பட்டுக்கோட்டை பிரபாகரின் - மைக்ரோ கதை தேடல்
சமீபத்தில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் முகநூலில்;
‘தமிழில் நீங்கள் எழுதும் சிறந்த
மைக்ரோ கதைகளுக்கு
பரிசளிக்கக் காத்திருக்கிறேன்.
கதைகளை பொதுவெளியில்
பின்னூட்டமாகவும் எழுதலாம்.
அல்லது எனது உள் பெட்டிக்கும்
அனுப்பலாம்.’
என கேட்டிருந்தார். பலர் முயற்சித்தார்கள்; நானும். எனது மைக்ரோ கதை அதில் ஒன்றாக தேர்வாகியுள்ளது. நன்றி. மகிழ்ச்சி.
-----------------------------------------------------------------------------------------------------
எழுத்தாளர் பட்டுக்கோட்டை அவர்கள் வெற்றியாளர்களை அறிவிக்கும் போது;
-----------------------------------------------------------------------------------------------------
எழுத்தாளர் பட்டுக்கோட்டை அவர்கள் வெற்றியாளர்களை அறிவிக்கும் போது;
'வீட்டுக்கொரு கற்பனைக்- காரன்/காரி இருப்பதறியாமல் எழுதச்சொல்லிவிட்டேன்.
பின்னூட்டமாகவும் உள் பெட்டியிலுமாக
மொத்தம் வந்த மைக்ரோ கதைகள் 613.
பின்னூட்டமாகவும் உள் பெட்டியிலுமாக
மொத்தம் வந்த மைக்ரோ கதைகள் 613.
சிலர் கதைகளில் முயற்சி இருந்தது.
சிலர் கதைகளில் பயிற்சி இருந்தது.
சிலர் கதைகளில் பயிற்சி இருந்தது.
பல வகையான கதைகள் சுவாரசியமாக இருந்தன. இதிலிருந்து பத்து கதைகளை மட்டும் தேர்வுசெய்ய சிரமமாக இருந்ததால் 25 மைக்ரோ கதைகளைத் தேர்வுசெய்திருக்கிறேன். சுவாரசியம் கூட்ட சில கதைகளை சற்றே திருத்தியமைத்திருக்கிறேன்.
மற்ற கதைகளையும் ரசித்தேன். அவைகள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று அர்த்தமல்ல.. இந்த 25 கொஞ்சம் தூக்கலாக மனதில் இடம் பிடித்தவை. அவ்வளவுதான்.
ஆர்வத்துடன் கலந்துகொண்ட அனைவருக்குமே என் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!'
அவர் கொடுத்திருந்த சில புகழ்பெற்ற இரண்டு வரி மைக்ரோ கதைகள்.
இறுதியில் தேர்வான எனது மைக்ரோ கதை உள்ளது.
உலகத்திலேயே மிகவும் குட்டிக் கதை
ஆறே வார்த்தைகளில்
ஹெமிங்வே எழுதியது.
“For sale: Baby shoes. Never worn.”
விற்பனைக்கு: குழந்தையின் செருப்பு - ஒருபோதும் அணியப்படாதது!
--------------------------------------------------------------------------------
He asked,"Are you a HIndu or Muslim?''.
The response came,"I am hungry''
அவன் கேட்டான்," நீ இந்துவா முஸ்லிமா?''
பதில் வந்தது," எனக்கு பசிக்கிறது!''
-------------------------------------------------------------------------------
Man and God both met somewhere.
Both exclaimed,"My creator!'
மனிதனும் கடவுளும் சந்தித்தார்கள்.
இருவருமே வியந்தார்கள்,"என்னைப் படைத்தவன்!''
--------------------------------------------------------------------------------
"wrong number'' said a familiar voice.
"தவறான எண்'' என்றது பரிச்சயமான குரல்.
----------------------------------------------------------------------------
What if God asks you after you die,"So how was heaven?''
இறந்த பிறகு கடவுள் ஒரு வேளை உங்களிடம், "சொர்க்கம் எப்படி இருந்தது?'' என்று கேட்டால்..?
----------------------------------------------------------------------------
We don't make friends anymore. We add them
nowadays!
இப்போதெல்லாம்
நாம் நண்பர்களை உருவாக்குவதில்லை. சேர்க்கிறோம்!
--------------------------------------------------------------------------------------------
தேர்வான எனது மைக்ரோ கதை கீழே.
தேர்வு செய்திருந்த எழுத்தாளர்
பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுக்கு நன்றி
(எண் 11.)
'அவன் அதிர்ஷ்டக்காரன்! மனைவி கிடைத்தாள் மார்பில் பச்சைக் குத்திய காதலியின் பெயரிலேயே!'
-தயாஜி வெள்ளைரோஜா
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுக்கு என் நன்றி. மகிழ்ச்சி
0 comments:
கருத்துரையிடுக