பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 31, 2022

- காதல் துரோகி -

நம்பிக்கை துரோகம். ஜீரணிக்க முடியாதது. தன் கண்முன்னே நடந்து கொண்டிருப்பதை மேற்கொண்டு பார்க்க முடியவில்லை.அவள் சிரித்துக்கொண்டிருக்கிறாள். முகம் பிரகாசமாக இருக்கிறது. யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள். யாராக இருக்கும். தன்னைவிடப் பணக்காரன் போலத் தெரிகிறது. அதனால்தான் மயங்கிவிட்டாளா. தன்னைவிடா...

ஜனவரி 29, 2022

‘உங்கள் தக்காளி சட்னியும் என் இரத்தமும்’

  இந்தக் கேள்வி ரொம்ப நாளாகவே இருக்கிறது. எவ்வளவோ கேட்டு வாங்கிக் கட்டிகிட்டாச்சி. இதையும் கேட்டுக்குவோம். வாங்கிக் கட்டிக்குவோம் என்ன வந்திடப்போகிறது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்து;நடத்தியது. பலருக்கும் குறிப்பாகச் சில...

புத்தகசவாசிப்பு_2022_4 பால் சக்காரியாவின் 'யேசு கதைகள்'

யேசு கதைகள்தலைப்பு – யேசு கதைகள்எழுத்து – பால் சக்காரியாதமிழாக்கம் – கே.வி.ஜெயஶ்ரீவகை – சிறுகதைத் தொகுப்புவெளியீடு – வம்சி பதிப்பகம்நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)பவா  செல்லதுரை மூலம் இந்தப் புத்தகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன். சில ஆண்டுகளுக்கு...

பைத்தியம் பலவிதம்

 இதை எப்படிப் பார்ப்பது தெரியவில்லை. இப்போதுதான் மழை மெல்ல நிற்கிறது. அதுவும் அடைமழை. இந்நேரம் பார்த்து என் பக்கத்துவீட்டுப் பைத்தியம் செய்யும் காரியத்தை பாருங்களேன்.வாலி நிறையத் தண்ணீரைக் கொண்டு வந்து செடிகளுக்கு ஊற்றிக்கொண்டிருக்கிறார். செடிகளுக்கு வாயிருந்தால் அழுது வடிந்திருக்கும்...

ஜனவரி 28, 2022

- புலியொன்றின் நன்றி நவில்தல் -

    எங்கள் மீது கருணை காட்டியமைக்கு நன்றி. நீங்கள்தான் எங்கள் பசியைப் புரிந்து கொண்டீர்கள். உங்களையா இவர்கள் திட்டுகிறார்கள். உங்களையா இணையத்தில் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். மூளை இல்லாதவர்கள். அவர்கள் எங்கள் இனத்தையும் எங்கள் பசியையும் தெரிந்து கொள்ளாதவர்கள்.   ...

ஜனவரி 27, 2022

- ஆமென் -

"இளவரசு... இளவரசு..."அந்தக் குரல் மெல்ல கேட்டது. ஆனால் யாரை அழைக்கிறார்கள் என தெரியவில்லை. தன்னை பீட்டர் என்றே அழைக்க வேண்டும் என்கிற உத்தரவு வந்த பிறகும் யார் இப்படி விளையாடுவது என தெரியவில்லை.தீராத வயிற்று வலிக்கு தான் கொடுத்த முதல் விலை அந்தப் பெயர் மாற்றம். தப்பித்தால் போதும் பிழைத்தால்...

- பாதுகாப்பற்றப் பிரபஞ்சத்துளி -

"அதோ தெரிகிறதே நிலவு, அங்கிருந்துதான் வந்தேன்..""ஓ, சூரியன் முழுக்கத் தேடினாலும் இப்படி ஓர் அழகியைக் காண முடியாதுதான்...""சரி வருகிறாயா...  கொஞ்ச தூரம் பூமிக்கு சென்றுவரலாம்""வேண்டாம் பொண்ணே அவர்களுக்கு நம்மை அடையாளம் தெரியாது...""அதனால் என்ன.?""உன்னையும் என்னையும் கொன்றுவிட்டுதான்...

ஜனவரி 25, 2022

- தப்புக்கணக்கு -

- தப்புக்கணக்கு - உலகநாடுகளில் இருந்து உதவித்தொகை வந்துவிட்டது. இனி மக்கள் கவலைக்கொள்ள வேண்டாம் என்கிற அறிவிப்பு பலறையும் பெருமூச்சு விட வைத்தது. யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் நாட்டில் ஏற்பட்ட புயல் காற்று, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகள் வரலாறு காணாதது. இனி கிடைத்த உதவித்தோகையை மக்களுக்காக,...

ஜனவரி 19, 2022

பொறுத்திரு; பிரியாதிரு

பொறுத்திரு; பிரியாதிரு என்னால் அவரின் அடி உதைகளைத் தாங்க முடியவில்லை. தாலி கட்டிக்கொண்டேன் என்பதற்காக எவ்வளவு நாள் வாழ்வேன். முடிந்த மட்டும் முயன்றேன். வார்த்தைகளின் வேதனையையும் வாய்த்துவிட்ட வலியினையும் தாங்கிக்கொண்டேன். இனி உடம்பிலும் மனதிலும் தெம்பில்லை. பிரிந்துவிடலாம். அவரின் வாழ்வை அவர் வாழட்டும்...

ஜனவரி 14, 2022

புத்தகவாசிப்பு 2022_3 அகரமுதல்வனின் முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு

முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு தலைப்பு – முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு எழுத்து – அகரமுதல்வன் வகை – சிறுகதைத் தொகுப்பு வெளியீடு – டிஸ்கவரி புக் பேலஸ் நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா) விரும்பி யாரும் மன உளைச்சலை நாடுவார்களா? இயலாமையின் பைத்தியத்திற்கு மிக அருகில்...

ஜனவரி 07, 2022

புத்தகவாசிப்பு 2022_2 அசோகமித்திரனின் 'அமானுஷ்ய நினைவுகள்'

அமானுஷ்ய நினைவுகள் தலைப்பு – அமானுஷ்ய நினைவுகள் எழுத்து – அசோகமித்திரன் வகை – சிறுகதைத் தொகுப்பு வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம் நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)   அசோகமித்திரன் எனக்கு பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவர்.  அவரின் ‘பிரயாணம்’ சிறுகதையை...

ஜனவரி 05, 2022

- அங்கே ஓரிடம் வேண்டும் -

சுதாகர் ரொம்பவும் பக்தி கொண்டவர். இம்மையை விடவும் மறுமையில் அதிகமே அக்கறைக் கொண்டவர். அதற்காக பாடுபடுபவர். காலை விழிப்பது முதல் இரவு படுப்பது வரை ஒரே பக்தி மயம்தான். தொலைக்காட்சியில் எப்பவும் பக்தி படங்களாகவே ஓடிக்கொண்டிருக்கும். வானொலியில் எப்பவும் பக்தி பாடல்களே கேட்டுக்கொண்டிருக்கும்....

கதைவாசிப்பு_2022_2- லதாவின் 'பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை'

தலைப்பு – பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை எழுத்து – லதா வெளியீடு – வல்லினம் ஜனவரி 2022   இந்த நள்ளிரவு நேரத்தில் படித்திருக்கக்கூடாதக் கதை. படிக்கப்படிக்க ஏதோ அமானுஷ்யம் சுற்றிலும் சூழ்வது போல ஒரு பிரமையைக் இக்கதை கொடுத்துவிட்டது. பூனை பற்றியக் கதை எழுத முயன்று முடியாமல் தவிக்கிறாள் அனா....

ஜனவரி 04, 2022

புத்தகவாசிப்பு_2022_1 - பணக்காரராவது உங்களது உரிமை

    பணக்காரராவது உங்களது உரிமை புத்தாண்டை தொடக்கி வைத்த புத்தகம். டாக்டர் ஜோசப் மர்ஃபியின் ‘பணக்காரராவது உங்களது உரிமை’. ‘Riches are Your Rights’, புத்தகத்தைத் தமிழாக்கத்தில் ‘பணக்காரராவது……’ என குறிப்பிட்டிருந்தாலும் புத்தகத்தில் பணத்தைக் குறித்து தெரிந்து கொள்வதை விடவும்...

கதைவாசிப்பு 2022_1 - ஜெயமோகனின் 'வேதாளம்'

    இவ்வாண்டின் முதல் சிறுகதையாக வல்லினம்.காமில் வந்திருந்த ‘வேதாளம்’ கதையை வாசித்தேன். வாசித்து முடிக்கவும், அவ்வேதாளம் என்னிடம் தொற்றிக்கொண்டதொரு உணர்வு. அபத்த நகைச்சுவையாக தொடர்ந்த கதை, அதன் முடிவில் கொடுத்திருக்கும் அதிர்ச்சியைக் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை.   ...

ஜனவரி 03, 2022

- குற்றம் சூழ் உலகு -

- குற்றம் சூழ் உலகு - காயத்ரியை எனக்கு சில மாதங்களாகத் தெரியும். ஏதோ நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்ததாய் நினைவு. எப்போதாவது வணக்கம் என வட்சப் செய்தி வரும். பெரிதாக பழகிக்கொள்ளவில்லை. நேற்று காலை , 'வணக்கம் வட்சப்' செய்திக்கு பதிலாக நீண்ட செய்தியை அனுப்பியிருந்தாள்.  அவளின் அம்மாவிற்கு உடல்...

ஜனவரி 01, 2022

- அமுதாவிற்கான ஆய்வேடு -

மீண்டும் அதே துர்நாற்றம். எவ்வளவுதான் செலவு செய்வது. இன்னும் எத்தனைப் பேரைத்தான் பார்ப்பது.  ஒவ்வொரு  முறையும் வீட்டு வாசலைத் தாண்டும் போதுதான் இந்த துர்நாற்றம் அமுதாவை தாக்கும். முதலில் லேசாகத்தான் உணர்ந்தாள்.  பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.நாட்கள் செல்லச்செல்லவும்தான் அதன்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்