#கதைவாசிப்பு_2020_16 'கிருமி'
#கதைவாசிப்பு_2020_16
கதை – கிருமி
எழுத்து – உமையாழ்
வெளியீடு – ஏப்ரல் மாத யாவரும்.காம்
இன்று கிருமிகளால் உலகம் துன்பத்தை எதிர்நோக்குகிறது. நாம் அறிந்து இது நடக்கிறது. ஏனெனில் அதிகார வர்க்கம் முதல் அரசியல்வாதி வரை எல்லோரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை பாதிக்காதவரை எந்த துன்பமும் துயரமும் அத்தனை முக்கியமானதில்லை. எத்தனையோ மரணங்கள் எத்தனையோ கொடுமைகள் நம்மைச் சுற்றி நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஒன்றுமே நடக்காதது போலத்தான் அவர்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.பொதுவான துயரம் மட்டுமே துயரமாக கணக்கெடுக்கப்படுகிறது.
ஆனால் தற்காலச்சூழல் இன்னொருவரின் துன்பத்தை புரிந்துக்கொள்ளும் வழியைக் காட்டியுள்ளது. இக்கதையையும் அவ்வாறுதான் காண்கிறேன். எல்லா காலத்திலும் நடந்துக்கொண்டிருக்கும் கொடுமைதான், ஒதுக்கப்படுதல்தான், உதாசினம்தான். ஆனால் தற்கால சூழலில் இக்கதையை வாசிக்க மனதை கணக்கச் செய்கிறது.
வாசிப்பவர்களே கதைசொல்லியாக கதையை நகர்த்திச் செல்கிறார்கள். இதைவிடவா கதையினுள் செல்வதற்கு வேறொரு உபாயம் தேவை.
கதை ஒரு கட்டத்தில் வாசிக்க விடாமல் வருந்த வைக்கிறது. இந்த கிருமியால் ஆனா பாதிப்பு இன்று மட்டுமானது அல்ல, அதிகார வர்க்கத்தின் கையில் நசுங்கிக்கொண்டிருக்கும் சக மனிதன் தப்பித்துக்கொள்ளும் வரை தொடரத்தான் போகிறது.
கதையின் நம்பகத்தன்மைக்கு அதன் மொழியும் சொல்லும் முறையும் முக்கியம். இக்கதை அதற்கு நன்றாகவே பொறுந்தியுள்ளது.
இன்னொரு முறை வாசிக்க வேண்டும். ஏனெனில் இக்கதை ஒற்றைக் காரணத்தை மட்டுமே கொண்டிருக்கவில்லை.
#தயாஜி
0 comments:
கருத்துரையிடுக