பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

படித்ததைப் பகிர்கின்றேன்


என்னை கவர்ந்த படைப்பாளர்களில் ஒருவரான பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய புத்தகங்களை சமீபத்தில் வாங்கினேன். பட்டாம்பூச்சி விறபவன், கண் பேசும் வார்த்தைகள், பாலகாண்டம் என்று முறையே கவிதைகள், பாடல் பிறந்த கதை, கட்டுரைகள் தொகுப்பு . தற்போது படித்து முடித்தது 'பால காண்டம்' எனும் கட்டுரை நூல். குங்குமம் வார இதழில் இவர் எழுதிய இவரின் பால்ய வயது அனுபவம்தான் இந்தக் கட்டுரையின் சாரம்.

பால்யம் என்பது தனக்கு ஏற்படுத்திய பாதிப்புகளையும் தனக்கு விடை கிடைக்காத கேள்விகளையும் நம்மோடு பகிர்கின்றார் நா..முத்துக்குமார் சினிமா பாடல்கள் மூலமும், கவிதை தொகுப்புகளின் மூலமும் என்னைக் கவர்ந்தவர் இந்த கட்டுரைத் தொகுப்பிலும் வழக்கம் போல் கவர்கின்றார்.

இவரின் சொல்விளையாட்டு (சொல் நயம்) இவரின் கட்டுரை தலைப்புகளில் தெரிகின்றது. இளமை நினைவுகளி மாய சிலேட்டுப்பலகை என்றும் சாலைக் குழிகளை, நிலா மிதக்கும் பள்ளம் என்றும் வர்ணிக்கின்றார்.

அதிலும் அக்காவை இரண்டாம் தொப்புள் கொடி என்று தனக்கு இல்லாத அக்காவால் தனக்கு அக்காக்களான தோழர்களில் அக்காக்களைப் பற்றிக் கூறுகின்றார். இவரின் பால்ய நண்பன் கேசவனைச் சொல்லும் போது, எனது பால்ய நண்பன் கேசவனை நினைக்கமுடிகின்றது.

காலம் எழுதும் கடிதம் என்ற தலைப்பில் இவர் கடிதத்தூது சென்ற காதல் கடிதம் பற்றி சொல்லி இப்போது அந்த காதலர்களை சொல்லும் போழுதினில் நம் முன்னும் சிலரைக் காணமுடிகின்றது.

கடவுளைக் கண்ட இடங்களில் என்ற தலைப்பில் இவரின் எழுத்து நடை இப்படி வருகின்றது........

"சில சமயம் விளையாட நண்பர்கள் இல்லாத நேரங்களில் என் பொழுதுபோக்கு எறும்புகளைக் கொல்வதாய் இருந்தது, ஒரு பேரரசன் போல என்னை உருவக்கித்துக் கொண்டு சுவற்றில் ஊறும் எறும்புகளை என் கோட்டைக்கு வருகிறாயா..? என்ன செய்கிறேன் பார் உன்னை...? என்று கர்ஜித்தப்படி ஒவ்வொன்றாக பிடித்து தரையோடு தேய்த்து கொன்றுவிடுவேன் " இதை படிக்கும் போது என் கண்முன் ஒரு காட்சி ஒலி/ளி-யேறியது. அதில் நான் எங்கள் வீட்டின் பின் புறத்தில் அமர்ந்து எறும்பு புத்தை கலைத்து அதிலிருந்து பெரிய உருவம் கொண்ட எறும்புகளைத் தேடிப்பிடித்து கொல்கின்றேன். அம்மா; இது பற்றி அப்பாவிடம் புகார் சொல்லும் போது , அப்பா வெகு சாதாரணமாய் நானும் அப்படித்தான் என்கிறார்..........

நாய் வளர்த்ததையும் நா.மு. இப்படி சொல்கின்றார். புலி வளர்க்க காடும்,காசும் இல்லாததால் நாங்கள் நாய் வளர்த்தோம். அதற்கு டைகர் என்றே பெயரிட்டோம். இந்த வரியில் நான் கொஞ்சம் சத்தமாகத்தான் சிரித்தேன்.

மொத்தம் பதினைந்து தலைப்புகளில் தனது பால்ய காலத்திற்கு நம்மை அழைத்து சென்ற நா.மு. அதன் கடைசி அத்தியாயத்தில் இப்படி சொல்கின்றார், ஒரு சம்பவத்தை மேற்கோள்காட்டி;

"ஒரே சம்பவம் பால்யத்தில் இரண்டு வெவ்வேறு விதமாக பதிவாகின்றது. பாலகாண்டம் ஒரு நதியைப் போன்றது. தண்ணீர் வற்றிவிட்டாலும் மணலுக்கடியில் நதி ஓடிக்கொண்டிருக்கின்றது"


இந்த புத்தகம் என் பாலகாண்ட பயணத்திற்கு பாதை கொடுத்துள்ளது. நீங்களும் படித்துப்பாருங்கள் என்று சொல்லமாட்டேன். நீங்களும்படித்து உங்கள் பாலகாண்ட பாய சிலேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பதிவுகளை நினைவுக்கூறுங்கள்.

நன்றி

வணக்கம்.

அடுத்த புத்தகத்தில் சந்திப்போம்,


இப்படிக்கு தயாஜி

Popular Posts

Blogger templates

Categories

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்