'கிருஸ்ணபிள்ளை' குறித்து
பேராசிரியர் எழுத்தாளர் அம்ரிதா ஏயம் அவர்களின் 'கிருஸ்ணபிள்ளை' சிறுகதையைக் குறித்து #கதைவாசிப்பு_2020_7 லில், அதன் வாசிப்பு அனுபவம் குறித்து எழுதியிருந்தேன்.
http://tayagvellairoja.blogspot.com/2020/01/20208.html அதனை இங்கு சுட்டி வாசிக்கலாம்.
இக்கதையைக் குறித்த கதாசிரியரின் நினைவுகளை அவர் தன் முகநூலில் பகிர்ந்துக்கொண்டார். அதனை அவரின் அனுமதியுடன் இங்கு பகிர்கிறேன்.
எழுத்தாளரின் முகநூல் பதிவு
நண்பர் தயாஜி, எனது ”விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்” என்ற தொகுதியிலுள்ள ”கிருஸ்ணபிள்ளை" என்ற சிறுகதைக்கு அந்தப் பிரதிக்கான ஒரு பார்வையைத் தந்திருக்கின்றார்.
எனது மூன்றாவது கதையான கிருஸ்ணபிள்ளை. கண்ணில் தெரியுது வானம். இ.பத்மநாப ஐயர் (தொகுப்பாசிரியர்). 520 பக்கங்கள். தமிழர் நலன்புரிச் சங்கத்தின் (நியுஹாம்-இலண்டன்) சார்பில் வெளியிடப்படும் ஆண்டு மலரில் வெளிவந்தது. தமிழ்நாட்டில் ஈழத்து சிறுகதைகள் தொகுப்பிலும் வெளிவந்திருக்கலாம் என நினைக்கிறேன். அத்துடன் அக்காலங்களிலும், இப்போதும் பல்வேறு இணையத்தளங்களிலும், பத்திரிகைகளிலும் மிகப்பரவலாக பகிரப்பட்ட, பகிரப்படும் ஒரு கதை.
2003, 2004 களில் இந்தக் கதையை மையமாக வைத்து பல சர்வதேச விருதுகளை வென்ற கிச்சான் என்ற குறுந்திரைப்படம் இலங்கையில் ஏ. விமல்ராஜ், விரிவுரையாளர், கிழக்கு பல்லைக்கழகம், நெறியாள்கையிலும், திரு. ஏ. அனிஸ், இந்தியா, நடிகர் நாஸர் அவர்களின் உதவி நெறியாளர் பல படங்களுக்கு, மற்றும் திருமணம் என்னும் நிக்காஹ் நெறியாளர் அவர்களின் மேற்பார்வையிலும் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படவாக்கத்தில் எனக்கு நல்லதொரு அனுபவத்தையும், கற்றலையும் தருவதற்காக நண்பர்கள் விமல்ராஜிம், அனிசும் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை என்னை ஈடுபடுத்தினார்கள். உண்மையிலேயே நல்ல அனுபவமாக இருந்தது. ஆனால் வெளிவந்த காலத்தில் நான் வெளிநாட்டில் இருந்தபடியால் இன்னும் அந்தப் படத்தை பார்க்கவில்லை என்பது முரண்நகை. கிருஸ்ணபிள்ளை, கிட்டு என்று மாறி, சில பல காரணங்களால் கிச்சானாக மாறியது.
இந்தக் கதைகயின் கிருஸ்ணபிள்ளையின் உண்மையான பெயர் ..... பெயராகும். சிறுவர் போராளி. அவன் விதி என்னவாயிற்று என்று இன்றும் தெரியவில்லை. மற்றையவர்களையும் தேடுகிறேன். அவர்களின் விதியும் தெரியவில்லை. தேடல் தொடருகிறது…
0 comments:
கருத்துரையிடுக