பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 20, 2010

தீபாவளிப் பதிவுகள் 2010

புகைப்படம் என்பது கணங்களின் நிறுத்தம்;
நாள்களை நீலமாக்கும் மாயை.....
அதிலும் சந்திப்பு கணங்களைக் கற்சிலையாக்கினால்;
காலத்தால் அது பொக்கிஷம்.......
இந்த தீபாவளி;
என் பல கணங்களை நிறுத்திய ஒரு
பரவசத் தீபாவளி...
சந்தர்ப்பங்கள் எப்போதும் சரியாக அமையாததால்
சதியாக நானும் காமிராவோடு கைகுலுக்கினேன்....

( புகைப்படம் )


ஓவியக் கண்காட்சியில் ஓய்வெடுப்பதுபோல்,
தலைகவிழ்த்த, உயிரின் மூலமாம் விநாயகனோடு
முதல் கணநிறுத்தம்....
எனக்குள் இருக்கும் பல்வேறு குணங்கள்,
இவருள்,
பதிந்திருப்பது எனக்கே ஆச்சர்யம்......

(புகைப்படம் 2)

பிரம்மான்ந்த சரஸ்வதி சுவாமிகள்,
பாலமுருகன் கேசவன்...
நான்....
கடாரமண்ணின் தனித்தனியே ஒருவரையொருவார்,
அறிந்திருந்தாலும் முதன் முதலாக,
எங்கள் மூவரையும் இணைத்த பெறுமை
தலைநகரையே சேரும்...

(புகைப்படம் 3)

மின்னல் வானொலியில்,
‘கண்ணாடித் துண்டுகள்’ நிகழ்ச்சிக்காக....
யார் யாரையோச் சந்தபோது ஏற்படாத ஒன்று;
புலம் பெயர்ந்த நம் தம்பி தங்கைகளைச்;
சந்தித்ததும் கிடைத்து...
தோழி பொன்கோகிலத்தால் இது கிட்டியது......
இந்த கணத்தை நிறுத்தினேன்; இவர்கள்
மனநிம்மதிக்கு பிரார்த்திக்க.....

(புகைப்படம் 4)

என் அப்பாவின் நாடகத்தில்;
எப்போதும் நாயகன் இவர்...
நாடக நடிகர் கே.குணசேகரன்
அரிதாய் கிடைத்த வாய்ப்பொன்றின்
அவருக்கு மகனாய் நான்.....
இந்த கணத்தின் பதிவு...
அப்பாவிற்கு பரிசாக....

(புகைப்படம் 5)

53வது சுதந்திரப் பதிவு இது;
வானொலித் தலைவர் பார்த்தசாரதியின்;
கைவண்ணம்....
இவ்வகை மிக அரிது.....
(புகைப்படம் 6)

வானொலித் தலைவரோடு;
இந்த கணத்தை பதித்தேன்,
வானளவு வளர்ச்சியின் ஒத்திகைக்காக.....
இரு ராஜாக்கள் நெஞ்சிலும் ரோஜாக்கள்....

(புகைப்படம் 7)

உன்னோடு நானும்
என்னோடு நீயும்;
பயணிப்பது நாவல் அல்ல....
உங்களோடு நாங்களும்
எங்களோடு நீங்களும்
பயணிப்பது நாவல் அல்லாமலல்ல....
ஆறு அடி வாக்கியத்தை அரைமணி தாண்டி
விளக்கிய எழுத்தாளர் ஜெயமோகனின் சந்திப்பில்...
மீண்டும் நாம் சந்திப்போம்;
என்பதை நினைவுக்கூறும் பதிவு.....

(புகைப்படம் 8)

எப்போதும் என்னைக் கவரும்
பேச்சாளர்...
பர்வின் சுல்தானா....
பெண்கள் சளைத்தவர்களில்லை என்ற
மூச்சாளர்...
இவரின் இந்த கணப்பதிவு;
‘பேச்சு என்பது வெறும் பேச்சல்ல’
என்பதை அவ்வபோது எனக்கு நினைவுப்படுத்த....

(புகைப்படம் 9)

இது கணப்பதிவு இல்லை,
என் காத்திருப்பின் கனாப்பதிவு....
கற்பது நீச்சலென்றாலும்,
கடல்பயணம் எனக்கு மிக விருப்பம்..
இதுபோன்ற கவிப்பயணமும்
என் பழக்கம்...

(புகைப்படம் 10)

அத்தனைக்கும் முத்தாய்ப்பாய்,
இத்தனையோசனைக்கும் ராஜன்...
என் ஆசான்;
சுஜாதா என்கிற ரங்கராஜன்...
இவ்வாண்டு தீபாவளியின்
மிகச் சிறந்த பரிசு...
வாழும்போது வணங்கியிருக்க வேண்டியவரை
வாழ்வைத் தாண்டியப் பின் சந்திக்கின்றேன்....
கணங்களை நிறுத்தும் காமிரா...
காலத்தால் பேசப்படும்......
காலத்தையே பேசவைக்கும்;
பிரசுரிக்கப்படும் படைப்புகள்....
என்னது;
காலத்தாலும் பேசப்படும்;
காலத்தையும் பேசவைக்கும்;
நம்பிக்கையான தீபாவளி எனக்கு......

Related Posts:

  • கதை_வாசிப்பு_2019 – 3 'காலத்தின் மறுபக்கம்' கதை_வாசிப்பு_2019 – 3 கதை – காலத்தின் மறுபக்கம் எழுத்து – வைதீஸ்வரன் இதழ் – தீராநதி திகதி – ஆகஸ்ட் 2019* ஆகஸ்ட் மாத தீராநதியில் ‘காலத்த… Read More
  • உயிர்நேசியின் உன்னத நாளில்...'உயிர்நேசியின் உன்னத நாளில்..' நம்பிக்கையுள்ளங்களைநன்மக்களென ஆட்கொண்ட எங்கள்பிரபுவே எங்கள்பிதாவேஅன்பின் வழியில்எங்கள்  கரம் பிடித… Read More
  • பொம்மி பொம்மிஒரு நாள் நேரமெடுத்துஎன் புத்தக அறையில் நுழைகிறாள்காரணமின்றி என் புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் அவள் விரல்கள் சிலஉரசும்படி கடக்கிறாள்அவள் ஸ்பர… Read More
  • மர்லின் 5 மர்லின் நீதான் எத்தனை விதமானவள் எத்தனை இதமானவள்... எட்டி எடுக்க முடியாவிட்டாலும் எக்கி எடுக்க முடிந்ததால் புத்தகங்கள் கூட இறகின்றி உயரத்தில் … Read More
  • பித்து மூலக்கடவுள் என்போம்மூளையின் வடிவம் என்போம்ஏடுகளில் எழுதுமுன்னேஎன்றைக்கும் நினைக்கச் வைப்போம்மோதகம் செய்து வந்துகொழுகட்டை கொடுத்து வருவோம்மஞ்சளில் … Read More

3 comments:

பாலு மணிமாறன் சொன்னது…

சில கணங்களைப் பிடித்துவிடும் கேமராப் புதிவுகளைப் பற்றி, காலத்தைப் பிடிக்க இருக்கும் தயாஜியின் பதிவைப் பார்த்தேன், ரசித்தேன். இந்தப் பேனாகாரனைப் பற்றிய காலத்தின் பதிவு என்னவாக இருக்கும் என்ற கற்பனை - கொஞ்சம் கூடுதலாக இனித்தது...

தயாஜி சொன்னது…

நன்றி அண்ணா......
'பேனாக்காரன்' நிச்சயம் பேசப்படுவான்.....

மு.வேலன் சொன்னது…

'A picture is worth a thousand words' மாதிரி உங்கள் படங்களும் நன்றாக தமிழில் பேசுகின்றன... வாழ்த்துகள்!

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்