- பாவச்சுழல் -
தன்னைத்தானே
தண்டிக்கும்
கண்ணீரில் கரையும்
கழுவேற்றிக்கொள்ளும்
மனிதனை
எல்லோருமே விரும்புகிறார்கள்
மன்னிப்பதை போல
அதில்
எந்தவித சிரமமும்
எந்தவொரு வருத்தமும்
எப்படியான துக்கமும்
குற்றவுணர்ச்சியும்
அவர்களுக்கில்லை
ஆகவே
தன்னைத்தானே
தண்டிக்கும்
கண்ணீரில் கரையும்
கழுவேற்றிக்கொள்ளும்
மனிதனை எல்லோருமே
விரும்புகிறார்கள்
1 comments:
அறுமை சகோ
கருத்துரையிடுக