பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 16, 2020

'தறு' குறித்து

பேராசிரியர் எழுத்தாளர் அம்ரிதா ஏயம் அவர்களின் 'தறு' சிறுகதையைக் குறித்து #கதைவாசிப்பு_2020_7 லில், அதன் வாசிப்பு அனுபவம் குறித்து எழுதியிருந்தேன்.
http://tayagvellairoja.blogspot.com/2020/01/20207.html அதனை இங்கு சுட்டி வாசிக்கலாம்.

       அக்கதையின் நாயகன் கடலில் மூழ்கி கடல் அட்டைகளை எடுத்து விற்பனை செய்பவனாக இருப்பார்.
கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல கடல் அட்டை பிடிப்பது பலருக்கு பரிட்ச்சயம் இல்லை. அக்கதையை வாசிக்கையும் எனக்கும் கூட முதலில் அந்த குழப்பம் வந்தது. எழுத்தாளரிடம் என் ஐயத்தை போக்கி கொண்டேன். இன்னும் பலருக்கு அத்தகைய ஐயம் இருக்கலாம். என்னிடமும் சிலர் அது குறித்து கேட்கிறீர்கள்.
அவர்களுக்கு, எழுத்தாளர் தன் முகநூலில் பகிர்ந்த சில விபரங்களைப் பகிர்ந்துக் கொள்கிறேன். 
புகைப்படங்களையும் தகவலையும் பகிர்ந்துக்கொள்ள வாய்ப்பு கொடுத்தமைக்கு அவருக்கு நம் அன்பு.

- தயாஜி

எழுத்தாளரின் முகநூல் பதிவு


கடல் அட்டைகள் கடலில் வாழும் முள்ளந்தண்டில்லாத, மிக மிக மெதுவாக நகரும் விலங்கினமாகும். உலகிலே ஆயிரத்திற்கு மேற்பட்ட கடல்அட்டை இனங்கள் காணப்படுகின்றன. 

இலங்கையில் 24 இனங்கள் காணப்படுகின்றன. அவைகளில் பொறுளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை 10 இனங்களாகும். கறுப்பு நிற, வெள்ளை நிற, மண்ணிற அட்டைகளுக்கே பெரும் கிராக்கி இருக்கின்றது. சீனா, துாரகிழக்காசிய நாடுகளில் இது மிகவும் சுவையுள்ள உணவாகும். 
இலங்கையில் பெரும்பாலும் இது உணவாக பாவிக்கப்படுவதில்லை. தேர்ந்ததெடுத்து இனங்கள் அகற்றப்படும்போது சூழற்சமனிலை பாதிக்கப்படுகின்றது. சில இனங்கள் அழிவின் விழிம்பில் இருப்பதாக கருதப்படுகின்றது. ஆனால் இந்த கடலட்டை எடுப்பதைத் தடுப்பதற்கான உத்திகள் நடைமுறைரீதியாக பெரிய செயற்பாட்டில் இல்லை.


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்