பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 03, 2026

'வாழும் தமிழ் இலக்கிய விழா'

இன்று அமெரிக்க, நியூயார்க் நகரில் 'வாழும் தமிழ் இலக்கிய விழா தொடங்குகிறது'. இவ்விழாவில்
தமிழ்நாட்டு எழுத்தாளர்களும் மற்ற நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களும் கலந்து கொள்கிறார்கள். 


'வாழும் தமிழ் இலக்கிய விழா',  'நவீன தமிழ் இலக்கியம்' என்ற கருப்பொருளில் பிற மொழி இலக்கியவாதிகளும் தமிழ் நவீன இலக்கிய செழிப்பை அறிந்து கொள்ளும் விதமாக நடத்தப்படுகின்றது. 


பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இவ்விழாவின் விளைவுகள் நாளை நவீன தமிழ் இலக்கியத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் அதோடு பல முன்னெடுப்புகளையும் சாத்தியப்படுத்த வேண்டும் என்பதே இங்குள்ள பல இலக்கிய ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. 

பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இவ்விழாவுக்கு மலேசியாவிலிருந்து எழுத்தாளர் ம.நவீனும், எழுத்தாளர் ஜெ.அரவின் குமாரும் சிங்கப்பூரில் இருந்து எழுத்தாளர் அழகுநிலாவும்
அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.


இந்த மூவரையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இவர்களும் இந்த நேரத்தில் அங்கிருப்பது எங்கள் நாட்டின் இலக்கிய போக்கிற்கும் பயனாக அமையும் என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்