பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 20, 2022

எழுத்தாளர் தமிழ்மகனுடன் சந்திப்பு

எழுத்தாளர் தமிழ்மகன் மலேசியா வந்திருந்தார்.  அவரது ‘படைவீடு’ நாவலுக்கு தேசிய நில நிதி கூட்டுரவு சங்கம்,  ‘தான் ஶ்ரீ கே.ஆர்.சோமா இலக்கிய அறவாரிய விருதினை  அறிவித்திருந்தார்கள்.  அதன் பொருட்டு ரொம்பவும் குறுகிய காலப்பயணமாக வந்திருந்தார். சில காரணங்களால் அந்த விருது...

டிசம்பர் 03, 2022

தாய்மடியாகும் தாய்மாமன் மடி

- தாய்மடியாகும் தாய்மாமன் மடி - ஒன்று இன்னொன்றை, அந்த இன்னொன்று  இன்னொரு ஒன்றை எப்படியும் நமக்கு நினைவுப்படுத்திவிடுகின்றன. நினைவுகளின் ஆதாரம் எங்கிருந்தாவது நம் மனதை தொட்டுவிடுவதை தவிர்க்க முடிவதில்லை; அதனை முன்கூட்டியே நம்மால் கண்டறியவும் முடிவதில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு பிறந்தகம்...

நவம்பர் 21, 2022

ஓட்டு போட்டது ஒரு குத்தமாய்யா ?

கதை எழுத ஆரம்பித்த சமயத்தில் அதிகம் எழுதி அடித்து திருத்தி திரும்ப எழுத நினைப்பேன். ஆனால் செய்ய மாட்டேன். அப்போது கணினியோ தட்டச்சோ கைவசம் இல்லை. கையெழுத்தே சாத்தியம். நான் ஒருமாதிரி எழுதினால் என் கையெழுத்து ஒருமாதிரி போகும்.  அதனாலேயே கையெழுத்தை மீண்டும் திருத்தி எழுதவோ மாற்றி...

நவம்பர் 17, 2022

- யாரின் நிழலாய் நாம் -

ஒரே மொழிஆனால் அது உன் மொழியல்லஎன் மொழியுமல்லபின் யாரின் மொழிஒரே இனம்ஆனால் அது உன் இனமல்லஎன் இனமுமல்லபின் யாரின் இனம்ஒரே மதம்ஆனால் அது உன் மதமல்லஎன் மதமுமல்லபின் யாரின் மதம்ஒரே  நாடுஆனால் அது உன் நாடல்லஎன் நாடுமல்லபின் யாரின் நாடுநீ கூட்டத்தில் ஒருவன்நான் கூட்டத்திற்குள் ஒருவன்ஆனால் ...

நவம்பர் 15, 2022

- கடமை கண்ணியம் சோறுபோடு -

"சார் உங்க பத்திரிகைலதாங்க... எல்லாத்தையும் புரட்சிகரமா போடறீங்க..." "எல்லாம் உங்களுக்காகதானே..." "எங்க பிரச்சனை நடந்தாலும் உங்க பத்திரிகைக்காரங்கதான் முதல்ல போய் நிக்கறாங்க....!" "அதான் எங்களோட கடமை கண்ணியம் கட்டுப்பாடு..." "சந்தோஷம் சார்.. அப்படியே உங்க பத்திரிகைல வேலை செய்றவங்களுக்கும்...

நவம்பர் 13, 2022

என்செய்வோம் மாமழையே

முன்னெப்போதுமான மழையல்ல நீ உன்னோடிப்போது விளையாட முடிவதில்லைகொஞ்சமே மழையென்று கொஞ்சினால் அஞ்சி விலகும்படி அலையடிக்க வைக்கிறாய் சாலைக் குழிகளை மறைக்கிறாய் சாக்கடையை வீட்டிற்குள் நிறைக்கிறாய்எப்போதோ வீசிய குப்பைகளை வட்டியுடன் வந்திறக்கி வைக்கிறாய் ஆறுகள் மீது கோடுகள் போட்டு வீடுகள் கட்டினால் ஏழரையாய்...

நவம்பர் 10, 2022

வேறென்ன செய்ய முடியும்

யாரோ சொல்லிய உன் பெயரில் ஏதோ மெல்லிய ஓர் உணர்வு அந்த யாரோ அழைத்த எவரோ நிச்சயம் நீயாக இருக்கக்கூடாது நீ என் முன்னே வரவே கூடாதென்று வாசலிலேயே காத்திருப்பவனால் வேறென்ன செய்ய முடியும்...

நவம்பர் 09, 2022

அப்பா...

"நான் மர்லின் மன்றோவை கூட்டிட்டு வருவேன். என் கூட காபி குடிக்க கூப்டுவேன்..." என்று கூறியவர் சிரிக்கலானார். நீ என் இனமடா என சொல்லத்தோன்றியது. ஆனால் கையில் ஒலிவாங்கியுடன் ஒலி/ஒளிப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டேன்.நமக்கு வேலைதான் முக்கியம். இன்னொருவரைக் கேட்டேன்....

நவம்பர் 02, 2022

தகப்பன்சாமி தந்தவேல் அது கந்தவேல்

எல்லோரிடலும் எல்லாவற்றையும் சொல்லவோ கேட்கவோ என்னால் முடியாது. அதற்கான தகுதியும் வாய்ப்பும் இருந்தாலும் என் மனம் ஒப்புக்கொள்ளாத வரை நான் அதனைச் செய்யமாட்டேன்.புதியவர்களுடன் 'வாங்க டீ குடிப்போம்' என்பதும், கொஞ்சம் பழகியவர்களிடம் 'பிரியாணி' வாங்கி கொடுங்க என்பதையும் உரையாடலின் தொடக்கமாகவும்...

- உனக்கென்ன வேணும் சொல்லு -

உனக்கு பரிசளிக்கவிரும்புகிறேன்எதுவாக இருப்பினும் கேள்தயக்கம் கொள்ளாதேதயங்கி நிற்காதே கைக்கு எட்டா தூரம் என்றாலும் நீ ஏன் கலங்க வேண்டும் கொடுக்க வேண்டியவன் நானல்லவா எத்துணை தூரம் என்றாலும் நீ ஏன் கலங்க வேண்டும் கடக்க வேண்டியவன் நானல்லவா பரிசுகள் என்றால் கேட்பவளுக்கு மட்டுமல்ல கொடுப்பவனுக்கும்...

அக்டோபர் 23, 2022

பூட்டப்படாதக் கதவுகள்

"இவருக்கு கொஞ்சம் கூட பயமே இல்ல.. காலம் எப்படி கெட்டுக்கிடக்கு வாசல் கதவை லாக் பண்ணாமலேயே வச்சிருக்காரு...." என புலம்பிக்கொண்டே நுழைந்தான். "அப்பா... அப்பா... எங்க இருக்கீங்க...?" என அதிகம் தேடாமல், வரவேற்பறை நாற்காலியில் அமர்கிறான். வாங்கி வந்திருந்த சமையல் பொருட்களை கீழே வைக்கிறான். எப்படியும்...

அக்டோபர் 22, 2022

சொல்லுதற்சுலபம்

" ஏன் சார் கோவிலுக்கு வரமாட்டறீங்க...?""சாமியே இல்லைன்றவனைப் போய் கோவிலுக்கு கூப்டற...?""சாமி இல்ல... அதனால கோவிலுக்கு வர மாட்டேன்னு சொல்லத் தெரிஞ்ச உங்களுக்கு...""சொல்லத் தெரிஞ்ச எங்களுக்கு...?""சாதி இல்லைன்னு சொல்லி, எந்தச் சாதி நிகழ்ச்சிக்கும் போகாம இருக்க முடியலையே... போதாக்குறைக்கு...

அக்டோபர் 21, 2022

- God No Where vs God Now Here -

"கடவுள் இல்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும் பார்க்கறியா?""அப்படியா...?""நிரூபிக்க முடியும்ன்றேன்... அப்படியான்னு கேட்கற...""சரி நிரூபி. பாக்கலாம்..."அதற்காகவே காத்திருந்தவர், தன் முகநூலில் 'கடவுள் இல்லை' என எழுதி பகிர்ந்தார். பார்த்தவருக்கு ஒரே குழப்பம். இதில் கடவுள் இல்லையென்று எங்கே...

அக்டோபர் 09, 2022

- 42 குறுங்கதைகள் -

- 42 குறுங்கதைகள் - இயல் பதிப்பகத்தின் நூலிழை குழு சந்திப்பின் மூலமாக ஆசிரியர் ப.பத்மநாதனை தெரியும். அவருக்கும் என்னை அப்போதுதான் தெரியும் என நினைக்கிறேன். கதைகள் குறித்த காலந்துரையாடல் வழியும் கதைகள் குறித்து நான் முன்வைக்கும் கருத்துகள் வழியும் இருவரும் நட்பானோம். ஒவ்வொரு முறையும்...

அக்டோபர் 07, 2022

கண்ணீர்க்குடி நாகங்கள்

கண்ணீரைச் சுமக்க கைக்குட்டையொன்று எப்போதும் வேண்டுமோ நமக்கு இங்கு காரணங்களின்றி கண்ணீர் வருவதில்லை சிலரின் காரியங்களில்லாமல் நாம் அழுதிடுவதுமில்லை நம்மை அழவைப்பதில் அப்படியென்ன ஆனந்தத்தைக் கண்டிடப்போகிறார்கள் சொல்ல முடியாது அவர்கள் தின்ற சோறு செரிக்க யாரும் அழத்தான் வேண்டும் போல கண்களில்...

செப்டம்பர் 29, 2022

- நட்ட கல்லும் ஊற்றும் பாலும் –

  “கல்லுக்கு ஊத்தற பாலை… பசிக்கு அழும் குழந்தைக்குக் கொடுக்கலாமே..?” ரொம்பவும் பழைய பழகிப்போன கேள்வியை இங்கு விடாது கேட்டுக்கொண்டே இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். வழக்கமாகத் தைப்பூச தினத்தன்றும் அல்லது இதர விழாக்காலங்களில் மட்டுமே இந்தக் கேள்வி பெருமளவு படையெடுக்கும். மற்ற நாட்களில் அதன் வீரியம்...

செப்டம்பர் 28, 2022

TikTok பேய்கள்

"அதான இப்ப டிரெண்டு...." என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் கோமதி. டிக்டாக்கில் வந்திருந்த சமீபத்திய விளையாட்டுதான் அது. கைப்பேசியில் வீடியோவைத் திறந்து வைக்க வேண்டும். அதனை தனி அறையில் வைத்து நடப்பதை பதிவு செய்ய வேண்டும். அந்த அறையில் நம் வீட்டு சின்ன பையனை வைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு...

செப்டம்பர் 26, 2022

- டுரியான் -

குமாருக்கு டுரியான் என்றாலே பயம். அதன் வாசத்தைக் கூட அவனால் அனுபவிக்க முடியாது. ஓடி ஒளிந்துக்கொள்வான். இந்த முப்பத்தைந்து வயதில் இப்படியா ஒருவன் இருப்பான் என தோன்றும். தோன்ற வேண்டும்தானே. அவனது பயத்தைப் போக்குவதற்காக அவனுக்கே தெரியாமல் ஒரு ஏற்பாடு செய்தேன். வீட்டிற்கு அழைத்தேன். அறைக்குள்...

செப்டம்பர் 25, 2022

- புரட்சியாளர்களின் பரிசு -

அந்தப் பேரணியை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. ஏற்பாட்டாளர்களே எதிர்ப்பார்க்கவில்லை. வேறு யார்தான் எதிர்ப்பார்த்திருப்பார்கள். எப்போதோ யாரோ முயற்சித்தப் புரட்சியின் தீப்பொறி இன்று கொழுந்துவிட்டு எரிகிறது.அதிபரின் அரசமாளிகை முழுக்க மக்கள் சூழ்ந்துவிட்டார்கள். தன் வாழ்நாளில் என்னவென்றே தெரியாத;...

செப்டம்பர் 24, 2022

ஏழாம் உலகம் - வாசிப்பு அனுபவம்

ஏழாம் உலகம் வாசிப்பு அனுபவம்ஜெ.மோவின் ஏழாம் உலகம் நாவலை வாங்கி ஏறக்குறைய பத்தாண்டுகள் இருக்கும். இதற்கிடையில் சில முறை வீடு மாற்றலாகி வந்துகோண்டிருந்ததால் ஏதோ ஒரு புத்தகப்பெட்டியில் அந்நாவல் சிக்கிக்கொண்டது. கையில் கிடைத்ததும் உடனே எடுத்து வாசிப்பு பட்டியலில் அடுக்கிவிட்டேன். ஆனால்...

- நிம்மதியா ஒரு பேய்ப்படம் -

எது நமக்கு பயத்தைக் கொடுக்கிறதோ அதுதான் நமக்கு பலத்தையும் கொடுக்கிறது. புரிகிறதா?. எனக்கு புரிய முப்பது வயது வரை வரவேண்டியதாய் இருந்தது. சின்ன வயசுலயே அங்க போகாத பேய் இருக்கு.. இங்க போகாத நாய் இருக்குன்னு பயங்காட்டி பயங்காட்டியே வளர்த்துட்டாங்க.இந்த வயசுல நாய்க்கு கூட பயப்படலாம். ஆனா பேய்க்கு...

செப்டம்பர் 22, 2022

யாருக்குத்தான் சபலமில்லை...?

அம்மா அப்படித்தான் சொன்னார். எனக்கு கோவம் வந்துவிட்டது. இதுவெல்லாம் ஒரு பேச்சா. காதலித்துதான் கல்யாணம் செய்துக்கொண்டோம். அதற்காக இப்படியா பேசுவது. யாருக்குத்தான் சபலமில்லையாம்!! புருஷன் போக்கு சரியில்லைன்னு சொன்னா பெத்த அம்மா புள்ளை கிட்டயே இப்படியா பேசுவாங்க?ஆனாலும் என்னால் அம்மா மீது முழு...

செப்டம்பர் 21, 2022

- இளையராஜாக்களும் அனிருத்களும் -

  காலையிலேயே அழைத்திருந்தார். “என்ன ப்ரோ…” என்றுதான் தொடங்குவார். சமீபத்தில் ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பாக சந்தித்தோம்.  அங்கிருந்து திரும்ப வந்து, பிறகு மீண்டும் தமிழகப்பயணமும் சென்றுவிட்டு திரும்பியிருக்கிறார். ஆனால் அந்த சிறகுள்ள மனிதரை பார்ப்பதற்கு என்னால் முடியாமல் போனதைச் சொல்லி கொஞ்சம்...

செப்டம்பர் 17, 2022

'மகரந்தம்' ஏற்றமா ஏமாற்றமா?

சமீபத்தில் உள்ளூர் தனியார் தொலைக்காட்சி ஆஸ்ட்ரோ விண்மீனில் ‘மகரந்தம்’ என்னும் தொடர் நாடகம் ஒளியேறியது. உங்களில் சிலர் அதனைப் பார்த்திருப்பீர்கள். உங்களில் சிலர் உள்ளூர் நாடகம்தானே எதுக்கு பார்த்துகிட்டு என நினைத்திருப்பீர்கள். என்னதான் தரமான படைப்புகளை நம் கலைஞர்கள் கொடுத்தாலும் வெளிநாட்டு...

செப்டம்பர் 16, 2022

மாணவர்களுடன் ஒரு நாள் சந்திப்பு

- மாணவர்களுடன் ஒரு நாள் சந்திப்பு - சமீபத்தில் செர்டாங் ஆரம்பநிலை தமிழ்ப்பள்ளிக்கு தோழர் பொன் கோகிலத்துடன் சென்றிருந்தேன். அவ்வப்போது இங்குள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு இப்படி செல்வது வழக்கம். ஆரம்பநிலை பள்ளி மாணவர்களிடம் பதின்ம வயதை எதிர்க்கொள்வதும் குறித்தும் ‘நல்ல தொடுதல் கெட்ட தொடுதல்’ குறித்தும் ...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்