செந்தமிழ் விழா24 - நீதிபதிகள்
செந்துல் , கான்வெண்ட் இடைநிலை பள்ளிக்கு (SMK CONVENT, SENTUL) அழைத்திருந்தார்கள். அப்பள்ளியின் 'செந்தமிழ் விழா 2024' க்கு பல பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு பல போட்டிகள் நடந்தன.
போட்டிகளுக்கு பல தமிழறிஞர்கள் நீதிபதிகளாக வந்திருந்தார்கள்
கல்வியாளர் மன்னர் மன்னன், ஆசிரியை சுகந்தி ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன்.
நாங்கள் மூவரும் கவிதை போட்டிக்கு நீதிபதிகளாக பொறுப்பேற்றோம்.
அப்போட்டி இரு பிரிவுகளாக நடந்தன, முதற்கட்டமாக 26 மாணவர்கள் கவிதை வாசிக்கும் போட்டியில் பங்கெடுத்தார்கள். அதிலிருந்து பத்து மாணவர்கள் இரண்டாம் கட்டத்திற்கு வந்தார்கள். அவர்களில் ஐந்து மாணவர்கள் பரிசுக்குரியவர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
மாணவர்கள் பெரும்பாலும் மலேசிய கவிஞர்களின் கவிதையை வாசித்தது மனதைக் கவர்ந்தது.
போட்டி முடிந்ததும், பங்கெடுத்த மாணவர்கள் செய்த சிறுசிறு தவறுகளை ஐயா மன்னர் மன்னன் எடுத்துரைத்தார். அவருக்கே உரிய பாணியில் அவர் பேசியது மாணவர்களைக் கவர்ந்தது.
நானும் என் பங்கிற்கு ஆசிரியரிடம் மாணவர்கள் குறித்து பேசினேன். வாசிப்பின் வழி மலேசிய எழுத்தாளர்களை நம் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டியது பற்றி அது அமைந்திருந்தது.
பிறகு ஒவ்வொரு போட்டியிலும் பங்கெடுத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். நீதிபதிகளாக பொறுப்பேற்ற உங்களுக்கு சிறப்பு செய்து நினைவுச்சின்னத்தையும் நற்சான்றிதழையும் வழங்கினார்கள்.
அன்றைய பொழுது மாணவர்களுடன் சிறப்பாக அமைந்தது. வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர் சுலோச்சனாவிற்கும் அன்பும் நன்றியும்...
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம் #சிறகுகளின்_கதை_நேரம்
0 comments:
கருத்துரையிடுக