பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 06, 2022

நன்றி நவில்தல்

மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றம்,  நூலிழை குறுங்கதை பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அதன் வழி குறுங்கதைகள் பற்றியும் எங்கெல்லாம் குறுங்கதைகளைக் காணலாம் என்றும் பேசினேன். இம்முறை மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாய் இருந்தது. பலரும் எழுதுவதில் ஆர்வமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறது என்பதை உணர முடிகிறது.

பேசி முடித்ததும் கேள்வி நேரத்தில் பங்கேற்பாளர்கள் கேட்ட கேள்விகள் சில வழக்கமானதாக இருந்தன, சில முக்கியமான கேள்விகளும் இருந்தன. இரண்டிற்கும் பதிலளித்தேன்.

எழுத்தில் ஆர்வம் உள்ளவர்களைப் பார்க்கும் போது நானும் உற்சாகமாகிவிடுகிறேன். நானே அதை பல முறை உணர்ந்திருக்கிறேன்.

என்னைப் பொருத்தவரையில் எழுத ஆர்வம் உள்ளவர்கள் குறுங்கதையில் இருந்து தொடங்கி குறுங்கதையிலேயே பெரிய பாய்ச்சலைக் கொடுக்க முடியும்.

இன்று ஆர்வத்துடன் பங்கெடுத்தவர்களுடன் மீண்டும் ஒரு சந்திப்பிற்கும்  தொடர் உரையாடலுக்கும் வழி சமைத்திருக்கும் மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடக்கும் நல்லவற்றில் நம் பங்கும் சிறிதேனும் பயனாக அமைவதில் எனக்கும் எப்போதும் மகிழ்ச்சியே...


#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

2 comments:

uma சொன்னது…

வணக்கம். வாழ்த்துகள் தம்பி. முகம் பார்த்துச் செய்யும் பயிலரங்குகளுக்காகக் காத்திருக்கிறோம்.

Unknown சொன்னது…

ஏற்பாட்டுக் குழுவினருக்கு நன்றி. பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்த எழுத்தாளர் தயாஜீ அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். தொடர்ந்து தாங்கள் எழுதி வரும் குறுங்கதைகளை முகநூல் பக்கத்தில் படித்து வருகிறேன். ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு புதுமையைச் செய்து வருகிறீர்கள். வாழ்த்துகள்!

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்