பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 05, 2009

உருண்டை பூமியில் விட்டது.....



யார் சொன்னது
பூமி உருண்டைனு.......?
அப்படின்னா,
என்னை விட்டுப்போனது
என்னோட சேர்ந்திருக்கனுமே.....!

ஆமா,
என்னோட படிப்பு
..ம்..... பதின்ம வயது படிப்பு..
என் ‘கூடா’ நட்பால்,
என்னை ‘நாடா’ போனது கல்வி...!

பணம் கட்டியே,
இன்னைக்கு ‘போட்டாவில்’
தொங்கும்......
‘பொறுப்பான’ அப்பா...
நான்தான் காரணம்னு..
என்மேல்,
‘வெறுப்பான’ அம்மா.....!

என் கீழ்
நாலு பேரு,
நான் மட்டும் சந்தோஷமாய்....
நணபர்களுடன்....
‘புகை’யும் ‘குடி’யும்,
அதால் என் உறவுக்கு
‘பகை’ என்மெல்....!

நான் தெளிய நாள்
‘பலவாச்சி’......!
இன்னைக்கு எல்லாம்,
என்னை விட்டுப் ‘போயாச்சி’....?


வந்ததைப் பார்த்தா......
‘ஏக்கம்’
வருவதைப் பார்த்தால்
‘துக்கம்’

அடிக்கடி கடிக்கும்
‘செருப்பு’........
அழுக்கான கிழிஞ்ச
‘சட்டை’.......
கறைப்பட்டு தோய்க்காத்
‘சிலுவார்’.......
வெட்டாதா சீவாத
‘தலைமுடி’.......

என்னை யாருக்கும் ,
இனி அடையாளம்.......!
‘தெரியாது’...
அடையாளம் காட்டவும்
‘முடியாது’.......

‘போட்டோ’வில் அப்பா...
‘போ’ சொன்ன அம்மா.....
ஏற்காத ‘உறவு’.....
ஏறாதா ‘அறிவு’.......

இன்னும்.....
இன்னும்......
எவ்வளவோ.....!

பூமி உருண்டைனு
சொன்ன அறிஞர்களே......

இந்த உருண்டை பூமியில் ,
நான் விட்டது....
இல்லையில்லை..!?
தொலைத்தது..
திரும்ப வருமா..?

..........தயாஜி வெள்ளைரோஜா..............

Related Posts:

  • - மாணிக்கங்களும் பாட்ஷாக்களும் - #குறுங்கதை 2021 - 11- மாணிக்கங்களும் பாட்ஷாக்களும் -    இருவரும் நெருங்கிய நண்பர்கள். மாணிக்கம் கொஞ்சம் பயந்த சுபாவம். பாட்ஷ… Read More
  • - உயிரோவியம் - #குறுங்கதை 2021 - 10- உயிரோவியம் -    இன்னும் இரண்டு நிறுத்தங்கள்தான் உள்ளன. இறங்க வேண்டியவர்களுக்கு ஆர்வம் அதிகமானது. நல்ல … Read More
  • - நிழற்குடை - #குறுங்கதை 2021 - 9- நிழற்குடை -"குழந்தைகள்னா அப்படிதான் இருக்கும்...""இல்ல டாக்டர்.....""பாருங்க குமார். கவலைப்பட ஒன்னுமில்ல. முதல் முதலா … Read More
  • - ஊதா நிற பட்டாம்பூச்சிகள் - #குறுங்கதை 2021 - 12- ஊதா நிற பட்டாம்பூச்சிகள் -    எங்கிருந்து வந்தன என யோசிக்க முடியவில்லை. அத்தனை பட்டாம்பூச்சிகளை ஒரு சே… Read More
  • - கடைசி காபி -#குறுங்கதை 2021 - 8- கடைசி காபி -        எத்தனை நாட்கள்தான் தாங்கிக்கொள்ள முடியும். இதுதான் முடிவு. வேறு வழி இல்லை.… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்