பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

திங்கள், 13 டிசம்பர், 2010

புத்தகக்காதலிகள்....


‎13-12-2010-ல் வாங்கிய புத்தகங்கள்;

1.ருத்ரவீனை(பாகம் 1 & 2)

-இந்திரா சௌந்தரராஜனின் புகழ் பெற்ற நாவல்களில், குறிப்பிடும்படியான நாவல்.ருத்ரவீணை.புதுமையான ஆன்மீக மர்ம நாவல்.'இசையும் ஒரு மருந்து' என்பதை பலங்காலத்து நம்பிக்கை சார்ந்து நாவலாக்கியுள்ளார். இந்த நாவல், சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சிச் தொடராக வந்து பெறும் வரவேற்பை பெற்றது. ...இந்த நாவல் பாகம் ஒன்று ; பாகம் 2; பாகம் 3 என வெளிவந்துள்ளது. விரைவில் மூன்றாம் பாகத்தை வாங்கிவிடுவேன். அதையும் பதிவு செய்கிறேன்.

2. நேற்று மனிதர்கள்

-'சாகத்ய அகாதமி'விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன்-னின் சிறுகதை தொகுப்பு இது.மொத்தம் 17 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது.1986-ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசு முதற்பரிசு பெற்ற சிறுகதை தொகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தகமும் நானும் ஒரே ஆண்டில் பிறந்திருக்கின்றோம்.அதோடு இந்த புத்தகம் பல தன்னாட்சி கல்லூரிகளில் பாடமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றுக்காக சந்திதித்துள்ளேன்.

3.துணையெழுத்து
4.கேள்விக்குறி

- இவை இரண்டும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது.ஆனந்த விகடனின் தொடராக வந்தது. இவரின் 'சிறிது வெளிச்சம்' புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கின்றேன்; இவர் மீதும் என் ஈடுபாடு திரும்பியுள்ளது. 'நிச்சயம்' படிக்கவேண்டிய புத்தகங்கள் பட்டியலில் இவரின் புத்தகங்கள் 'நிச்சயம்' இடம்பெறும்.


5.மூன்றாம் பரிமாணச் சிந்தனை.

-தோற்ற்றுவிட்டோம் என்ற ஒதுங்கிய நிலையிலிருந்து மனதை மீட்டெடுத்து; வெற்றியடைய வைக்கும் மந்திரத்தை சொல்லித் தருவது....... எனத் தொடங்குகின்றது இந்த புத்தகம்.எதையும் அணுகும் மாறுபட்ட முறையே ஒருவனை வெற்றியாளனாக்குகின்றது. வெற்றி முதல் பரிணாமம்; தோல்வி இரண்டாம் பரிணாமம்; மூன்றாம் பரிணாமம் என்ன என்பதனை வெற்றியாளர்களுக்கு வேதம் போல்; உவமானக்களுடன் சில சரித்திர உண்மைகளுடன் சொல்லும் ஒரு பொக்கிஷம், இந்த புத்தகம்.

6. மாத்தனின் கதை (மலையாளச் சிறுகதைகள்)

- மொழிபெயர்ப்பு கதைகளையும் ; கவிதைகளையும் படிப்பதன் மூலம், நாம் புரிந்துக் கொள்ள வேண்டியதும், தெரிந்துத் தெளிய வேண்டியதும் அதிகம் என்பதை உணர்ந்திருக்கின்றேன். அதன் காரணம்தான் இந்த மலையாளச் சிறுகதைகளின் தொகுப்பு.மொழிபெயர்த்தவர் சுரா.

Popular Posts

Blogger templates

Categories

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்