- குடும்ப நண்பருக்கான விண்ணப்ப பாரம் -
ஒருவரின் குடும்ப நண்பராக இருப்பதற்கு தேவைப்படும்
தகுதிகள் இவை :-
முதலாவது
நாம்
பிரபலமாக இருக்க வேண்டும்
இரண்டாவது
நாம்
அரசியல்வாதியாக இருக்க வேண்டும்
மூன்றாவது
நாம்
அழகாக இருக்க வேண்டும்
அடுத்தது
நாம்
பணக்காரராக இருக்க வேண்டும்
அடுத்தது
நாம்
அவர்களைவிட வசதியாக இருக்க வேண்டும்
நாம்
பெரிய கார் வைத்திருக்க வேண்டும்
நாம்
மருத்துவராக இருக்க வேண்டும்
நாம்
வழக்கறிஞராக இருக்க வேண்டும்
நாம்
சமூக வலைத்தளத்தில் குறைந்தது
அரை மில்லியனாவது ஃபாளோவர் வைத்திருக்க வேண்டும்
இத்யாதி...
இத்யாதி...
பின் குறிப்பு ;
தவறியும் நாம் அந்தக்
குடும்பத்தில் ஒருவராகவோ அவர்களுக்கு
நண்பராகவோ இருந்துவிட கூடாது;
நிராகரிக்கப்படுவோம்.
0 comments:
கருத்துரையிடுக