பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 01, 2024

தாரா பொம்மியைச் சந்தித்தாள்.

 


ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்கு முன் எனது முதல் கவிதைத் தொகுப்பான 'பொம்மி'யை வெளியிட்டிருந்தேன். அது என் மூன்றாவது புத்தகம். 

பொம்மி என் மனதிற்கு ரொம்பவும் நெருக்கமான புத்தகம். பொம்மி முதல் பிரதியை யாருக்கு அனுப்பலாம் என யோசிக்கலானேன். பொம்மி கவிதைகளை நான் எழுதத்தொடங்கிய காலக்கட்டத்தில் பல்வேறு வகையில் எனக்கு பக்கபலமாகவும் பக்குவம் சொல்பவராகவும் இருந்தவருக்கு அதனை கொடுக்க முடிவு செய்தேன்.

அவ்வாறு, பொம்மியை எழுத்தாளர் ம.நவீனுக்கு அனுப்பி வைத்தேன்.

அன்றைய தினத்தில் அவரை சந்தித்து கொடுக்கும் மனநிலையிலும் உடல்நிலையிலும் நான் இல்லை. தபாலிலேயே அனுப்பி வைத்தேன். இருந்தும்  எந்தச் சிக்கலுமின்றி அவரும் பொம்மியைப் பெற்றுக்கொண்டு சில வார்த்தைகள் எழுதி பகிர்ந்தார்.

அவருக்கு முதல் புத்தகத்தைக் கொடுத்ததால் அந்தப் புத்தகத்தை வாங்கமாட்டேன் என சொன்னவருக்கு நான் சொன்னது ஒன்றுதான். படைப்பையும் படைப்பாளியையும் நாம் நமது சொந்த விருப்பு வெறுப்பில் அணுகக்கூடாது. ஆனாலும் அவர் கடைசிவரை இந்தப் புத்தகத்தை வாங்கவே இல்லை என்பது வேறு விடயம்.

இன்று இந்தப் புத்தாண்டில் பொம்மிக்கு முதல் புத்தகப்பரிசாக தாரா வந்து சேர்ந்தாள். அதோடு, தாரா தன்னுள்ளே பொம்மிக்கு வாழ்த்தையும் ஆசிர்வாதத்தையும் சுமந்திருந்தாள்.

எழுத்தாளர் ம.நவீனுக்கு பொம்மியின் அன்பும் நன்றியும்...💙




(பொம்மி புத்தகமும் தாரா புத்தகமும் பச்சை வண்ணத்திலேயே அமைந்திருப்பது தற்செயலாக இருக்காது. அதிலும் ஏதாவது அமானுஷ்யம் இருக்கலாம்தான்😉)

#தாரா
#பொம்மி
#தயாஜி

Related Posts:

  • மைக்ரோ கதையின் பரிசு        சமீபத்தில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரன் அவர்கள் சிறுபோட்டி ஒன்றை வைத்திருந்தார். ‘மைக்ரோ கதை’ எழுதும் … Read More
  • ஆணொருவன் அழுகிறான் அலாவுதின் விளக்கில் அடைபட்டிருக்கும் பூதமொன்று அவனது அழுகை துளியின் சிறு துகள் பட்டு தூக்கம் கலைந்தது இது சாத்தியமே ஆகக்கூடாதென அசரீகள் முழுக… Read More
  • சைக்கோ- உன்னை நினைச்சி நினைச்சி      சில நாட்களாக தொடர்ந்துக் கேட்டுக்கொண்டிருக்கும் பாடல். இதன் பின்னனியில் இருக்கும்  ஆழமான காரணத்தை தேடுவதற்கு மனதில… Read More
  • பூங்குழலியின் கவிதைகள்      முதலில் கவிதையை நான் எவ்வாறு புரிந்து கொள்கிறேன் என்பதைச் சொல்லிவிடுகிறேன். அறிவிற்கும் மனதிற்குமான இடைவெளியை வார்த்தைகள் மூ… Read More
  • மருந்தென்னும் மாயப்புள்ளி மனப்பிணிக்கு மருந்துகொடுக்கக் கூடியவரிடம் வாங்கிவந்த மருந்துச்சீட்டுகள் அவை நோய்க்கூறுகளை துல்லியமாக உடல்புள்ளிகளில் கண்டறிந்தார் ஒவ்வொரு… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்