பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 23, 2010

சுஜாதா என் மானசிக ஆசான்..


(மலேசிய நண்பன் நாளிதழில் 23.11.2010-ல் வெளிவந்த செய்திப்படம் இது)
"அப்படி இப்படின்னு விளம்பரம் செய்தாச்சி; இதுதான் படம்னும் புகழ்ந்தாச்சி; இதுவும் படமா..? (கெ)கேட்டாச்சி.... இப்போ ஏன் இந்தப் பதிவு.... அதன் பதிலுக்கு தொடர்ந்து சில நிமிடங்களில் படித்துத்துத்தெரிந்துக் கொள்ளுங்கள்; உங்கள் கருத்தினையும் பதியுங்கள்"


1.எந்திரன் படத்தில் எழுத்துகள் வரும்போது; கதை,திரைக்கதை, கடைசி சண்டைக் காட்சி ஷங்கர் என இருந்தது.


2.வசனம் எழுதியவர்கள் சுஜாதா, கார்க்கி, ஷங்கர் என இருந்தது.3. இது ஷங்கரின் பத்து ஆண்டுகால கனவுன்னு ஷங்கரே சொன்னாரு எப்போ சுஜாதா இறந்தப் பிறகு.


சுஜாதாவின் படைப்புகளை வாசித்தவர்களுக்கு அப்பட்டமாகத் தெரியும் இது சுஜாதாவின் கதை என்று; ஷங்கருக்கும் தெரியாமலில்லை. ஆனால் சுஜாதா உயிரோடு இல்லாதா ஒரே காரணத்துக்காக நடந்த "உழைப்புத் திருட்டு" என்ன தெரியுமா இது தனது 10 ஆண்டுகால கனவு என ஷங்கர் சொன்னதுதான்.


சுஜாதாவின்; சொர்க்கத்தீவு, பேசும் பொம்மைகள், மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா, போன்ற நாவல்களையும் ,விஞ்ஞானக்கதைகள் (50 சிறுகதைகள் தொகுப்பு) ஆகிய புத்தகங்களைப் படித்தவர்களுக்கு தெரியும் எந்திரன் கதை யாருடைய உழைப்பு என்று.....

ஷங்கர் படம் எடுக்கும் முன்னரே விஞ்ஞானக் கதைகள் சொல்லி வாசகர்களை ஈர்த்தவர்தான் சுஜாதா.

படம் வெளிவந்த நாளிலிருந்து இது என் கதை....! இது என் கதை ... என் கனவு... என மார்தட்டி சுஜாதாவை வெறும் வசனகர்த்தாவாகவே சித்தரித்த பிரம்மாண்ட இயக்குனர் சங்கருக்கு வந்த நெருக்கடி என்ன தெரியுமே...?அமேரிக்க எழுத்தாளர் ஒருவர் இது தன் கதை என்றார். தமிழகத்தில் இரண்டு எழுத்தாளர்கள் இது தங்களின் கதை, என்று எந்திரன் படத்தின் தயாரிப்பாளர்க்கும் இயக்குனருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த எழுத்தாளர்களில் ஒருவர் 'அர்னிகா நாசர்' அவரின் படைப்புக்கும் வாசகன் நான். சுஜாதாவால் விஞ்ஞானக்க் கதை எழுத்தாளர் என அர்னிகா நாசர் ஒரு முறை குறிப்பிடப்பட்டிருக்கின்றார்.


நேற்று வரை தன் கதை என்றவர் சம்மன் வந்தப்பின் இது சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா' நாவலின் மையமாக வைத்து எழுதப்பட்டக் கதை என பல்டி அடித்திருப்பது சிரிப்பு வருகின்றது. மூலக்கதை சுஜாதாவின் புத்தகம் என தெரிந்தது எப்போது தனக்கு சம்மன் (ஆப்பு அல்லது ஆபத்து) வரும்போதுதானே...


சுஜாதாவின் கடைசி எழுத்து இந்த எந்திரன் படத்தின் திரைக்கதை என்பது எல்லோர்க்கும் தெரிந்ததே. ஷங்கரே சுஜாதாவின் மறைவில் சொன்னது என்னத் தெரியுமா...


"சுஜாதா இந்த திரைக்கதையை முடித்து கொடுத்துச் சொன்னார் இதுதானனென் கடைசி படமாக இருந்தாலும் நிம்மதி"


இப்படியெல்லாம் சுஜாதாவின் மறைவில் சொல்லி; எந்திரன் படத்தில் சுஜாதாவை பத்தோடு பதினொன்றாக காட்டியுள்ளது நியாயமா...?ஒருவெளை சம்மான் வராமல் இருந்திருந்தால் சங்கர் தன் திருவாய் திறந்து இப்படி சொல்லியிருப்பாரா என்பது கேள்விக்குறியே....பிரம்மாண்ட இயக்குனர் மீது எனக்கு ஒன்றும் கோவம் கிடையாது.


தன் சுயநத்திற்கு சுஜாதாவை மறந்ததுதான் என்னால்

(எல்லா சுஜாதாவின் வாசகர்களால்)

ஏற்றுக்கொள்ள முடியவில்லை... இதை நான் பதியவில்லையென்றால் சுஜாதாவை என் மானசீக ஆசான் எனச் சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை....

2 comments:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

ஏற்றுக் கொள்ள கூடிய கருத்து நண்பரே. என் உயிர் எந்திரா மற்றும் மீண்டும் ஜூனோவின் அப்பட்ட காப்பி தான் இது. அதில் நாய்க்குட்டிக்கு பதில் மனித ரூப ரோபோ. அவர் 10 ஆண்டு முயற்சி என சொன்னதில் உண்மை இருக்கலாம். அக்கதையை 1995-ஆம் ஆண்டு தொடக்கம் படமாக்க திட்டமிட்டிருந்தார். புதிதாக சிந்தித்தார் என்பது நம்பகதன்மையற்றது.

தயாஜி சொன்னது…

சங்கர் 1995 ஆண்டு படமாக்கத்திட்டம் போட்டார்தான், ஆனால் நண்பரே சுஜாதாவின் மீண்டும் ஜீனோ 1985திலும் , என் இனிய இயந்திரா அதற்கு முன்னும் எழுதப்பட்டது....நண்பரே :)

பதிவுக்கு நன்றி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்