பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 25, 2022

- தப்புக்கணக்கு -


- தப்புக்கணக்கு -

உலகநாடுகளில் இருந்து உதவித்தொகை வந்துவிட்டது. இனி மக்கள் கவலைக்கொள்ள வேண்டாம் என்கிற அறிவிப்பு பலறையும் பெருமூச்சு விட வைத்தது.

யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் நாட்டில் ஏற்பட்ட புயல் காற்று, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகள் வரலாறு காணாதது. இனி கிடைத்த உதவித்தோகையை மக்களுக்காக, மக்களின் அடுத்த கட்டத்திற்காக, மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்வதற்காக பயன்படுத்த வேண்டியக் கடப்பாட்டை ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் ஒரு சேர பரப்புரை செய்கிறார்கள்.

ஆயினும் முறையான கணக்கை மக்களிடம் சேர்ப்பிப்பதுதான் முறை.

மக்கள் கவனத்திற்கு;

- உதவிக்கரம் நீட்டிய நாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் 20% கொடுக்கப்பட்டது.

- ஒத்துழைத்த எதிர்க்கட்சிக்கு நிதி உதவியாக 20% கொடுக்கப்பட்டது.

- பணம் கிடைத்த செய்திகளை மக்களிடம் சேர்ப்பிக்க ஊடகங்களுக்கு 15% கொடுக்கப்பட்டது.

- இரவு பகலாக மக்கள் பணியில் இருக்கும் கட்சிகளுக்கு 15% கொடுக்கப்பட்டது.

- உலக நாடுகளிடம் சமகால அவசர நிலையைத் தெரியப்படுத்திய அரசியல்வாதிகளுக்கு உக்கத்தொகையாக 15% கொடுக்கப்பட்டது.

- பாதிக்கப்பட்ட மக்களை கண்டறியும் பணியில் இருக்கும் கட்சி உறுப்பினர்களுக்கு 10% கொடுக்கப்பட்டது.

- இது போக மீதமிருக்கும் 5%மும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்று சேரும் என்பதை தன்னார்வலர்கள் உறுதி செய்யும் படிக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு மக்களால் நாங்கள்; மக்களுக்கு நாங்கள்;  மக்களுக்காகவே நாங்கள்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
#குறுங்கதை

5 comments:

uma சொன்னது…

நெத்தியடி கதை. நடைமுறை அவலம் அழகாய்ச் சொல்லப்பட்டுள்ளது.

Unknown சொன்னது…

அருமையான கதையோட்டம். நிதர்சனமான உண்மை.
நன்றி 🙏

Nedunilam சொன்னது…

நாட்டு நடப்பை 'நச்'சென்று சொன்னீர்கள். Government Of people, by people and for people.

சூரிய நிலா சொன்னது…

சிறந்த கதையோட்டம். படித்தவுடன் புரிந்து கொள்ளும் வகையில் நகர்த்தப் பட்டுள்ளது. இக்கால கட்டத்திற்கு ஏற்ற கதை.

சூரிய நிலா சொன்னது…

சிறந்த கதையோட்டம். படித்தவுடன் புரிந்து கொள்ளும் வகையில் நகர்த்தப் பட்டுள்ளது. இக்கால கட்டத்திற்கு ஏற்ற கதை.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்