எந்தப் புத்தகத்தில் ஆரம்பிப்பீர்கள் ?
2026-ம் ஆண்டு ஜனவரி முதல்நாள், என்ன புத்தகம் வாசிக்கவுள்ளீர்கள்.
அதனை ரொம்பவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டியுள்ளது. ஒருவேளை தவறான புத்தகத்தை வாசிக்க எடுத்துவிட்டோம் என்றால் அது ஓராண்டு முழுக்க நம்மை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். சிலர் தங்களின் தவறான முதல் தேர்ந்தெடுப்பில் இருந்து சிக்கிரமே தப்பித்துவிடுவார்கள்.
ஆனால் எல்லோருக்கும் அது அத்தனை எளிதாக கடந்துவிடக் கூடியதாக இருக்கப் போவதில்லை.
தவறான முதல் வாசிப்பே நமது அடுத்தடுத்த வாசிப்புகளுக்கு சோம்பலைக் கொடுத்துவிடும். தடையாகி நின்றுவிடும்.
ஆகவே, அடுத்த ஆண்டு நீங்கள் வாசிக்கவுள்ள முதல் புத்தகம் எதுவென இப்போதே தேடலைத் தொடங்கிவிடுங்கள்.
நானும் அதனைத் தொடங்கிவிட்டேன். ஏனெனில் எனது அடுத்த ஆண்டிற்கான வாசிப்பு உத்வேகத்தைக் கொடுக்கக் கூடிய புத்தகம் அதுவாகத்தான் இருக்கும்.
ஒரு வாசகன் அதை ஒருபோதும் தவறவிட மாட்டான்...
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக