நாங்கள் வேண்டுவதை
கொடுக்கிறாயோ இல்லையோ
இன்னும்கூட
வேண்டுவதற்காக எங்களை
விட்டுவைத்திருக்கிறாயே
அதற்காகவாவது
இரவு
தூங்கும் முன்
ஒரு முறையும்
காலை
விழித்த பின்
ஒரு முறையும்
உன்னிடம்
வேண்டிகொள்கிறோம்
தவிர
எங்களின்
மற்ற வேண்டுதல்கள் எல்லாம்
எங்களுக்கு
மறந்தே போனது
இறைவா....
0 comments:
கருத்துரையிடுக