பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

கோப்பை தேநீருடன் ஓர் ஒப்பந்தம்
எச்சரிக்கைகள்

வேண்டுகோல்கள்

கேள்விகள்

விருப்பங்கள்

ஆசைகள்

எல்லாம் எதிரே கை கூப்புகின்றன
என் தியானத்தை நிறுத்த....

சாத்தியமற்ற சக்திகளின் சேர்ப்பு
அவை...

கையோடு சேர்க்கிறேன்
காதோடு கேட்கிறேன்

நுகர்கையில் சாசித்துவாரம் நமநமக்கிறது

இல்லாத குளிரைக் கொணர்ந்து
இருக்கையோடு நிறுத்தி

கால்மேல் காலாய்
ஆணவம் காட்டி

இதழ் சூட்டில்
கேலி செய்வது

எத்தனையெத்தனை இன்பம்...

கோப்பைக்குள் இருப்பது தேநீரல்ல;
எனக்கான வெற்றிட நிரப்பி....

நிரம்பி வழியும்
என் வெற்றிடப் பொழுதுகளை

பழுதுகளாக்கும்
கோப்பைகள் அவை....

இருந்த நொடியிலேயே
மத இட தேவை இன்றி

நான் தியானிக்கிறேன்

இளஞ்சூட்டு கோப்பை தேநீரில்

முதல் சுட்டை உதடு
உணரும் முன்
உள்ளம் என்னை தயாராக்குகிறது.....

இதழ் சூட்டுக்குப் பின்
சில நொடிகள்
கண்மூடுவது

தூக்கப் பற்றாகுறை அல்ல.....

மரணிக்கும் என் வெற்றிடங்களுக்கு
மரியாதை நிமித்த
மௌன அஞ்சலி......

சூட்டின் ஆவியல்ல
கவனியுங்கள்

ஆன்ம சுத்திகரிப்பின்
அடையாள குறிப்பு...
எச்சரிக்கைகள்

வேண்டுகோல்கள்

கேள்விகள்

விருப்பங்கள்

ஆசைகள்

எல்லாம் எதிரே கை கூப்புகின்றன

கோப்பை தேநீர்
பித்தம் சேர்க்குமாம்....

அக்கரை; என்ற புரியாமை

கோப்பை தேநீர் தியானம்
கைகூடாத வரையில்

கடவுள்கள்கூட உங்களை நெருங்குவதில்லை

கோப்பை சூட்டுக்கே இடம் கொடுக்கா
மனிதர்கள் நீங்களாயுற்றே.....

Popular Posts

Blogger templates

Categories

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்