- இன்னும் இருக்கின்றன 10 நாட்கள் 10 சிறுகதைகள் -
இன்று டிசம்பர் 10. வரும் டிசம்பர் 21க்கு எழுத்தாளர் பெருமாள்முருகனை ‘வல்லினம் விருது விழாவில்’ நண்பர்கள் சந்திக்கலாம். அவரின் வருகையை முன்னிட்டு எளிய வாசகனாய் என்னால் செய்ய முடிந்தது அவரது சிறுகதைகள் குறித்து எழுதுவதுதான்.
நாம் நம்பும் இலக்கியத்திற்கு நம்மால் செய்ய முடிந்ததை மனதார செய்வதில் நமக்கு எப்போதும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். நான் இப்படி செய்வது இனி வரவிருக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் பாராட்டு பெரும் எழுத்தாளர்களுக்கும் ஒவ்வொரு வாசகனும் செய்ய ஏதுவாய் இருக்கும் என நம்புகிறேன்.
எழுத்தாளர் பெருமாள்முருகனை முதன்முதலில் நான் வாசித்தது 2014-ஆம் ஆண்டுவாக்கில்தான். அதுவரையில் அங்கொன்றும் இங்கொன்றும் என நான் வாசித்த அவரின் கதைகளை ஒரு புத்தகமாக வாங்கி வாசித்தது அப்போதுதான். அதுவும் எனக்கு கிடைத்த சிறுகதைத் தொகுப்பு ‘பீக்கதைகள்’. தலைப்பை வாசிக்கும் போதே எனக்கு என்னமோ போல் இருந்தது. அப்போது இருபது வயதைக் கடந்து முப்பதை நெருங்கியிருந்தேன். ‘பீ’ என்று சொல்லவோ எழுதவோ சிறு தயக்கம் இருந்த காலக்கட்டம். ‘மலம்’ என்றும் ‘கக்கா’ என்றும் சொல்லிப் பழகிவிட்டதால் ‘பீ’ என்று சொல்வது எனக்கு அந்நியமாகப் பட்டிருந்தது.
இந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசிக்க வாசிக்க, அந்நியத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையும் அவர்களின் பாசாங்கற்ற மொழியும் எனக்கு நெருக்கமாகியது. இந்தக் கதைகளை வாசிக்கும் போதே சந்திக்கும் நண்பர்களிடம் இந்தக் கதைகளை குறித்து பேசுவேன். தொடக்கத்தில் எனக்கு இருந்த அதே அந்நியத்தன்மை அவர்களுக்கு இருந்தது. மெல்ல மெல்ல அந்தக் கதைகளில் சொல்லப்பட்ட வாழ்க்கையை நானும் புரிந்து கொண்டு நண்பர்களுடன் பேசும்போது; அவர்களால் அந்தக் கதைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.
பதினான்கு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு அது. ஒவ்வொரு சிறுகதையிலும் மலமோ கழிவறையோ வந்துவிடும். அதுவும் கதையில் ஒரு முக்கியமான அங்கமாகவோ திருப்பமாகவோ ஒரு பொறியாகவோ வரும்.
அன்றையச் சூழலில் நான் சந்திந்த இன்னல்களும் எனக்கு நிகழ்ந்த எதிர்ப்பாராத சம்பவங்களும் என் இருப்பை கேள்விக்குறியாக்கியதோடு என் வாசிப்பையும் மடைமாற்றியது.
இன்று இந்தக் கட்டுரையை எழுதும் பொருட்டு மீண்டும் பெருமாள்முருகன் கதைகளுக்குள் நுழைகிறேன். எந்த முன்முடிவுகளும் இல்லாமல் அவரின் ஒரு புத்தகத்தைத் திறந்து அதிலிருந்து ஒரு சிறுகதையை வாசித்து அதையொட்டிய என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன்.
அந்தச் சிறுகதை எனக்கு என்ன கொடுக்கின்றதோ அதையே வெளிப்படையாக எழுதுகிறேன். இது ஒருவகையில் சிறுகதைகளை விரும்பி வாசிக்கும் நமக்கும் ஒரு பயிற்சியாக இருக்கும்.
இன்றுவரை பெருமாள்முருகனின் பத்து சிறுகதைகளைக் குறித்து தினம் ஒரு சிறுகதை என எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரையின் முடிவில் அந்தக் கட்டுரைகளுக்கான இணைபையும் இணைக்கின்றேன். வாசிக்காதவர்கள் அல்லது தவறவிட்டவர்கள் ஒருமுறை வாசிக்கலாம்.
இன்னும் பத்து சிறுகதைகளை எழுதவுள்ளேன். அதனையும் நீங்கள் வாசிப்பீர்கள் என நம்புகிறேன். நான் நம்பும் இலக்கிய செயல்பாடு எங்கெல்லாம் இருக்கிறது என நான் நம்புகிறேனோ அங்கெல்லாம் செல்லவும் என் பங்களிப்பைக் கொடுக்கவும் எனக்கு நானே தடையாக இருக்க விரும்பவில்லை.
இதுவரை எழுதிய கட்டுரைகளின் இணைப்பை கமெண்ட் பாக்சில் கொடுத்துள்ளேன்.
1. ஆட்டம் http://tayagvellairoja.blogspot.com/2025/12/1.html
2. பொண்டாட்டி http://tayagvellairoja.blogspot.com/2025/12/blog-post_04.html
3. மாயம் http://tayagvellairoja.blogspot.com/2025/12/3.html
4. பசி http://tayagvellairoja.blogspot.com/2025/12/4.html
5. அருவி http://tayagvellairoja.blogspot.com/2025/12/520.html
6. நாய் http://tayagvellairoja.blogspot.com/2025/12/620.html
7. பந்தயம் http://tayagvellairoja.blogspot.com/2025/12/720.html
8. அபிசேகம் http://tayagvellairoja.blogspot.com/2025/12/820.html
9. தொடை http://tayagvellairoja.blogspot.com/2025/12/920.html
10. தொழில் http://tayagvellairoja.blogspot.com/2025/12/1020.html
வாய்ப்புள்ள நண்பர்கள் எனது இந்த வாசிப்பு அனுபவத்தை வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். இதன்வழி எழுத்தாளரை சந்திக்கும் முன் நீங்களும் அவரது சிறுகதைகளை வாசித்து வருவீர்கள் என நம்புகின்றேன்.
0 comments:
கருத்துரையிடுக