த தலைகள் -

அப்போதெல்லாம்எப்போதாவது அந்தத் தாத்தாஎங்கள் வீட்டு லயத்தில் சைக்கிளோடு வருவார்ஒருபோதும் உட்கார்ந்து வரமாட்டார்நீண்ட நடைப்பயண தோழன் போல்சைக்கிள் தோளில்கையைப் போட்டுகொண்டுநடந்துதான் வருவார்இன்னொரு கையோசைக்கிள் சீட்டில்அமர்ந்திருக்கும் வண்ணமிட்டபெட்டியைத் தாங்கியிருக்கும்கையடக்க பூஜை...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்