ஸ்படிக கிரீடக்காரி

கனத்த மழையின் நாளொன்றில்
நினைவிருக்கிறதா
நாம் சந்தித்துக்கொண்டோம்
அது சந்திப்புதானா என முழுமையாய்
புரியவில்லை
வேறெந்த பெயர் வைக்கவும் தெரியவில்லை
தைரியமுமில்லை
உன்னிடம் மட்டும் ஒரு குடை
மழையில் தன்னை நனைந்துக் கொண்டிருந்தது
பிரபஞ்சத்தின் கண்டுபிடிப்பாய்
உனக்கு
ஸ்படிக மழைத்துளிகளின் கிரீடம்...